அர்ஜுன் 2-ஆவது மகள் அஞ்சனாவுக்கு விரைவில் டும் டும் டும்.! மாப்பிள்ளை யார் தெரியுமா?
பிரபல நடிகர் அர்ஜுனின் 2-ஆவது மகளான அஞ்சனாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. இவர் காதலருடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
60 வயதை கடந்த பின்னரும், இளம் ஹீரோக்களுக்கே டஃப் கொடுக்கும் விதத்தில் கட்டு மஸ்தான உடல் கட்டோடு, வலம் வருபவர் ஆக்ஷன் கிங் அர்ஜுன்.
திரையுலகில் ஒரு நடிகராக மட்டும் இன்றி, இயக்குனர், தயாரிப்பாளராகவும் வெற்றி கண்டவர். இவரின் சொந்த ஊர் பெங்களூரு என்றாலும், இவர் தேர்வு செய்து நடித்த படங்கள் இவரை ஒரு தமிழ் நடிகராகவே பார்க்க வைத்தது.
இதையும் படிங்க: விஜே பிரியங்காவுக்கு நடந்த 2-ஆவது திருமணம்! மாப்பிள்ளைக்கு தான் கொஞ்சம் வயசு அதிகம்!
இதன் காரணமாக சென்னையிலேயே செட்டில் ஆனார். கன்னட படத்தில் தன்னுடன் நடித்த, நடிகை நிவேதிதா என்பவரை திருமணம் செய்து கொண்ட அர்ஜுனுக்கு ஐஸ்வர்யா - அஞ்சனா என்கிற இரண்டு மகள்களும் உள்ளனர்.
ஐஸ்வர்யா, பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் தம்பி ராமையாவின் மகன் உமாபாதியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். உமாபதி சில படங்களில் ஹீரோவாக நடித்துள்ளது மற்றும் இன்றி ராஜாகிளி என்கிற படத்தை இயக்கி உள்ளார்.
ஐஸ்வர்யாவுக்கு கடந்த ஆண்டு மிகவும் பிரமாண்டமாக திருமணம் நடந்து முடித்த நிலையில், தற்போது தன்னுடைய இரண்டாவது மகள் அஞ்சனாவுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளார் அர்ஜுன்.
அஞ்சனா கடந்த 13 வருடங்களாக ஒருவரை காதலித்து வந்த நிலையில், அவரை தன தற்போது திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளார்.
இவரின் காதலர் தன்னுடைய திருமண புரபோசலை வெளிநாட்டில் வைத்து கூறியுள்ள நிலையில், அஞ்சனாவும் சம்மதம் கூறியுள்ளார். இதை தொடர்ந்து கூடிய விரைவில் இவரது திருமண அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அர்ஜுனின் மூத்தமகள் நடிப்பு மற்றும் புரோடக்ஷன் சம்மந்தமான பணிகளை கவனித்து வரும் நிலையில், அர்ஜுனின் இரண்டாவது மகன் ஹேண்ட் பேக் செய்யும் நிறுவனம் ஒன்றை வெற்றிகரமாக நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Harish Kalyan: ஹரீஷ் கல்யாணின் HK15 பட இயக்குனர் யார் தெரியுமா? வெளியானது அறிவிப்பு!