×
 

"பிரபல பொற்கோவிலில் நான் அப்பொழுது நீங்கள்"...! நடிகை ஆண்டிரியா வெளியிட்ட அரிய புகைப்படம்...!

கடவுள் பக்தியுள்ள நடிகை ஆண்ட்ரியா பொற்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். 

"ஒல்லி ஒல்லி இடுப்பு ஒட்டியாணம் எதற்கு" என்னும் பாடலுக்கு ஏற்ப பார்க்க அழகாகவும் கண்களால் கவரும் அழகியாகவும் இருப்பவர் நடிகை ஆண்ட்ரியா. இதுவரை சாதாரண படங்களில் நடித்து வந்த இவர் தற்பொழுது கிளாமர், ஹாரர் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இப்படி இருக்க, மக்களால் ஆண்ட்ரியா என்று அழைக்கப்படும் இவரது முழு பெயர் ஆண்ட்ரியா ஜெறேமியா.சென்னையை சேர்ந்த இவர், தன்னுடைய சிறுவயது முதல் "யங் இசுடார்சு" என்னும் குழுவில் பாடி வந்தார். அதன் பின் நடிப்பிலும் ஆர்வம் காட்டிய ஆண்ட்ரியா,கல்லூரியில் மேடை நாடகத்திலும் நடித்துள்ளார். 

இப்படி கல்லூரிகளில் நாடகத்தில் நடித்து கொண்டிருந்த ஆண்ட்ரியா, தனது படிப்பை முடித்த பின் திரைப்படங்களில் நடிக்க முடிவு செய்தார். அவரது எதிர்பார்ப்புக்கு ஏற்றார்போல் பட வாய்ப்புகளும் அவருக்கு கிடைத்தது. பின்னர், பின்னணி பாடகராக அறிமுகமான இவர், தொடர்ந்து கௌதம் மேனனின் வேட்டையாடு விளையாடு, பச்சைக்கிளி முத்துச்சரம், போன்ற படங்களில் பாடினார். பின்  திரைப்படத்தில் சரத்குமாருடன் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. "பச்சைக்கிளி முத்துச்சரம்" திரைப்படம் சேம்சு சீகலின் ஆங்கில நாவலான தீரெயில்டுவின் கதையைக் கொண்டது. 

இதையும் படிங்க: கொள்ளை கொள்ளும் அழகில் ஆண்ட்ரியா.. வர்ணிக்க வார்த்தை இல்லாமல் குமுறும் ரசிகர்கள்..!

அதன் பின், 2010ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் பிரமாண்டமான கதைக்களத்தில் நடிகர் கார்த்திக், ரீமா சென், ஆகியோருடன் ஆண்டிரியா நடித்து வெளியான திரைப்படம் தான் "ஆயிரத்தில் ஒருவன்". இந்த இயக்குனரின் திரைப்படத்தில் நடித்து தனக்கென ரசிகர்களை உருவாக்கினார். பின், 2011-ம் ஆண்டு, வெங்கட் பிரபு இயக்கத்தில், வெளியான "மங்காத்தா" திரைப்படத்திலும் நடித்தார். இவர், கமல்ஹாசனுடன், நடித்த "விஸ்வரூபம்" திரைப்படத்தை யாராலும் மறக்க முடியாது, அதில் கமல்ஹாசனுடன் இவர் ஆடிய பரதத்தையும் மறக்க முடியாது. அதன் பின், வெற்றிமாறனின் இயக்கத்தில் வெளியான "வட சென்னை" திரைப்படத்திலும் நடித்து தனது அபார நடிப்பு திறமையை வெளிக்காட்டினார்.

இதுவரை ,2007ம் ஆண்டு பச்சைக்கிளி முத்துச்சரம், 2010ம் ஆண்டு ஆயிரத்தில் ஒருவன், 2011ம் ஆண்டு மங்காத்தா, 2012ம் ஆண்டு ஒரு கல் ஒரு கண்ணாடி, 2013ம் ஆண்டு அன்னையும் ரசூலும், விஸ்வரூபம் மற்றும் தடகா, எந்தெந்தப் புன்னகை, 2014ம் ஆண்டு அரண்மனை, 2015ம் ஆண்டு லோகம், 2016ம் ஆண்டு தோப்பில் ஜோபன், 2017ம் ஆண்டு தரமணி மற்றும் அவல், 2018ம் ஆண்டு வட சென்னை, 2021ம் ஆண்டு. அரண்மனை 3 போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து தற்பொழுது வெளியாக இருக்கும் கவினின் மாஸ்க் திரைப்படத்தில் வில்லியாக நடித்திருக்கிறார்.

இந்த நிலையில், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் சீக்கியர்களின் புனிதத் தலமாக அமைந்துள்ள பொற்கோவிலுக்குச் சென்ற ஆண்ட்ரியா அங்கு சாமி தரிசனம் செய்திருக்கிறார்.மேலும் அப்பொற் கோவிலின் புகைப்படத்தையும் அதில் பக்தியுடன் இருக்கும் தனது புகைப்படத்தையும் வெளியிட்டு உள்ளார்.

இதையும் படிங்க: மாஸ்டர் பட போஸ்டரை திருடிய கவின்... ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ள படக்குழு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share