பயந்தா நாங்க பொறுப்பில்ல.. கும்பமேளாவில் திகிலூட்டும் திரில்லர் டீசர்..! மச்சக்காரி தமன்னாவ மந்திரவாதி ஆக்கிட்டியே டேரக்டரு..!
தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படத்தின் டீசர் கும்பமேளாவில் வெளியிடப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது.
பாலிவுட் மற்றும் கோலிவுட் மார்க்கெட்டில் தமன்னா பெயர் ஒலிக்காத நாளே இல்லை. அந்த அளவுக்கு தமன்னா கால் ஷீட் கொடுக்க கூட நேரமில்லாமல் படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார். சிறிது காலம் தமிழ் சினிமாவில் காணாமல் போன தமன்னா திடீரென ஜெயிலரில் "காவாலையா" பாடலில் நடனம் ஆடி மீண்டும் ட்ரெண்ட் ஆனார். இதுவரை ஹீரோக்களுடன் காதல் காட்சிகளில் மட்டுமே நடித்த தமன்னா, முதல் முறையாக இரண்டு குழந்தைகளுக்கு தாயாக அரண்மனை 4ல் நடித்து அனைவரது பாராட்டையும் பெற்றார்.
ஆரம்பத்தில், 2005 ஆம் வருடம் இந்தியில் வெளியான "இல் சந்த் சா ரோஷன் செஹ்ரா" என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அதே ஆண்டு "ஸ்ரீ" என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார், அதைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு "கேடி" என்ற தமிழ் படத்தில் இங்கு அறிமுகமானார் தமன்னா பாட்டியா. இதனை தொடர்ந்து சிறுத்தை, பையா, சுறா, படிக்காதவன், தில்லாலங்கடி, தோழா போன்ற படங்களில் நடித்து தனது பெயரை மக்கள் மனதில் பதிய வைத்தார். இப்படி இருக்க நடிகர் கார்த்திக் மற்றும் தமன்னா பாட்டியா இருவரது கெமிஸ்ட்ரி படத்தில் ஒத்து போக, இதனை பார்த்த ரசிகர்கள் இருவரும் காதலிப்பதாக கூற, தமன்னா தற்பொழுது கெரியர்தான் முக்கியம் என கூறி அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இதையும் படிங்க: அப்ப நடிகை.. இப்ப டைரக்டர்...! கவர்ச்சி நடிகையின் கவர வைக்கும் திரைப்படம்...! சும்மா அதிருதுல்ல..!!
இந்த நிலையில், இதுவரை முத்த காட்சிகள் மற்றும் மிகுந்த ரொமன்ஸ் காட்சிகளில் நடிக்காத தமன்னா,"ஜீ கர்டா" என்ற ஓடிடி தொடரில் குறைந்த அளவிலான ஆபாச காட்சிகளில் நடித்து இருந்தார். இதனால் ரசிகர்களின் வசை சொல்லுக்கு ஆளான தமன்னா, அடுத்தடுத்த படங்களின் கதாபாத்திர தேர்வினால் தனது ரசிகர்களை காத்து கொண்டார்.
இப்படி நடிப்பு திறமையின் மொத்த உருவமாக இருக்கும் தமன்னா பாட்டியாவின் அடுத்த திரைப்படத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பார்க்கவே பக்தி மையமாகவும், மந்திரவாதிக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கும் மரணத்தை கண்களுக்கு முன்பாக காட்டும் அளவிற்கான தோற்றத்தில் வெளியாகியுள்ளது தமன்னாவின் ஒடெலா 2 போஸ்டர்.
சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் தயாரிப்பில் அசோக் தேஜா இயக்கியத்தில் அஜனீஷ் லோக்நாத் இசையமைப்பில் 2022ல் வெளியான ஒடேலா ரயில் நிலையத்தின் தொடர்ச்சி கதை தான் "ஒடெலா 2". ஒடேலா மல்லண்ண சுவாமி தனது கிராமத்தை தீய சக்திகளிடமிருந்து எவ்வாறு பாதுகாக்கிறார் என்பதை சித்தரிக்க கூடிய இப்படத்தின் படப்பிடிப்பு 2024 மார்ச் அன்று வாரணாசியில் தொடங்கிய நிலையில் தற்பொழுது படப்பிடிப்பு முடிந்து எடிட்டிங் வேலைகளும் முடிக்கப்பட்டு வெளியீட்டுக்காக காத்திருக்கிறது. இந்த நிலையில் வருகின்ற பிப்ரவரி 22ம் தேதி கும்பமேளாவில் வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. கும்பமேளாவில் வெளியிடுவதால் படத்தில் ஆன்மிகம் சற்று தூக்கலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இப்படத்தில் யுவா, நாக மகேஷ், வம்சி, ககன் விஹாரி, சுரேந்தர் ரெட்டி, பூபால் மற்றும் பூஜா ரெட்டி ஆகியோருடன் தமன்னா பாட்டியா, ஹெபா பட்டேல், வசிஷ்ட என். சிம்ஹா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்து உள்ளனர்.
இதையும் படிங்க: சிவகார்த்திகேயனை சைட் அடித்த ஆர்த்தி... க்யூட் லுக்கில் சிவாவுக்கு வலைவீச்சு...!