குழந்தை பெற்ற பின்பும் குறையாத அழகு... குதூகலமாக போஸ் கொடுத்த ஸ்ரீதேவி விஜயகுமார்!
மூத்த நடிகர், விஜயகுமாரின் கடைசி மகளான ஸ்ரீதேவி விஜயகுமாரின் சமீபத்திய புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
பழம்பெரும் நடிகர் விஜயகுமார் மற்றும் அவருடைய இரண்டாவது மனைவியான நடிகை மஞ்சுளாவுக்கும் பிறந்த மூன்று மகள்களில் ஒருவர்தான் ஸ்ரீதேவி விஜயகுமார்.
மஞ்சுளாவுக்கு மூத்த மகளாக வனிதா பிறந்த நிலையில், அவரைத் தொடர்ந்து ப்ரீத்தா பிறந்தார். பின்னர் ஸ்ரீதேவி விஜயகுமார் மூன்றாவதாக பிறந்தார்.
இதையும் படிங்க: சாமுண்டீஸ்வரியால் கடுப்பாகும் ரேவதி? கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்!
விஜயகுமாருக்கு முத்து கண்ணு, மஞ்சுளா, என இரண்டு மனைவிகள் இருந்தாலும்... தன்னுடைய இரு மனைவி மற்றும் 6 பிள்ளைகளுடன் ஒரே வீட்டில் தான் வசித்து வந்தார்.
எந்த ஒரு பாகுபாடும் இன்றி, தன்னுடைய 6 குழந்தைகளையும் வளர்த்தார். விஜயகுமாரின் ஒரே மகனான அருண் விஜய் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளார்.
மேலும் இவருடைய மகள்கள் அனைவருமே திருமணம் ஆகி செட்டில் ஆகி விட்டனர். அனிதா விஜயகுமார் மட்டுமே, திரைத்துறையில் நடிக்காத நிலையில் கவிதா, வனிதா, பிரீத்தா, மற்றும் ஸ்ரீதேவி என அனைவருமே சினிமாவில் நடித்த பின்னரே திருமணம் செய்து கொண்டனர்.
தற்போது ஸ்ரீதேவி விஜயகுமார், திரைப்படங்களில் நடிக்க வில்லை என்றாலும், ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வருகிறார்.
அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக இருந்துரசிகர்களை வசீகரித்து வருகிறார். இந்நிலையில் இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
ஸ்ரீதேவி தன்னுடைய திருமண வயதை எட்டியதும், பெற்றோர் பார்த்து வாய்த்த மாப்பிள்ளை, ராகுல் என்பவரை கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இவருடைய கணவர் சென்னையில் தொழிலதிபராக உள்ளார். மேலும் ஸ்ரீதேவிக்கு ரூபிகா என்கிற மகள் ஒருவரும் உள்ள நிலையில், அவ்வப்போது தன்னுடைய மகளின் புகைப்படங்களையும் சமூக வலைதளத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
திருமணம் ஆகி குழந்தை பெற்ற பின்பும் கூட... இளமை பொங்கும் ஹீரோயின் லுக்கில், ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் இவரது புகைப்படங்களை ரசிகர்கள் பிரமித்து பார்த்து வருகிறார்கள்.
இதையும் படிங்க: கைது செய்யப்படும் வீரா.. சண்முகம் சதியை முறியடிக்க முறியடிப்பானா? அண்ணா சீரியல் அப்டேட் !