×
 

புஷ்பா படத்தைப் பார்த்து பசங்க பச்சை பச்சையா பேசுறாங்க..! கல்வி ஆணையத்திடம் புகார் அளித்த அரசு பள்ளி ஆசிரியை..!

புஷ்பா 2 திரைப்படத்தை பார்த்து மாணவர்கள் அவதூறாக பேசுவதாக ஆசிரியை ஒருவர் வேதனை தெரிவித்துள்ளார்.

சுமார் 1800 கோடி ரூபாய் வசூல் செய்து ஒரு பையை அல்ல ஒரு வீட்டையே நிரப்பி வைக்கும் அளவிற்கு லாபத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது புஷ்பா 2 திரைப்படம்.

புஷ்பா 2 திரைப்படம் வெளியான நாள் முதலே இன்று வரை தொடர் சர்ச்சைகளில் பெரிய அளவில் சிக்கி வருகிறது படம் ரிலீஸ் தேதி அன்று தேவையில்லாமல் கூட்ட நெரிசல்  ஏற்படுத்தியதால் பெண் ஒருவர் உயிரிழக்க நேரிட்டது.

இது அந்தப் படத்தின் கதாநாயகன் மற்றும் மறைமுக தயாரிப்பாளர் அல்லு அர்ஜுனாவின் தூக்கத்தை கெடுத்தது. பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். காவல் நிலையத்தில் வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட அல்லு அர்ஜுன் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகினார்,மேலும் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் நிதியும் அளித்தார்.

இதையும் படிங்க: சிவகார்த்திகேயனை பின்னுக்கு தள்ளும் ரவி மோகன்... கை வசம் இருக்கும் நிறைய படங்கள்..!

அந்த சர்ச்சை அத்தோடு முடிந்து விட்டது. அதனைத் தொடர்ந்து தெலுங்கானா முதல் அமைச்சர் ரேவந்த் ரெட்டி, அல்லு அர்ஜுனை ஒரு வழி செய்து விட்டார் என்றே சொல்லலாம். இந்தப் பிரச்சனை ஓய்ந்து சில நாட்களுக்குள்ளாக மற்றொரு பிரச்சனை அல்லு அர்ஜுன் மற்றும் புஷ்பா படக்குழுவினருக்கு ஏற்பட்டுள்ளது.

தெலுங்கானா அரசு பள்ளி ஆசிரியை ஒருவர் கல்வி ஆணையத்தின் கலந்துரையாடலின்போது புஷ்பா படத்தை பற்றி பெரிய அளவில் புகார் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புஷ்பா படத்தால் பள்ளி மாணவர்கள் பெரிய அளவில் கெட்டுப் போய் உள்ளனர் என அந்த ஆசிரியர் வேதனை தெரிவித்துள்ளார் ஏற்றுக்கொள்ள முடியாத ஹேர் ஸ்டைலை வைத்துக் கொண்டு ஆபாசமான முறையில் மாணவர்கள் பேசுகின்றனர் கேட்டால் இது புஷ்பா ஸ்டைல் என்று சொல்கிறார்கள். இதெல்லாம் பார்க்கையில் தான் தோற்பது போல் உள்ளது என அந்த ஆசிரியர் வேதனை தெரிவித்துள்ளார்,நான் பணி செய்யும் பள்ளிகளில் ஒரு திரைப்படத்தை பார்த்து எவ்வளவு மாணவர்கள் கெட்டுப் போய் உள்ளனர் என்பதை  என்னால் பார்க்க முடிகிறது, அந்தப் படத்திற்கு எந்த ஒரு பொறுப்பும் இன்றி சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது என அந்த ஆசிரியை புகார் கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி அளவுக்கு அதிகமான ஆபாசம் புஷ்பா படத்தில் தணிக்கை செய்யாமல் வெளியிடப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

இதையும் படிங்க: மன்னிப்பு கேட்டு ரசிகர்களை கண்கலங்க வைத்த டிராகன் இயக்குநர்.. நீங்க இப்படி செஞ்சிருக்க கூடாது அஷ்வத்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share