ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி டைவர்ஸ் விவகாரம்... கலாய்த்து தள்ளிய ப்ளூசட்டை மாறன்!!
இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி விவகரத்து விவகாரம் குறித்த ப்ளூசட்டை மாறனின் கருத்து பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி ஆகிய இருவரும் கடந்த 2013 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் 11 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்கு பிறகு தன்னுடைய மனைவி சைந்தவியை பிரிவதாக மே 13 ஆம் தேதி அறிவித்தார். இது அவர்களின் ரசிகளுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. அதன்படி, இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இருந்தபோதிலும் இருவருக்கும் இடையே அதே அன்பும் மரியாதையும் அப்படியே நீடிக்கும் என அவர்கள் கூறியிருந்தனர்.
இதனிடையே ஜி.வி. பிரகாஷ் கான்சர்ட் ஒன்றில் அவரது குழுவுடன் சைந்தவியும் கலந்து கொண்டு பாடியிருந்தார். இது ரசிகர்களின் கண்களுக்கும் காதகளுக்கும் விருந்தாக அமைந்தது. மேலும் அவர்கள் இருவரும் சேர்ந்து பிறை தேடும் இரவிலே பாடலை ஒன்றாக ஒரே மேடையில் பாடி இருக்கும் வீடியோ வைரலானது. விவகாரத்து பெற்றவர்கள் அதன்பின் சந்திக்க யோசிக்கும் நிலையில் இவர்கள் தங்களது இசை வாழ்க்கையில் ஒன்றாக பயணிப்பது வியப்பை அளித்தது.
இதையும் படிங்க: ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி விவாகரத்துக் கோரி மனு.. மனமுவந்து பிரிவதாக நீதிமன்றத்தில் விளக்கம்..!
ஜி.வி.பிரகாஷும் - சைந்தவியும் விவாகரத்து கோரி மனுத் தாக்கல் செய்ய சென்னை குடும்ப நல நீதிமன்றத்துக்கு வந்தனர். பின்பு இவர்கள் மனு தாக்கல் செய்த நிலையில் சென்னை முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி செல்வ சுந்தரி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இருவரும் நேரில் ஆஜராகி மனமுவந்து பிரிவதாகத் தெரிவித்தனர். இதையடுத்து வழக்கு விசாரணையை நீதிபதி ஒத்தி வைத்தார். பின்பு இருவரும் ஒரே காரில் புறப்பட்டு சென்றனர்.
இவ்வாறு தமிழ் சினிமாவில் சினிமா பிரபலங்கள் விவகாரத்து பெறுவது அதிகரித்து வரும் நிலையில், இதனை கிண்டல் செய்து ப்ளூசட்டை மாறன் பதிவிட்டிருப்பது சினிமா வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுக்குறித்த அவரது பதிவில், இன்றைய காலத்தில் விவகாரத்து பெறுவது அதிகமாகிவிட்டது. மேலை நாடுகளில் Prenup என்ற வழிபாடு இந்தியாவில் வெகுவிரைவில் சட்டமாக்க வேண்டும். இல்லையெனில் கல்யாணம்னு சொன்னா தலை தெரிச்சு ஓடிடுவான் என கிண்டலாக பதிவிட்டுள்ளார். ஜி.வி.பிரகாஷ் - சைந்தவியும் இன்று நீதிமன்றத்தில் விவகாரத்து கேட்டு ஆஜரான நிலையில் அவர் இவ்வாறு பதிவிட்டிருப்பது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
இதையும் படிங்க: ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி விவாகரத்துக் கோரி மனு.. மனமுவந்து பிரிவதாக நீதிமன்றத்தில் விளக்கம்..!