பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது.. எவ்ளோ பிரச்சனை தான் வரும்..? குமுறும் நடிகர்..!
கார் பார்க்கிங் விவகாரத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனியார் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகர் தர்ஷன். இந்த நிகழ்ச்சி 8 சீசன்களை கடந்து இருந்தாலும் மூன்றாவது சீசன்தான் பலருடைய பேவரட் ஆக உள்ளது. அந்த சீசனில் பங்கெடுத்த போட்டியாளர்களில் தர்ஷனும் மிக முக்கியமானவர்.
அவர் தற்போது சர்ச்சையில் சிக்கி உள்ளார். தர்ஷன் வீட்டின் முன்பு நீதிபதி ஒருவரின் மகன் காரை நிறுத்தி சென்றுள்ளார். அப்போது, தர்ஷன் காரை எடுக்க சொல்ல இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் நடந்து அடித்து கொண்டதாக கூறப்படுகிறது.தர்ஷன் அசிங்கமாக பேசியதாக நீதிபதி மகன் தரப்பும், டீயை மூஞ்சில் ஊற்றிவிட்டதாக தர்ஷன் தரப்பிலும் மாறி மாறி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இதையும் படிங்க: எல்லாமே திமுகவோட தப்பு தான்..! காவல்துறை பணியிட விவகாரத்தில் அண்ணாமலை ஆவேசம்..!
இந்த சம்பவத்தின் போது பேசிய தர்ஷன், நான் வழக்கம்போல ஜிம்மில் இருந்து வந்தேன். என் வீட்டு வாசலில் கார் நின்றதால், உள்ளே போக முடியவில்லை. யாருடைய கார் என்று விசாரித்தபோது, டீக்கடையில் இருந்தவர்கள் தங்களுடையது என்று சொன்னார்கள். அதன்பிறகு ஏற்பட்ட வாக்குவாதத்தில் சம்பவம் நடந்தது. என்னுடைய தம்பியை தாக்கும் போது நான் எப்படி சும்மா இருக்க முடியும். நடிகர்னா பெரிய இவன்னு கேட்கிறாங்க. எவ்வளவு பிரச்சனைகள் தான் வரும் என கண்ணீர் மல்க பேசி இருந்தார்.
நீதிபதியின் மகன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், இந்த கார் பார்க்கிங் தகராறில் தர்ஷன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நீதிபதியின் மகனை தாக்கிய புகாரில் தர்ஷன் மற்றும் லோகேஷை போலீசார் கைது செய்து பெண் வன்கொடுமை உள்ளிட்ட 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.மேலும், தர்ஷன் கொடுத்த புகாரின் அடிப்படையில் நீதிபதியின் மகன், மனைவி மற்றும் மாமியார் மீது 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: இன்ஸ்டா குயின்... அழகுப் பதுமை... கஞ்சாவுடன் பிடிபட்ட பெண் போலீஸ் அதிரடி நீக்கம்..!