×
 

எங்கள மட்டும் ஏன் அரெஸ்ட் பண்றீங்க..! போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் வாக்குவாதம்..!

கோவை காந்தி சிலை அருகே தெற்கு மாவட்ட பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரில் இரண்டாவது அமர்வு தொடங்கிய நிலையில் தமிழ்நாட்டுக்கு கல்விநிதி தொடர்பாக தமிழக எம்பிக்கள் கேள்விகளை முன்வைத்தனர். 

தமிழ்நாட்டிற்கு நிதி தராமல் பாஜக அரசு வஞ்சிக்கிறது என்று திமுக எம்பிக்கள் குற்றம் சாட்டினர். அதற்கு பதிலளித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தேசிய கல்வி கொள்கை மூலம் இந்தி திணிக்கப்படுகிறது என்று கூறிவரும் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள்,vநாகரிமற்றவர்கள், ஜனநாயக விரோதமானவர்கள் என்று சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்தார். மேலும் மொழிக் கொள்கையை இயக்காமல் தமிழக மாணவர்களை தமிழ்நாடு அரசு தான் வஞ்சித்து வருவதாகவும் பெரும் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இதையும் படிங்க: திமுகவின் இரட்டை வேடத்தை தோலுரித்த தர்மேந்திர பிரதான்.. உச்சகட்ட பதற்றத்தில் அறிவாலயம்.. வானதி சீனிவாசன் பொளேர்!

அவரது கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அவருடைய உருவ பொம்மை எரிக்கும் போராட்டத்தில் திமுகவினர் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், தர்மேந்திர பிரதான் உருவ பொம்மை எரிக்கப்பட்ட விவகாரத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

போராட்டம் நடத்த முற்பட்ட பாஜகவினரை கைது செய்ய முயன்ற போது போலீசாருக்கும் பாஜகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினரை கைது செய்யாமல் தங்களை மட்டும் கைது செய்வது ஏன் என பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அவர்களை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்ற போலீசார் காவல்துறை வாகனத்தில் அங்கிருந்த அழைத்துச் சென்றனர்.

இதையும் படிங்க: இனி அண்ணாமலையை இப்படி கூப்பிடுங்க... திமுக மேடையில் பங்கமாய் கலாய்த்த எஸ்.வி.சேகர்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share