×
 

ஏதே... சில்லித்தனமான வேலையா..? திமுக மறுப்பை சல்லி சல்லியாய் உடைத்த அண்ணாமலை..!

எஃப்ஐஆரை படிக்கும் போது ரத்தம் கொதிக்கிறது. அந்த குடும்பத்தையே நாசம் செய்துட்டீங்க. வீதிக்கு தனி மனிதனா வந்தா வேற மாதிரி இருக்கும்

பாலியல் குற்றவாளி ஞானசேகரன் தி.மு.க உறுப்பினரே இல்லை என அமைச்சர்களே மறுத்து வந்த நிலையில் அவர் தி.மு.க சைதை கிழக்கு பகுதி மாணவர் அணி துணை அமைப்பாளர் என்பது உறுதியாகியுள்ளது.

"அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் திமுகவைச் சேர்ந்தவர் என்பது சில்லித்தனமான வேலை. அவருக்கும், திமுகவுக்கும் சம்பந்தமில்லை." என்று அடித்துக் கூறினார் திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன்.

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ‘‘அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக 6 மணி நேரத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்டு விட்டது. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றவாளிகள் சட்டத்தின் முன் வைக்கப்பட்டு தண்டனை வழங்கப்படும்.

இதையும் படிங்க: மாணவிக்கு நேர்ந்த கொடூரம் ..கைதானவர் திமுகவை சேர்ந்தவரா?..அமைச்சர் விளக்கம்

கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரனுக்கும், திமுகவிற்கும் எந்த தொடர்பும் இல்லை. திமுகவைச் சேர்ந்தவர் என்பது போன்ற பொய்யான தகவல்கள் செய்திகளில் பரவி வருகிறது. ஞானசேகரன் திமுகவின் அடிப்படை உறுப்பினர் கூட இல்லை. வெறும் புகைப்படங்களை வைத்து அமைச்சர்களுடன் தொடர்புபடுத்துவது தவறானது. சிலர் திமுக மீது திட்டமிட்டு அவதூறு பரப்புகின்றனர். இந்த வழக்கில் உடனடி நடவடிக்கையை காவல்துறை எடுத்துள்ளது. வழக்கை மறைக்க வேண்டிய அவசியம் திமுக அரசுக்கு இல்லை’’ என்றார். இந்த அமைச்சர்கள் கூறிய ஸ்டேட்மெண்டை திமுக ஐடிவிங் வேகமாக சமூக வலைதளங்களின் பரப்பியது. 

இந்நிலையில், திமுக நிகழ்ச்சிகளில் ஞானசேகரன் பங்கேற்றதன் புகைப்படங்களை வெளியிட்டார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

‘‘கைது செய்யப்பட்ட பாலியல் குற்றவாளி திமுகவில் இருந்தவன் தான் - அண்ணாமலைஅண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் திமுகவை சேர்ந்தவர் தான். அதனால் தான் அவர் தைரியமாக தொடர்ந்து குற்றங்களை செய்திருக்கிறார்: எஃப்ஐஆர் லீக்கானது எப்படி..? கட்சி பொறுப்பில் இருப்பதால் மரியாதையாக பேசுறேன். எஃப்ஐஆரை படிக்கும் போது ரத்தம் கொதிக்கிறது. அந்த குடும்பத்தையே நாசம் செய்துட்டீங்க. வீதிக்கு தனி மனிதனா வந்தா வேற மாதிரி இருக்கும்’’என ஆவேசமானார் அண்ணாமலை.

‘‘கள்ளச்சாராய வியாபாரி கண்ணுக்குட்டியின் கதவு ஸ்டிக்கரிலும், வன்கொடுமை குற்றவாளி ஞானசேகரன் வண்டி நிறத்திலும் வாழ்கிறது திராவிடம்’’என வெளுத்து வாங்குகின்றன எதிர் கட்சி முகாம்.

‘‘ஞானசேகர் முகநூல் பக்கம் ஏன் அவசர அவசரமாக முடக்கப்பட்டது? ஞானசேகரன் வீட்டிற்கு சென்ற காவல்துறை ஞானசேகருக்கும் திமுகவிற்கும் உள்ள தொடர்பை அழித்தது ஏன்? 

கவர்னர் மாளிகை அருகே இருக்கும் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சிசிடிவிகள் எப்படி பழுதாகும்?  குற்றச் செயலில் ஈடுபட்ட கொடூரர்களில் ஒருவனை மட்டும் கைது செய்துவிட்டு மற்றவர்களின் விவரத்தை வெளியிடாமல் ரகசியம் கற்பது ஏன் ? யார் அந்த சார்?’’ என அடுக்கடுக்கான சந்தேகங்கள் கிளப்பப்பட்டு வருகின்றன.
 
பாதிக்கப்பட்ட மாணவியின் தோழியிடம் சனிக்கிழமையும், பாதிக்கப்பட்ட மாணவியிடம் திங்கட்கிழமையும் அத்துமீறி இருக்கிறார் ஞானசேகரன் என்கிற தகவலையும் போலீசார் வெளியிட்டுள்ளனர். உண்மையில் அதிர்ச்சியளிக்கும் தகவலாக இது உள்ளது. அண்ணாபல்கலைக்கழகத்தில் சிசிடிவி கேமரா வேலை செய்யவில்லை  என்பதும் இப்போது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.


 

இதையும் படிங்க: ஜனவரி 27முதல் சுற்றுப்பயணம்.. விஜய் ஆட்டம் பயங்கரமா இருக்கும் - நடிகர் தாடி பாலாஜி கொடுத்த அப்டேட்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share