இது என்ன பூஜை... வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை ரட்சிதா!!
தனது சமீபத்திய பதிவு குறித்து பரவி வந்த வதந்திக்கு நடிகை ரட்சிதா மகாலட்சுமி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
சரவணன் மீனாட்சி என்ற தொடரில் நடித்து மக்களை கவர்ந்தவர் ரட்சிதா மகாலட்சுமி. அதற்கு முன்பு சன் டிவியில் இளவரசி, விஜய் டிவியில் பிரிவோம் சந்திப்போம் போன்ற பல சீரியல்களில் நடித்திருக்கிறார். பின்னர் கலர்ஸ் தமிழ், ஜீ தமிழ் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார். ரட்சிதா சீரியல் நடிகரான தினேஷ் கார்த்திக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் விஜய் டிவியில் பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியலில் ஒன்றாக நடிக்கும் போது காதலித்தனர்.
பிறகு சில வருடங்களிலேயே திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு ரட்சிதா தொடர்ந்து சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தார். அதுபோல தினேஷும் நடித்துக் கொண்டிருந்தார். ஆனால் இவர்கள் இருவருக்கும் சில கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் தான் இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். எப்படியாவது டைட்டில் வெற்றி பெற்று ரச்சிதாவின் மனதை மாற்றி மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் என்று பல இடங்களில் தினேஷ் சொல்லிக் கொண்டிருந்தார்.
இதையும் படிங்க: ஊரே எதிர்த்த படம் செம ஹிட்டு.. ஹீரோக்கு தங்க செயினை பரிசாக கொடுத்த ப்ரொடியூஸர்..!
ஆனால் ரச்சிதா தொடர்ச்சியாக தினேஷுக்கு எதிராகவே பதிவு வெளியிட்டுக் கொண்டிருந்தார். இப்போது இருவருக்கும் விவாகரத்து நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இவர், சமீபத்தில் தமிழில் ஃபயர் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் ரச்சிதா கிளாமராக நடித்தது பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பூஜை புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார்.
இதை கண்ட ரசிகர்கள் இது விரைவில் வெளியாக இருக்கும் சீரியலுக்கான பூஜை என்று தெரிவித்தனர். இந்த நிலையில் இதுகுறித்து ரட்சிதா விளக்கம் அளித்துள்ளார். அதில்,இன்று நான் வெளியிட்ட பூஜை பட புகைப்படங்கள் தமிழ் சினிமாவிற்கான புகைப்படங்கள் தான். இது சீரியலுக்கான புகைப்படங்கள் அல்ல. மீண்டும் சீரியலில் உங்களை சந்திப்பதாக இருந்தால் சந்தோஷம்தான். ஆனால் இந்த தவறான புரிதலுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க: Anjali Photos: 38 வயதிலும் மூச்சு முட்ட வைக்கும் கவர்ச்சி; கிக்கேற்றும் உடையில் அஞ்சலி நடத்திய போட்டோ ஷூட்!