'மத்திய அரசு'-க்கு மாறிய மு.க.ஸ்டாலின்… ஒன்றிய அரசு அழைப்பு வீராப்பு என்னாச்சு..?
மத்திய அரசை ஒன்றிய அரசு என்றுதான் கூப்பிடுவோம் என உறுதி காட்டிய மு.க.ஸ்டாலிலின் இப்போது மத்திய அரசு என்று கூறிவருகிறாரே.. இதன் பின்னணி என்ன? அவரது வீராப்பு என்னவாயிற்று என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தி.மு.க ஆட்சிக்கு வந்தது முதல் மத்திய அரசை ஒன்றிய அரசு என்றே குறிப்பிட்டு பேசி வந்த நிலையில், இன்று சட்டப்பேரவையில் 3 முறை 'மத்திய அரசு' என்கிற வார்த்தையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயன்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து சட்டபேரவையில் 2021ல் பேசிய மு.க.ஸ்டாலின், ''ஒன்றிய அரசு என்று குறிப்பிடுவதை சிலர் சமூக குற்றம் என்று கூறிக்கொண்டு வருகிறார்கள். ஆனால் அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள ஒன்றியம் என்ற சொல்லையே நாங்கள் பயன்படுத்துகிறோம்.
ஒன்றியம் என்பது ஒரு தவறான வார்த்தை கிடையாது. அதேபோல் இதற்கு முன்பாக கலைஞர், அண்ணா பயன்படுத்தாத வார்த்தையை தற்போது தமிழக அரசு பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.
இதையும் படிங்க: #FairDelimitation தொகுதி மறுவரையறையில் மத்திய அரசின் உள்குத்து.. பாதிப்புகளை பட்டியல் போட்ட மு.க.ஸ்டாலின்..!
1957ம் ஆண்டு திமுக-வின் தேர்தல் அறிக்கையில் ஒன்றியம் என்ற வார்த்தையை தாங்கள் பயன்படுத்தி இருக்கிறோம். ஒன்றியம் என்ற வார்த்தையில் கூட்டாட்சி தத்துவம் அடங்கியிருப்பதால் மத்திய அரசை குறிப்பிட ஒன்றியம் என்ற சொல்லைத்தான் இனி பயன்படுத்துவோம்'' என்று திட்டவட்டமாக கூறினார்.
இந்நிலையில், இன்று சட்டப்பேரவையில் பேசியபோது மூன்று முறை 'மத்திய அரசு' என்று மு.க.ஸ்டாலின் பயன்படுத்தினார். அவர் பேசும்போது ''நம்மளுடைய எதிர்க்கட்சியின் துணைத்தலைவர், அதிகாரிகள் மூலமாக இந்த இரு மொழி கொள்கை குறித்து மத்திய அரசிடம் இருந்து கடிதம் வந்ததாகவும், இந்த கடிதத்திற்கு விளக்கம் தந்தபோது அதில் ஒரு தவறான கருத்தை நாடாளுமன்றத்திலே பதிவு செய்ய நிலையில் இருக்கக்கூடியதையும் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
தயவு செய்து எந்சந்தேகமும் பட வேண்டாம். அதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். எந்த காரணத்தைக் கொண்டும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றுதான் அவர்களுக்கு நாங்கள் விளக்கம் தந்திருக்கிறோம். இதே மாமன்றத்தில் நம்மையெல்லாம் ஆளாக்கிய ஒப்பற்ற தலைவர் பேரறிஞர் அண்ணா முதலமைச்சராக இருந்தபோது 23.1.1967 அன்று இரு மொழி தீர்மானம் கொண்டு வந்தார்.
மத்திய அரசின் இந்தி திணிப்பு திட்டத்தை இந்த மன்றம் ஏற்க மறுக்கிறது. மத்திய அரசு திட்டத்தை ஏற்க மறுக்கக்கூடிய வகையில், மாணவர்கள் எண்ணத்திற்கு மதிப்பளிக்க கூடிய வகையில், தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் என்று வழ்யில் தமிழ், ஆங்கிலம் ஆகிய கொள்கையே செயல்பாட்டில் இருக்கும். இது தமிழ்நாட்டுக்கு பேரறிஞர் அண்ணா அளித்த தீர்மானம்'' எனத் தெரிவித்துள்ளார். மத்திய அரசை ஒன்றிய அரசு என்றுதான் கூப்பிடுவோம் என உறுதி காட்டிய மு.க.ஸ்டாலிலின் இப்போது மத்திய அரசு என்று கூறிவருகிறாரே.. இதன் பின்னணி என்ன? அவரது வீராப்பு என்னவாயிற்று என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆரே மு.க.ஸ்டாலினிடம்தான் 'REVIEW' கேட்பார்- தங்கம் தென்னரசு தடாலடி..!