×
 

ரத்னா கழட்டி வீசிய தாலியை... வீரா கழுத்தில் கட்ட முடிவு செய்த வெங்கடேஷ்! பரபரப்பான தருணத்துடன் 'அண்ணா' சீரியல் அப்டேட்!

ரத்னா தன்னை அவமானப்படுத்திவிட்டு சென்றதை நினைத்து வேதனையில் இருக்கும் வெங்கடேஷ் தற்போது ரத்னாவின் தங்கை வீராவை மனைவியாக்க துடிக்கும் நிலையில் இன்று என்ன நடக்கும் என்பதை பார்ப்போம்.

திங்கள் முதல் வெள்ளி வரை  ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் ரத்னா பஞ்சாயத்தில் வைத்து தனக்கு வெங்கடேஷிடம் இருந்து விடுதலை வேண்டும் என்று ரத்னம் கேட்ட நிலையில் இன்றைய எபிசோடில்.... பஞ்சாயத்தில் பேசும் ரத்னா, இவனோட எல்லாம் எந்த பொண்ணும் வாழ முடியாது என்று தனது தாலியை கழட்டி அவன் முகத்தில் வீசி எறிகிறாள், வெங்கடேஷ் அவமானப்பட்டு நிற்கிறான். 

சண்முகம் துணிச்சலாக தனது தங்கை எடுத்த முடிவை பாராட்டி அவளை தனது வீட்டிற்கு அழைத்து வருகின்றனர். மறுபக்கம் இசக்கி மற்றும் வீரா என இருவரும் கோவிலில் அக்காவுக்கு எப்படியும் நல்ல தீர்ப்பு தான் வந்திருக்கும் என்று கடவுளை வேண்டுகின்றனர். அக்காவுக்கு திருஷ்டி சுத்தி போட்டு வீட்டுக்குள் அழைத்து செல்ல வேண்டும். நல்ல வாழ்க்கை அமையனும் என பேசி கொள்கின்றனர்.

அடுத்து வெங்கடேஷின் அப்பா அம்மா அவ வேண்டாம்னு ஆரம்பத்தில் இருந்தே சொன்னோம்.. கேட்டியா? ஒரு பொம்பள அவளே நீ வேணான்னு போகும் போது உனக்கு ஒரு பொண்ணு கிடைக்காமலா போய்டும்.. வா நாங்க உனக்கு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறோம் என்று சொல்கின்றனர். 

இதையும் படிங்க: கூடும் பஞ்சாயத்து.. ரவுடிகளுடன் என்ட்ரி கொடுக்கும் வெங்கடேஷ் - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

மேலும் கோவிலுக்கு அழைத்து வந்து தலை மூழ்க சொல்கின்றனர். இதை பார்த்த இசக்கி மற்றும் வீரா என்ன எங்க அக்கா தாலியை கழட்டி மூஞ்சில் எறிந்தாளா என்று பேசி நக்கல் அடிக்க வெங்கடேஷ் மேலும் கடுப்பாகிறான். 

உங்க அக்கா தாலியை கழட்டி போட்டா என்ன நீ இன்னும் கல்யாணம் ஆகாமல் தானே இருக்க என்று வீரா கழுத்தில் தாலி கட்ட செல்ல இசக்கி அதிர்ச்சி அடைகிறாள். வெங்கடேஷை பிடித்து தள்ளி விடுகிறாள். ஆனால் அவன் வீரா கழுத்தில் தாலியை கட்ட அவளை துரத்தி செல்கிறான்.  இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பதை பொறுத்திருந்து பார்போம்.

இதையும் படிங்க: சௌந்தரபாண்டி செய்த சூழ்ச்சி.. சண்முகத்தை விரட்டி விட்ட பரணி - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share