ஆண் நண்பருடன் படுக்கையறையில் ஜாலி… தந்தையிடம் கையும் களவுமாக பிடிபட்ட ஜான்விகபூர்..!
கதவுக்கு பதிலாக ஜன்னலில் வழியாக கீழே குதிக்க வைத்து வெளியே அனுப்பி வைத்தேன். ஜன்னல் வழியே போனால் அப்பாவுக்கு தெரியாது என்று நினைத்தேன்.
போனி கபூர்-ஸ்ரீதேவியின் செல்லப்பிள்ளை ஜான்வி கபூர். ஆண் நண்பருடன் படுக்கையறையில் இருந்ததால், அவரை கையும் களவுமாக பிடித்த அவரது தந்தை தனக்கு தண்டனை கொடுத்ததை ஜான்வி கபூரே ஒப்புக்கொண்டுள்ளார்.
ஜான்வி கபூர் தனது படங்களைத் தவிர, அவரது தனிப்பட்ட வாழ்க்கையிலும் கிசுகிசு செய்திகளில் இடம்பிடித்து வருகிறார். சில நாட்களுக்கு முன் ஜான்வியின் ‘தேவரா’ படம் ரிலீசானது.அதில் அவரது நடிப்பும், நடனமும் மிகவும் ரசிக்கப்பட்டது.இப்போது ஜான்வி கபூர் நடிப்பில் வரவிருக்கும் 'பரம சுந்தரி' படத்தில் சித்தார்த் மல்ஹோத்ராவுடன் நடித்துள்ளார். போனி கபூர்- ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி தற்போது வெற்றிகரமான நடிகையாகிவிட்டார். ஆனால் சில காலத்திற்கு முன்பு, ஒரு திரைப்பட ப்ரமோஷன் விழாவில் ஜான்வி தனது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பாக ஒரு சம்பவத்தை பகிர்ந்து கொண்டது மிகவும் ஆச்சரியமாக இருந்தது.
ஜான்வி 'மிஸ்டர் அண்ட் மிஸஸ் மஹி' பட விழாவில் இந்தச் சம்பவத்தை கூறியுள்ளார். ஒருமுறை அவளது தந்தை, ஆண் நண்பருடன் படுக்கையறையில் இருந்தபோது ஜான்வியை கையும் களவுமாக பிடித்து தான் தண்டிக்கப்பட்டதை சொல்லி ஆச்சர்யப்படுத்தினார்.
இதையும் படிங்க: மயிலு பெத்த மகளா இது? ஹாலிவுட் ஹீரோயின் போல் மின்னும் ஜான்வி கபூர்!
“நாங்கள் எங்கள் பழைய வீட்டில் வசித்த காலம் இது. அப்போது ஒருமுறை என் ஆண் நண்பர் ஒருவரை என் வீட்டிற்கு அழைத்திருந்தேன். அப்போது வீட்டில் யாரும் இல்லை. இருவரும் படுக்கையறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். அந்த நேரத்தில் அப்பா வீட்டிற்கு வந்தார். எனக்கு என்ன செய்வது என்று ஒன்றும் புரியவில்லை.
கதவுக்கு பதிலாக ஜன்னலில் வழியாக கீழே குதிக்க வைத்து வெளியே அனுப்பி வைத்தேன். ஜன்னல் வழியே போனால் அப்பாவுக்கு தெரியாது என்று நினைத்தேன். ஆனால் அப்பா சிசிடிவி கேமராவில் எல்லாவற்றையும் பார்த்து விட்டார்.எனது முழு திட்டமும் தோல்வியடைந்தது. அப்பா இதற்காக என்னைத் தண்டித்தார். அதன்பிறகு வீட்டின் அனைத்து ஜன்னல்களிலும் கிரில்ஸ் வைத்து விட்டார்'' எனத் தெரிவித்தார்.
'தடக்' படத்தின் மூலம் தனது கேரியரைத் தொடங்கிய ஜான்வி கபூர், இதுவரை தனது குறுகிய திரைப்பயணத்தில் பல சிறந்த படங்களில் நடித்துள்ளார். விரைவில் வருண் தவானுடன் 'சன்னி சங்கரி கி துளசி குமாரி' படத்தில் நடிக்கவுள்ளார். ஜான்சிகபூர் ஷிகர் பஹாடியாவுடன் டேட்டிங் செய்து வருகிறார். ஆனால் இருவரும் இன்னும் தங்கள் உறவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இருப்பினும், இருவரும் அடிக்கடி ஒன்றாகக் காணப்படுவதுடன், விருந்துகளிலும் கலந்து கொண்டுவருகிறார்கள்.
இதையும் படிங்க: மகாராணியாய் மாறிய நிதி அகர்வால்; கண் கொட்டாமல் ரசிக்க வைக்கும் போட்டோஸ்!