சண்முகம், சௌந்தரபாண்டி இடையே உருவாகும் மோதல்! பரணி எடுத்த முடிவு - அண்ணா சீரியல் இன்றைய அப்டேட்!
Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த தொடரின் இன்றைய அப்டேட் குறித்து பார்க்கலாம்.
இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சௌந்தரபாண்டி பரணியை சென்னைக்கு அழைத்து சென்று அப்படியே அமெரிக்காவுக்கு அனுப்ப திட்டமிட்டு இருந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, பரணி சென்னை செல்லும் விஷயம் அறிந்து பாக்கியமும் சண்முகத்தின் குடும்பத்தாரும் சண்முகத்திடம் பரணியை சென்னைக்கு அழைத்து செல்ல சொல்கின்றனர். இதனால் இருவருக்கும் இடையேயான இடைவெளி குறையும் என எதிர்பார்க்கின்றனர்.
சண்முகமும் அதற்கு தயாராக சௌந்தரபாண்டி இங்கே வந்து விடுகிறார். பரணியை நான் தான் கூட்டிட்டு போவேன் என்று சொல்கிறார். பாக்கியம் நீங்க எதுக்கு போறீங்க? சண்முகம் போயிட்டு வரட்டும் என்று சொல்ல சௌந்திரபாண்டி அதெல்லாம் முடியாது, என் பொண்ணுடன் நான் தான் போவேன் என்று உறுதியாக சொல்கிறார்.
அவ என் பொண்டாட்டி, அவ கூட நீ எதுக்கு போகணும்? என்று சண்முகம் சௌந்தரபாண்டியிடம் சத்தம் போட இருவருக்கும் இடையே மோதல் உருவாகிறது. இதனால் கடுப்பாகும் பரணி என் கூட யாரும் வர வேண்டாம்.. எனக்கு சென்னைக்கு போக வழி தெரியும். நானே போகிறேன் என்று கிளம்பி செல்கிறாள்.
இதையும் படிங்க: சௌந்தரபாண்டியின் சதி.. சண்முகம் சமாளிக்கப்போவது எப்படி? அண்ணா சீரியல் எபிசோட் அப்டேட்!
இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
இதையும் படிங்க: சண்முகத்துக்கு காத்திருந்த டபுள் சந்தோஷம்.. முருகன் அருளால் நடந்தது என்ன? அண்ணா சீரியல் அப்டேட்!