பாலிவுட் செல்வாரா அல்லு அர்ஜுன்? மும்பையில் ரகசிய சந்திப்பு!
அல்லு அர்ஜுன் மற்றும் சஞ்சய் லீலா பன்சாலி மும்பையில் சந்தித்தனர்.. ரசிகர்கள் உற்சாகம்
சமீபத்தில், புஷ்பா 2 அதிக வசூல் செய்த இரண்டாவது இந்திய படமாக மாறியது. புஷ்பா 2 படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு அல்லு அர்ஜுன் தற்போது பான் இந்தியா நடிகராக வலம் வருகிறார். அல்லு அர்ஜுன் படத்தின் அற்புதமான வட இந்திய வசூல் காரணமாக, இப்போது பல பாலிவுட் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் அவருடன் பணிபுரிய வரிசையில் உள்ளனர்.
இன்று அதிகாலை, அல்லு அர்ஜுன் ஹைதராபாத்தில் இருந்து மும்பைக்கு விமானத்தில் ஏறினார். அவர் இன்று மாலை, பிரபல திரைப்பட இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியின் அலுவலகத்திலிருந்து அவர் வெளியேறும் புகைப்படம் எடுக்கப்பட்டது.
இதையும் படிங்க: மறுபடியுமா? - அல்லு அர்ஜுனுக்கு அதிரடி கட்டுப்பாடு... மீண்டும் வீட்டிற்கே சென்ற காவல்துறை!
மும்பையில் இன்று மாலை பிரபல திரைப்பட இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியின் அலுவலகத்திலிருந்து அவர் வெளியேறும் புகைப்படம் எடுக்கப்பட்டது. அல்லு அர்ஜுன் மற்றும் சஞ்சய் லீலா பன்சாலி இருவரும் பல மாதங்களாக ஒரு படம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், இன்று இருவருக்கும் இடையே ஒரு முக்கிய சந்திப்பு நடந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சஞ்சய் லீலா பன்சாலி தற்போது ஆலியா பட், ரன்பீர் கபூர் மற்றும் விக்கி கௌஷல் ஆகியோருடன் லவ் அண்ட் வார் படத்தில் பணியாற்றி வருகிறார். அல்லு அர்ஜுன் புகழ்பெற்ற இயக்குனர் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸுடன் ஒரு படம் செய்யப் போவதாக கூறப்படுகிறது, இந்த ஆண்டின் பிற்பகுதியில் படப்பிடிப்பைத் தொடங்க திட்டமிட்டுள்ளது.
இதையும் படிங்க: அடங்காத சர்ச்சை... அடுத்தடுத்து வைக்கப்படும் குறி... அல்லு அர்ஜுன் செய்த தவறு என்ன..?