கர்ப்பமாக்கி ஏமாற்றிய காதலன் கொலை.. இருமல் மருந்தில் பூச்சிமருந்து கலந்து கொன்ற காதலி.. உள்ளாடைகளிலும் தெளித்து பழிவாங்கல்..!
சீனாவில் காதலிப்பதாக கூறி கர்ப்பமாக்கிவிட்டு ஏமாற்றிய காதலனுக்கு பூச்சிமருந்து கலந்த இருமல் மருந்தை கொடுத்து கொலை செய்த காதலிக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் சிச்சுவான் பகுதியை சேர்ந்தவர் ஷொவ் (Zhou). வயது 50. அதே பகுதியில் தங்கி ஜோசியம் பார்த்து பிழைப்பு நடத்தி வந்தார். கடந்த 2011ம் ஆண்டு அவரிடம் ஜிங்க் (jing) என்னும் 24 வயது இளம்பெண் ஜோசியம் பார்க்க வந்துள்ளார். தனது தாய் கேன்சர் நோயின் இறுதிகட்டத்தில் இருப்பதாகவும், அவரை காப்பாற்ற ஏதாவது பரிகாரம் இருந்தால் சொல்லுங்கள் எனவும் கேட்டுள்ளார். அவருக்கு பரிகாரங்கள் செய்வது போல ஜோசியர் ஷொவும் பழகி உள்ளார். கேன்சர் குணமாகாமல், ஜிங்கின் தாய் இறந்துவிட்டாலும், இவர்களது நட்பு காதலாக கசிந்துருகி தொடர்ந்து வந்தது. 50களில் இருந்த ஷொவ், இளம் பெண் ஜிங்குடன் பலமுறை உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.
எவ்வளவு காலம் தான் காதலித்துக் கொண்டே இருப்பது விரைவில் திருமணம் செய்து கொள்ளலாம் என ஜிங்க் கேட்க துவங்கி உள்ளார். ஆனால் ஷொவ் பிடி கொடுக்காமல், காலம் தாழ்த்தியே வந்துள்ளார். இப்படியே 6 ஆண்டுகள் உருண்டோடின. ஜிங்க்-கை கல்யாணம் செய்யாமலே சாக்கு சொல்லி தப்பித்துள்ளார் ஷொவ். 2017ல் தனது முன்னாள் மனைவி உடனான விவகாரத்தை ரத்து செய்து மீண்டும் இணைய விருப்பம் தெரிவித்து ஷொவ் விண்ணப்பித்தார். இதை அறிந்த ஜிங்க் கோபமடைந்தாள். தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி ஷொவுடன் சண்டை போட்டுள்ளாள். ஷொவை பழிவாங்கும் விதமாக குவோ (Guo) என்னும் இளைஞரோடு டேட்டிங்கில் ஈடுபட்டாள்.
இதையும் படிங்க: இந்தியாவுக்கு துரோகம்... உளவு பார்க்க மாலத்தீவுடன் சீனா போட்ட ஒப்பந்தம்..!
அதே சமயம் ஷோவுடனும் தொடர்பில் இருந்துள்ளாள் ஜிங்க். ஆனால் ஒரே மாதத்தில் அந்த டேட்டிங் முடிவுக்கு வந்தது. ஷொவுக்கும், ஜிங்கிற்கும் இடையே உள்ள தொடர்பு பற்றி தெரிந்துகொண்ட குவோ, அவளுடன் சண்டையிட்டு தன்னுடைய உறவை முறித்துக்கொண்டார். இதற்கிடையே 2017 ஏப்ரலில் தான் கர்ப்பமாக இருப்பதை ஜிங்க் தெரிந்துகொண்டாள். ஷொவை பலமுறை போனில் தொடர்பு கொண்டு தனது கர்ப்பத்திற்கு பொறுப்பேற்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால் கருவை கலைத்திடும் படி கூறிய ஷோவ், தனக்கு கேன்சர் இருப்பதாகவும், தன்னை திருமணம் செய்தால் சிரமப்பட வேண்டி இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். வேறு ஒருவனை நீ திருமணம் செய்து கொள் எனவும் கூறி கலட்டி விட முயற்சித்துள்ளான்.
மே 2017-ல் ஷொவ் தனக்கு கேன்சர் இருப்பதாக கூறியது பொய் என ஜிங்கிற்கு தெரியவந்தது. ஆத்திரமடைந்த ஜிங்க், ஷொவை பழிவாங்க திட்டம் தீட்டினாள். மாட்டிக்கொள்ளாமல் எப்படி கொலை செய்வது? சந்தேகம் வராத மரணங்கள் என பலவாறு ஆன்லைனில் தேடி உள்ளார் ஜிங்க்.
பராகுவாட் என்னும் பூச்சிக்கொல்லி பற்றி படித்த ஜிங்க், அதை தனது காதலன் ஷொவ் குடிக்கும் இருமல் மருந்தில் கலந்து கொடுத்துள்ளார். அதனுடன் ஷொவுக்காக புதிதாக உள்ளாடைகளும் வாங்கி, அதையும் அந்த பூச்சிக்கொல்லியில் ஊறவைத்து ஷொவுக்கு பரிசளித்துள்ளார். ஷொவ் புகைக்கும் சிகரெட்டிலும் பூச்சிக்கொல்லி கலந்து பரிசாக வழங்கி உள்ளாள். இதைபற்றியெல்லாம் அறியாமல் அந்த உள்ளாடையை அணிந்த ஷொவிற்கு அலர்ஜி ஏற்பட்டுள்ளது. இருமல் டானிக்கை குடித்த பிறகு, தொண்டையில் தொற்று ஏற்பட்டு விஷமாகி ஷொவ் இறந்துபோனான்.
முன்னதாகவே தனக்கு தானே ஜாதகம் பார்த்து வைத்திருந்த ஷொவ், 60 வயது வரை நான் உயிருடன் இருக்க மாட்டேன். 50களின் இறுதியில் நான் இறந்துவிடுவேன் என கணித்து கூறியுள்ளான். அதேபோலவே ஷொவ் இறந்துவிட கணித்ததை போல இறந்துவிட்டதாக நினைத்து அவனது உறவினர்கள் இறுதிசடங்கை நடத்தி உள்ளனர். அப்போது ஷொவின் மகள், ஜிங்க் கொடுத்த இருமல் டானிக்கில் ஆப்பிளை நனைத்து எலிக்கு வழங்கி விளையாடி இருக்கிறாள். ஆப்பிளை சாப்பிட்ட எலி இறந்துபோகவே, அதிர்ச்சி அடைந்த மகள், இதுகுறித்து போலிசில் தெரிவிக்க மெல்ல மெல்ல ஜிங்க் செய்த கொலை வெளிச்சத்திற்கு வந்தது.
இதுதொடர்பான வழக்கு ஷுன்கிங் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது. பல கருச்சிதைவுகளை ஏற்படுத்தியதற்கும், அவரது வாழ்க்கையை நாசமாக்கியதற்கும் பழிவாங்குவதற்காக, ஜிங் வேண்டுமென்றே ஷொவுக்கு விஷம் கொடுத்தது விசாரணையில் தெரிந்தது. இந்த வழக்கு 7 ஆண்டுகள் நடந்த நிலையில் கடந்த 2024ல் ஜிங்கிற்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து 2024 செப்டம்பரில் ஜிங்க் மேல்முறையீடு செய்தாள். ஜிங்கின் குடும்ப கஷ்டத்தை பயன்படுத்தி, ஷொவ் அவளை ஏமாற்றியதாகவும், அதனால் ஜிங்க் இவ்வாறு செய்துவிட்டதாகவும் வாதிட்டனர். ஆனால் முடிவில் நான்சோங் நீதிமன்றம் ஜிங்கின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதையும் படிங்க: இந்தியா - சீனாவுக்கு எதிராக அடித்துச் சொல்லி டிரம்ப் சத்தியப்பிரமாணம்… வரப்போகும் பேரிடி..!