×
 

த்ரிஷாவுடன் ரொமான்ஸில் உருகும் அஜித்; 'விடாமுயற்சி' பட நியூ கிளிக்ஸ்!

நடிகர் அஜித் மற்றும் த்ரிஷாவின், ரொமான்டிக் புகைப்படங்களை தற்போது விடாமுயற்சி படக்குழு வெளியிட அவை வைரலாகி வருகிறது.

கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் தல அஜித்.
 

இவர் தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடமுயற்சி' திரைப்படத்தின் நடித்து முடித்துள்ளார்.

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது இந்த படத்தை வெளியிட உள்ளதாக படக்குழு முடிவு செய்தது.

ஆனால் படத்தை வெளியிடுவதில் ஏற்பட்ட சில பிரச்சனை காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: விடாமுயற்சி ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த விபத்து - மன்னிப்பு கேட்ட அஜித்; ஆரவ் பகிர்ந்த தகவல்!

இதை தொடர்ந்து ஒரு வழியாக, தற்போது இந்த படத்தின் ரிலீஸை பிப்ரவரி 6-ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

படத்தின் ரிலீசுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், ப்ரீ புக்கிங் வேகமாக நடந்து வருகிறது.

நேற்றைய தினம் இந்த படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டது படக்குழு.

தற்போது அஜித் மற்றும் த்ரிஷாவின் சில அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.

இதில் திரிஷா மீது அஜித் காதலில் உருகுகிறார். இந்த போட்டோஸ் தற்போது வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: ரெண்டு பேருமே இதுக்காகத் தான் பண்றாங்க... விஜய், அஜித்தை ஒரே வார்த்தையில் காலி செய்த பார்த்திபன்! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share