×
 

பலித்தது பாக்கியத்தின் கனவு! இசக்கிக்கு ஆபத்தில் இருந்து மீள்வரா? அண்ணா சீரியல் அப்டேட் !

கடந்த வெள்ளிக்கிழமையை எபிசோடில் போலீஸ் வேலைக்கு சேர போன வீராவை வைஜெயந்தி சதி செய்து காக்க வைத்த நிலையில், இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது பாக்கியம் இசக்கி கீழே விழுந்து அடிபடுவது போல கனவு கண்டு அல்லது எழுந்த நிலையில் அதே சிந்தனையில் இருக்கிறாள். 

அதன் பிறகு தூங்கி எழுந்த சௌந்தரபாண்டி காபி போட்டு கொடுக்க சொல்ல பாக்கியம் காஃபி எல்லாம் ஒன்னும் கிடையாது நான் போய் இசக்கியை பாத்துட்டு வந்துடுறேன் என்று கிளம்ப சௌந்தர பாண்டி அவ அந்த வீட்டில் இருந்தா எப்படி நல்லா இருப்பா என ஏற்றி விடுகிறார். 

பாக்கியத்தின் மூலமாக இசக்கி இந்த வீட்டுக்கு வரவைத்து விட வேண்டும் என திட்டம் தீட்டுகிறார். பிறகு பாக்கியம் மற்றும் சிவபாலன் என இருவரும் கிளம்பி சண்முகம் வீட்டிற்கு வருகின்றனர். 

இதையும் படிங்க: ஒர்க் அவுட் ஆன சண்முகம் பிளான்.. அந்தர் பல்டி அடித்த வைஜெயந்தி! அண்ணா சீரியல் அப்டேட்!

இங்கே இசக்கி சேர் (chair) மீது ஏறி துணி காய போட வழுக்கி கீழே விழுந்து அடிபடுகிறது. இந்த சமயத்தில் வந்த பாக்கியம் மற்றும் சிவபாலன் இருவரும் இசக்கியை ஹாஸ்பிடலுக்கு அழைத்து செல்கின்றனர். தாய் அல்லது குழந்தை இரண்டில் ஒரு உயிரை தான் காப்பாற்ற முடியும் என்று டாக்டர் சொல்ல எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர்.  இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ZEE தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

இதையும் படிங்க: கைது செய்யப்படும் வீரா.. சண்முகம் சதியை முறியடிக்க முறியடிப்பானா? அண்ணா சீரியல் அப்டேட் !

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share