பிரபல நடிகை கமலா காமேஷுக்கு என்ன ஆச்சு?... மகள் உமா ரியாஸ் பரபரப்பு விளக்கம்!
பிரபல நடிகை கமலா காமேஷ் இறந்துவிட்டதாக காலை முதலே செய்தி பரவி வந்த நிலையில், அந்த வதந்திக்கு அவருடைய மகளான உமா ரியாஸ் கான் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
பிரபல நடிகை கமலா காமேஷ் இறந்துவிட்டதாக காலை முதலே செய்தி பரவி வந்த நிலையில், அந்த வதந்திக்கு அவருடைய மகளான உமா ரியாஸ் கான் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
“சம்சாரம் அது மின்சாரம்” படத்தில் கோதாவரி என்ற கதாபாத்திரம் மூலம் கலக்கிய பழம் பெரும் நடிகையான கமலா காமேஷ் உடல் நலக்குறைவால் சென்னையில் இறந்துவிட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இது வெறும் வதந்தி தான் என்றும், அம்மா உடல் நலத்துடன் இருக்கிறார் என்றும் அவருடைய மகளான உமா ரியாஸ் கான் தெளிவுபடுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக பேசிய அவரது மகள் உமா ரியாஸ், “தனது அம்ம இறக்கவில்லை. எனது கணவர் ரியாஸ் கானின் தாயார் ரஷீதா பானு, நீண்ட நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்” என விளக்கமளித்துள்ளார். இதன் மூலம், கமலா காமேஷ் இறக்கவில்லை என்பது, அவர் நலமுடன் இருக்கிறார் என்பதும் உறுதியாகியுள்ளது.
இதையும் படிங்க: 54 வயதிலும் அம்புட்டு அழகு... யங் ஹீரோயின்ஸை ஓரங்கட்டும் நடிகை குஷ்பு!
தமிழ், மலையாளம், கன்னட மொழி திரைப்படங்களில் அம்மா கேரக்டர், குணச்சித்திர கேரக்டர்களில் 500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருப்பவர் கமலா காமேஷ். இவர் சம்சாரம் அது மின்சாரம், கடலோர கவிதைகள், அலைகள் ஓய்வதில்லை உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்தார். இவர் கடந்த 1974 ஆம் ஆண்டு இசையமைப்பாளர் காமேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவரது மகளான உமா, பிரபல நடிகரான ரியாஸ் கானை திருமணம் கொண்டுள்ளார். பிரபல குணச்சித்திர நடிகையாக வலம் வரும் உமா ரியாஸ் கான், சினிமா, சீரியல், ரியாலிட்டி ஷோ, சோசியல் மீடியா இன்ஃபுளூயன்சிங், யூ-டியூப் என கலக்கி வருகிறார்.
இதையும் படிங்க: TVK விஜய்..அஜித் Car விபத்து ..வடிவேலு கொடுத்த ஷாக்கிங் பதில் ..!