×
 

ஓபிஎஸ் சொந்த ஊருக்கு விசிட் அடித்த ஆர்.பி. உதயகுமார் - அண்ணாமலை, உதயநிதிக்கு அடித்த ஷாக்...!

கெட் அவுட் ஸ்டாலின் விவகாரத்தில் திமுக, பாஜக நாடகமாடுவதாக அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மாணவர்களுக்கு கல்வி நிதி பெற்றுத்தர வழியில்லை, உதயநிதி ஸ்டாலினும் அண்ணாமலையும் குழாய் அடி சண்டையிட்டு கொண்டு இருக்கிறார்கள் என கடுமையாக விமர்சித்தார். 

கெட் அவுட் ஸ்டாலின் விவகாரத்தில் திமுக, பாஜக நாடகமாடுவதாக அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ் ஊருக்கு நேரடி விசிட்: 

ஓபிஎஸ் சொந்த ஊரில் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்கும் அதிமுக பொதுக்கூட்டம். நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் முன் ஏற்பாடுகள் குறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆய்வு நடத்தினார். 

இதையும் படிங்க: சிரிப்பு போலீஸ் மாதிரி அவரு சிரிப்பு அரசியல்வாதி.. யாரைக் கலாய்க்கிறார் ஓ. பன்னீர்செல்வம்..?

அதிமுக சார்பாக அக்கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் தேனியில் மார்ச் இரண்டாம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக பெரியகுளம் தாலுகாவிற்கு உட்பட்ட லெட்சுமிபுரம் அருகே உள்ள மதுராபுரி புறவழிச்சாலை பகுதியில் சுமார் 10 ஏக்கரில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

தேர்வு செய்யப்பட்ட இடத்தில் மேடை அமைப்பது இருக்கைகள் அமைப்பது, கோட்டை போன்ற நுழைவுவாயில் அமைக்க வேண்டும் என்பது குறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஆய்வு செய்தார். மேலும் நாளை  முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சியில் கே.பி.முனிசாமி, நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் ஓபிஎஸ் சொந்த ஊரில் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்ளும் அதிமுக மாநாடு முக்கியதுவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

திமுக, பாஜக மீது விமர்சனம்: 

இதனையடுத்து  மதுரை சென்ற அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்,   திருமங்கலம் அருகே அம்மாபட்டி கிராமத்தில் அதிமுக சார்பில் நடைபெற்ற துண்டு பிரசுரம் வழங்கும் பிரச்சாரக் கூட்டத்தில் அந்த தொகுதியின் எம்.எல்.ஏ. என்ற முறையில் பங்கேற்றார்.   

அப்போது பேசிய அவர், ஒன்றிய அரசு திசை திருப்பும் நோக்கில் தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி வழங்காமல்,  ஒரு தரப்பினர் கெட் அவுட் எனவும், மற்றொரு தரப்பினர் கெட் அவுட் எனவும் சொல்வதை விட்டுவிட்டு, தமிழ்நாட்டுக்கு தேவையான நிதி பெறுவதற்கு மக்கள் சக்தியை ஒன்று திரட்டி போராட வேண்டும் என பேசினார்.

தமிழ்நாட்டுக்கு இருக்கின்ற பிரச்சனைகளை திசை திருப்பும் வகையில் நாடகம் ஆடுவதை விட்டுவிட்டு,  மாணவர்களுக்கான கல்வி நிதி வழங்க ,  மக்கள் சக்தியை திரட்டி நம்முடைய உரிமையை மீட்க வேண்டும் என்றார். மாணவர்களுக்கு கல்வி நிதி பெற்றுத்தர வழியில்லை, உதயநிதி ஸ்டாலினும் அண்ணாமலையும் குழாய் அடி சண்டையிட்டு கொண்டு இருக்கிறார்கள் என கடுமையாக விமர்சித்தார். 

ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வம், ஆர்.பி.உதயக்குமார் இடையே ஊடகங்களில் வார்த்தைப் போர் முற்றி வரும் நிலையில், ஓபிஎஸின் சொந்த ஊருக்கே ஆர்.பி.உதயகுமார் விசிட் அடித்தது அதிமுகவில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. 

இதையும் படிங்க: எடப்பாடி ஓ.கே. சொன்னா அடுத்த நொடியே அதைச் செய்ய தயார்... ஓபிஎஸை எச்சரித்த ஆர்.பி. உதயக்குமார்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share