×
 

தலைக்குப்புற கவிழ்ந்த கார் ... மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித்குமார்...!

நடிகர் அஜித் குமார் மீண்டும் கார் விபத்தில் சிக்கியுள்ளது அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

கார் ரேஸில் பங்கேற்று வரும் நடிகர் அஜித்குமார் மீண்டும் கார் விபத்தில் சிக்கியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித்குமார். தற்சமயம் சினிமாவில் இருந்து சிறிது பிரேக் எடுத்து கார் ரேஸ்களில் பங்கேற்று வருகிறார் இதற்காக அஜித்குமார் கார் ரேசிங் என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ள அவர் தனது குழுவினருடன் சேர்ந்து போட்டிகளில் பங்கேற்று வருகிறார். 

சமீபத்தில் துபாயில் நடைபெற்ற கார் ரேஸில் பங்கேற்ற அஜித்குமாரின் அணி மூன்றாவது இடம் பிடித்து சாதனை படைத்தது.

இதையும் படிங்க: போர்ச்சுகலில் அதிகாலையில் பரபரப்பு… அஜித்குமார் சொன்ன அதிர்ச்சி தகவல்..!

போட்டிக்கு முன்னதாக பயிற்சியில் ஈடுபட்ட அஜித், விபத்தில் சிக்கினார். ஆனாலும் காயமின்றி உயிர் தப்பிய நிலையில், தற்போது ஸ்பெயினில் நடைபெற்ற கார் பந்தயத்தில், அஜித் கலந்துகொண்ட நிலையில், அவரது கார் விபத்தில் சிக்கியுள்ளது. ஸ்பெயின் நாட்டில் வலென்சியா பகுதியில் நடைபெற்ற கார் பந்தயத்தில், கலந்துகொண்ட அஜித், முன்னே சென்ற காரை முந்தி செல்ல முயன்றபோது மற்றொரு கார் குறுக்கே வந்து மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது.

துபாயில் கார் ரேஸுக்கு முன்னதாக அஜித்குமார் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, அவர் ஒட்டி சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து ரேசிங் மைதானத்தின் தடுப்பு சுவர்களின் மோதி விபத்துக்கு உள்ளானது. அந்த விபத்தின் போது சிறு காயங்கள் இன்றி அஜித்குமார் சிரித்துக் கொண்டே காரில் இருந்து வெளியே வந்து நிற்கும் வீடியோ வெளியாகி வைரல் ஆனது. இதனால் அஜித் ரசிகர்கள் சற்று நிம்மதிப் பெருமூச்சு விட்டிருந்த நிலையில், தற்போது ஸ்பெயினில் நடந்த கார் விபத்து தொடர்பான வீடியோவை சுரேஷ் சந்திரா தனது எக்ஸ தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், ரேசிங் பாதையில் புயல் வேகத்தில் அஜித் குமார் காரை ஓட்டிக் கொண்டிருக்கிறார். அப்போது முன்னால் சென்ற காரை முந்த முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்த அஜித்குமாரின் கார் இரண்டு முறை தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளான காட்சிகள் பெற்றுள்ளன.

இதையும் படிங்க: பாலாபிஷேகமே ஓவர்... பீர் அபிஷேகம் எல்லாம் அட்டூழியத்தின் உச்சம்... எல்லை மீறிய அஜித் ரசிகர்கள்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share