கேரள முதல்வரை சந்தித்த சிவகாரத்திகேயன்.. இதுதான் காரணமாம்!!
நடிகர் சிவகார்த்திகேயன் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை அவரது வீட்டில் சந்தித்துள்ளார்.
சிவகார்த்திகேயம் படத்தில் வெளிவந்த அமரன் படம் பிரமாண்ட வெற்றியை பெற்றது. அதில் முகுந்தன் என்ற மறைந்த ராணுவ வீரராக நடித்து அசத்தினார். உணர்வுப்பூர்வமான நடிப்பினால் அமரனின் சிவகார்த்திகேயனை அனைவரும் கொண்டாடினர். அமரனின் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் மதராஸி மற்றும் பராசக்தி படங்களில் நடித்து வருகிறார்.
மதராஸி படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைக்கிறார். சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டது.
மக்களிடம் இந்த வீடியோ பெரும் அளவு வரவேற்பை பெற்றது. ஆக்சன் கலந்த கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. திரைப்படம் ஒரு அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இப்படம் செப்டம்பர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் 'பராசக்தி' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் மற்றும் பாசில் ஜோசப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: 4 மாதத்தில் SK தரிசனம்..! ஏ.ஆர் முருகதாஸ் கொடுத்த "மதராஸி" படத்தின் மாஸ் அப்டேட்..!
இந்தி திணிப்பை மையமாக கொண்டு உருவாகி வரும், இதில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவனாக நடிக்கிறார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையில் வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். இதனிடையே சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை அவரது வீட்டில் சந்தித்துள்ளார். மேலும் கண்ணூரில் நடைபெற்ற கலாச்சார விழாவில் கேரள முதல்வருடன் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார்.
இந்த சந்திப்பு குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கண்ணூர், பினராயில் நடைபெற்ற பினராயிபெருமா கலை மற்றும் கலாச்சார விழாவில் அழைப்பின் பேரில் கலந்து கொண்டது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது.
கேரளாவின் முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்கள், பொதுப்பணித்துறை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் முஹம்மது ரியாஸ், சபாநாயகர் ஷம்சீர், அன்புக்குரிய ஆசிப் அலி, மற்றும் பத்திரிகையாளர் 'தி இந்து' ராம் அவர்களுடன் மேடையைப் பகிர்ந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. கேரள மக்களின் அன்பும், அரவணைப்பும் என்னை மிகவும் நெகிழ்ச்சியடையச் செய்தது. இந்த மறக்க முடியாத நினைவுக்களுக்கு மிக்க நன்றி எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நடிகர் சூரிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த எஸ்.கே..! கட்டி அனைத்து அன்பை பகிர்ந்த சூரி..!