ஐஸ்வர்யா ராஜேஷை சீண்டிய மாணவன்..! தன் பாணியில் பதிலடி கொடுத்து அசத்தல்...!
ஒரே கேள்வியால் தன்னை மடக்கிய மாணவனுக்கு பதிலடியால் வாய்பிளக்க வைத்திருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
பார்க்க கிராமத்து பெண் போலவும், திரையில் ஹாலிவுட் ஹீரோயின் போலவும் தோற்றமளிக்கும் சிறந்த குடும்பப்பாங்கான நடிகை தான் ஐஸ்வர்யா ராஜேஷ் . தமிழ் திரையுலகில் இவரது எண்ணற்ற படங்கள் பார்ப்போரை மகிழ்ச்சியடைய செய்தது. குறிப்பாக இவரது நடிப்பில் இன்றளவும் மக்களால் பெரிதும் பேசப்படும் படமாக பார்க்கப்படுவது இரண்டு படங்கள் ஒன்று "சொப்பன சுந்தரி" மற்றொன்று "தி க்ரேட் இண்டியன் கிட்சன்" ஆகிய இரண்டு படங்கள் இவரை பலருக்கும் பிடிக்க செய்தது.
'சொப்பன சுந்தரி' படத்தில் இவரது அண்ணன் வாங்கிய நகைக்கான குழுக்களில் பரிசாக காரை பெற்று இருப்பார் ஐஸ்வர்யா ராஜேஷ். பிறகு அந்த காரை எப்படியாவது வாங்க வேண்டும் என அண்ணனும், காரை மீட்க போராடும் ஐஷ்யர்யா ராஜேஷின் நடிப்பும் பிரமாதமாக இருக்கும். அதுமட்டுமல்லாமல், காரில் பிணம் இருப்பதாக அனைவரும் பயந்து கடைசியில் காரில் யாரும் இல்லாமல் இருப்பதை பார்த்து அனைவரும் நிம்மதி பெருமூச்சு விடும் படமாக இப்படம் அமைந்து ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்தது.
இதையும் படிங்க: பேண்ட் சொக்காவில் கிளாமர் நடிகை.. அப்ப கிராமத்து அழகி.. இப்ப மாடல் அழகி..!
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் பெண்களின் அடிமைத்தனத்தையும் அதில் இருந்து தைரியமாக பெண்கள் வெளிவரக்கூடிய வகையில் அமைந்த திரைப்படம் தான் "தி க்ரேட் இண்டியன் கிட்சன்" இப்படத்தில் ஒருவரை திருமணம் செய்யும் ஐஸ்வர்யா, வீட்டில் சமையல் செய்வது, துணி துவைப்பது, வீட்டை பராமரிப்பது, கணவனின் ஆசையை நிறைவேற்றுவது என தினமும் இதனை மட்டுமே வேலையாக வைத்திருப்பார். மாதவிடாய் காலத்தில் அவரை ஒதுக்கி வைத்து மனம் நோக செய்வர். பின் தனது மனக்குமுறலை இவர் இணையத்தில் பதிவிட்டதால் பெரிய பிரச்சனை ஏற்பட்டு பின் கோபத்தில் ஐஸ்வர்யா வீட்டை விட்டு வெளியே சென்று தன் தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதை காண்பித்த சிறந்த படமாக இப்படம் அமைந்தது .
இப்படி இன்று வெள்ளித்திரையில் கலக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ். தனது ஆரம்ப கால பயணத்தை தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "அசத்தப்போவது யாரு" என்ற பிரபல நிகழ்ச்சியில் தொகுப்பாளராக ஆரம்பித்தார். அதன் பின் மற்றொரு தொலைக்காட்சியில் "மானாட மயிலாட" நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். இப்படி தொலைக்காட்சிகளில் இவரது திறமையை பார்த்த இயக்குநர்கள் இவரை படத்தில் நடிக்க அழைத்தனர், அதில் 2010ம் ஆண்டு 'நீதானா அவன்" என்ற படத்தில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
இதனை தொடர்ந்து, அட்டகத்தி, புத்தகம், ரம்மி, பண்ணையாரும் பத்மினியும். கதை திரைக்கதை வசனம் இயக்கம்,திருடன் போலீஸ், காக்கா முட்டைஹலோ நான் பேய் பேசுறேன். ஜெமினிகணேசனும் சுருளிராஜனும், சாமி 2, வட சென்னை, கனா நம்ம வீட்டுப் பிள்ளை, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து இன்று பிரபல நடிகையாக மாறி இருக்கிறார். இவரது, காக்கா முட்டை படத்திற்காக "சிறந்த நடிகைக்கான தமிழக அரசு திரைப்பட விருதும்' சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதும் பெற்றவர்.
இந்த நிலையில், சமீபத்தில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷிடம் மாணவர் ஒருவர் உங்களது உண்மையான நிறம் என்ன? என கேட்க அதற்கு பதிலளித்த அவர், உண்மையை சொல்ல வேண்டுமானால் நான் "மாநிறம்" தான், இதுல இருந்தே தெரிய வேண்டாமா நான் நம்ம ஊரு பொண்ணு என்று. அதுமட்டுமில்லாமல் நான் ரொம்ப வெள்ளையும் இல்லை, ரொம்ப கருப்பும் இல்லை. அதனால் என்றைக்குமே மாநிறத்தில் இருக்கும் பெண்கள் தான் அழகாகவும் கலையாகவும் இருப்பார்கள்" என கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க: யாருங்க இந்த அர்ஷியா லட்சுமணன்... சுழல்-2 தொடரில் அசத்தும் கருநிற பேரழகி..!