போகி கொண்டாடிய நடிகை ரோஜா; தீயிட்டு குடும்பத்துடன் கும்மியடித்து கொண்டாட்டம்!
ஆந்திராவின் முன்னாள் அமைச்சரும், நடிகையுமான ரோஜா குடும்பத்துடன் போகி கொண்டாடினார்.
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் நகரியில் உள்ள முன்னாள் அமைச்சர் நடிகை ரோஜா தனது வீட்டில் இன்று அதிகாலை குடும்பத்துடன் போகி தீயிட்டு கும்மியடித்து கொண்டாடினார். இதில் பேசிய ரோஜா அனைவருக்கு போகி வாழ்த்துக்கள். இன்று எனது உறவினர் நண்பர்களுடன் போகி தீயிட்டு கொண்டாடினோம். இதுபோன்று கிராமத்திற்கு வந்து நம் பண்டிகைகள் குடும்பத்தினர் நண்பர்களுடன் கொண்டாடுவதன் மூலம் நம் அடுத்த தலைமுறைக்கு நமது சமுதாய கலாச்சாரங்களை தெரிந்து கொள்ளும் விதமாக இதனை கடைப்பிடித்து கொண்டாடி வருகிறோம்.
இதனால் பிள்ளைகளுக்கு உறவினர்கள் நண்பர்களுடன் பாசம்,அன்பை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு இருக்கும். எனவே நல்ல ஆரோக்கியமான சூழல் ஏற்படும் என்பதால் அனைவரும் உங்கள் கிராமத்திற்கு சென்று கொண்டாடுங்கள். மாநிலத்தில் மட்டும் மக்கள் கவலையில் உள்ளதை பார்க்கிறோம்.
இதையும் படிங்க: ஓவர் பந்தா உடம்புக்கு ஆகாது... விமர்சனத்தை சந்தித்த விழாவில் நயன்தாரா எடுத்த போட்டோஸ்!
ஜெகன்மோகன் ஆட்சியில் ஏழைகள், விவசாயிகள், பெண்கள் புதிய ஆடைகள் உடுத்து கொண்டாடி வந்தனர். ஆனால் கூட்டணி அரசு கொடுத்த உருவாக்குவதையை கூட நிறைவேற்றாமல் மக்கள் மீது மின் கட்டணம் உயர்வு, விவசாயிகளுக்கான முதலீட்டு நிதி தொகை வழங்காமல், அதிக. மழையால் இழந்த பயிருக்கு நஷ்ட ஈடு வழங்காமல், எந்த திட்டங்களையும் செயல்படுத்தாமல் வஞ்சித்துள்ளனர்.
விவசாயிகளின் முக்கிய பண்டிகை கருதுவது சங்கராந்தி பொங்கல் பண்டிகை ஆனால் இந்த ஆண்டு கிராமத்தில் எங்கு சென்றாலும் ஆந்திராவில் விவசாயிகள் வாழ்வில் மகிழ்ச்சி ஏற்றதாக அமைந்துள்ளது. இந்த 7 மாத கால ஆட்சியில் ஏற்பட்ட ஏழைகள் வாழ்வில் ஏற்பட்ட இருள் இந்த போகி தீயில் எரிந்து மீண்டும் ஒலி பிறக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
కుటుంబ సభ్యులతో కలిసి భోగి మంటలు వేసి.. భోగి శుభాకాంక్షలు తెలిపిన రోజా#RojaSelvamani #Roja #YSRCP #AndhraPradesh #Bhogi #Tupaki pic.twitter.com/fzd9knGPs7
— Tupaki (@tupaki_official) January 13, 2025
இதையும் படிங்க: கார் ரேஸிங்கில் வெற்றி வாகை சூடிய அஜித்தின் Unseen போட்டோஸ்!