×
 

ஐஸ்வர்யா ராய்க்கு ஆக்சிடண்டா...! அவருக்கே ஷாக் கொடுத்த இணையவாசிகள்..!

நடிகை ஐஸ்வர்யா ராய் விபத்தில் சிக்கி இருக்கிறார் என்ற செய்திகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. 

"காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை" இருந்தாலும் அவை அனைத்தும் ஒருவரை பார்த்து செயல்படும் என்றால் அவர்தான் நடிகை ஐஸ்வர்யா ராய். பார்க்க ஸ்லிம்மாக அழகுக்கே ஹாய் சொல்லும் அளவிற்கு இருக்கும் இவர் "கண்ணழகி" என்ற பட்டத்தை வென்றவர். அதுமட்டுமல்லாமல் சிரிப்பால் பலரை அடித்து, கண்களால் இளசுகளை முறைத்து, நடனத்தால் ரசிகர்களின் மனதை சிதைத்து, நடிப்பால் மனதை உடைத்து, இன்று தனக்கென ரசிகர் பட்டாளத்தை வைத்து இருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராய். 

குறிப்பாக இவர் நடிப்பில் "இந்த பூமியில எப்ப வந்து நீ பிறந்த" என பாட ஆரம்பித்து அவரது முகத்தின் அழகில் "உசுரே போகுது உசுரே போகுது உதட்டை நீ கொஞ்சம் சுழிகையில" என விக்ரம் வர்ணித்து பாடுவதை போல் அமைந்த "ராவணன்" படம் இன்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், சங்கரின் பிரமாண்ட படைப்பாக இன்றுவரை பேசப்படும் "எந்திரன்" திரைப்படத்தில் "இரும்பில் ஓர் இதயத்தை" முளைக்க வைத்து அதற்கே, காதல் வர வைத்திருப்பார் நடிகை ஐஸ்வர்யா ராய். குறிப்பாக இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் இவர் ஆடிய நடனங்கள் முதல் நடிப்பு வரை மிகவும் அழகாக இருக்கும். 

இதையும் படிங்க: "மூக்குத்தி அம்மன் 2" படத்தின் மீது விழுந்த திருஷ்டி..! ஒரே பதிவில் அனைத்தையும் தவிடுபொடியாகிய குஷ்பூ..!

இப்படி பட்ட ஐஸ்வர்யா ராய், பாலிவுட்டில் கலக்கி வந்தாலும், தமிழில் இவரை அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் மணிரத்தினம். அவரது படத்தில் நடித்து தமிழில் பிரபலமானார். அதற்காவே தற்பொழுது 'பொன்னியின் செல்வன்' படத்தில் மீண்டும் அவரது இயக்கத்தில் நடித்து தனது பெயரை மறுபடியும் மக்கள் மனதில் நிலைநிற்க செய்தார். இப்படி தமிழ் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் தனது நடிப்பை குறைத்து கொண்ட ஐஸ்வர்யா ராய் தற்பொழுது அதனை விட முக்கியமாக தனது குடும்ப வாழ்க்கையின் மீது அதிக ஆர்வமுடையவராக காணப்படுவதால் எந்த படங்களிலும் தற்பொழுது நடிப்பதில்லை. 

பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன் மற்றும் ஜெயா பச்சன் தம்பதியின் மகனான 'அபிஷேக் பச்சனை' திருமணம் செய்து கொண்டார் ஐஸ்வர்யா ராய். இவர்களது அன்பின் வெளிப்பாட்டில் மகளாக பிறந்தவர் 'ஆராத்யா'. இப்படி தனது கணவர் மற்றும் மகளுடன் சந்தோஷமாக நாட்களை கழித்து வரும் ஐஸ்வர்யா ராயை எப்பொழுதும் வதந்திகள் விட்ட பாடாய் இல்லை. உதாரணத்திற்கு, இவரது மகளை பற்றி சமீபத்தில் தவறான செய்திகள் வெளியாகின.

அதைத்தொடர்ந்து ஐஸ்வர்யா ராயும், அபிஷேக் பச்சனும் பிரிந்து விட்டதாகவும், விவகாரத்து பெற்றிருப்பதாகவும் வதந்திகள் பரவின. ஆனால், ஐஸ்வர்யா ராய் இதுகுறித்து எந்தவித ரியாக்சனும் காட்டவில்லை. பின்னர், வதந்திகள் அதிகமானதால் ஒருநாள் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் மற்றும் அவர்களது மகள் ஆராத்யாவின் புகைப்படங்களை பகிர்ந்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். 

இப்படி படங்களில் இருந்து விலகியே இருந்தாலும், அவரை பற்றி பேசும் நாவுகள் இந்திய சினிமா வட்டாரத்தில் குறையாமல் தான் இருக்கிறது. இப்படி இருக்க, மும்பை நகரின் முக்கிய வீதியில் தனது காரில் ஐஸ்வர்யா ராய் சென்று கொண்டிருந்த பொழுது, அவரது கார் பின் பகுதியில் பேருந்து மோதியதாக கூறி வீடியோ ஒன்று இணையத்தில் பகிரப்பட்டு வருவருகிறது.

மேலும் அந்த வீடியோவில், அவரது பாதுகாப்புக்கு வந்தவர்கள் அந்த இடத்தில் இருந்து ஐஸ்வர்யாவை மீட்டு சென்றதை போன்ற காட்சிகளும் இடம்பெற்று இருந்தது. இந்த நிலையில், இதனை முற்றிலுமாக ஐஸ்வர்யா ராய் தரப்பு மறுத்துள்ளது. அவர்கள் கூறுகையில், ஐஸ்வர்யா ராய்க்கு எந்த காயமும் ஏற்படவில்லை. அவர் வீட்டில் நலமுடன் இருக்கிறார். கார் விபத்து போன்ற பொய்யான செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த செய்தியை கேட்ட ரசிகர்கள் மீண்டும் குழம்பி போயிருக்கின்றனர். விபத்து நடந்தது உண்மையா இல்லையா, எதைத்தான் நம்புவது என நெட்டிசன்கள் தங்களது வேதனைகளை பகிர்ந்து வருகின்றனர்.

இதையும் படிங்க: பாடல் நிகழ்ச்சியில் தனது ஆசையை கூறிய பெண்..! சற்றும் தயங்காமல் ராகவா லாரன்ஸ் செய்த செயல்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share