×
 

ஓசியில குல்ஃபி ஐஸ் தரமாட்டியா? வடமாநில சிறுவனை தாக்கிய ரவுடிகள்.. பித்தளை மணியால் தலையில் தாக்கி அராஜகம்!

சென்னையில் 17 வயது வடமாநில சிறுவனிடம் ஓசியில் ஐஸ் கேட்டு தகராறு செய்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் சைக்கிளில் குல்ஃபி ஐஸ் விற்கும் வியாபாரம் செய்து வருகிறான். ஐஓசி பேருந்து நிலையம் அருகே சைக்கிளில் குல்ஃபி வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது அங்கு வந்த மூன்று பேர் சிறுவனிடம் பணம் கொடுக்காமல் குல்ஃபி ஐஸ் கேட்டுள்ளனர். அந்த சிறுவன் பணம் தராமல் குல்பி ஐஸ் கொடுக்க மாட்டேன் என கூறியுள்ளான். நான் முதலாளி இல்லை என்றும், முதலாளி இடத்தில் தான் கணக்கு கொடுக்க வேண்டும் எனவும் கெஞ்சி உள்ளான்.

இதைஎல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாத அந்த முரட்டு வாலிபர்கள், ஆத்திரமடைந்தனர். எங்களிடமே பணம் கேட்கிறாயா? என கேட்டு சிறுவனிடம் வம்பு வளர்த்துள்ளனர். குல்பி ஐஸ் விற்கும் சைக்கிளில் மாட்டியிருந்த பித்தளை மணியை எடுத்து அப்பாவி சிறுவனின் தலையில் தாக்கி அந்த வாலிபர்கள், சிறுவன் வைத்திருந்த பணத்தைப் பறித்து கொண்டு தப்பியோடினர். ரத்த காயங்களுடன் இருந்த அந்த சிறுவனை அருகில் இருந்தவர்கள் ஸ்டான்லி மருத்துவமனையில்  சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஆர்கே நகர் காவல் நிலையத்தில் சிறுவன் புகார் அளித்தான். புகாரின்பேரில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

இதையும் படிங்க: பெண் டாக்டரை மிரட்டி கார் பறிப்பு - துப்பாக்கி முனையில் பிரபல ரவுடி கைது

விசாரணையில் சிறுவனிடம் வம்பு வளர்த்தது தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்த ராஜேஷ், சூர்யா, சிவா என தெரியவந்தது. அவர்கள் மூவரும் ஆர்.கே நகர் காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளி என தெரியவந்தது.

மூன்று பேரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: வாயை பொத்தி பாலியல் தொல்லை.. இருட்டில் அலறிய பெண் போலீஸ்.! கொடூரன் அதிர்ச்சி செயல்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share