அனுபமா படத்தில் என்ட்ரி கொடுக்கும் சமந்தா..! திரும்பி வந்துட்டனு சொல்லு என அமர்க்களம்..!
நடிகை அனுபமா கதாநாயகியாக வரும் படத்தில் சமந்தா இணைந்திருப்பது ரசிகர்களிடயே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
மலையாளத்தின் மாபெரும் வெற்றிப் படமான பிரேமம் மூலம் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். இப்படத்தில் அவரை கண்ட பின் பல இளைஞர்கள் அனுபமா போல் தனக்கு காதலி வேண்டும் என பித்து பிடித்து சுற்றினர். அதன் பின்னர் பிருத்விராஜ் மற்றும் வேதிகா நடித்த "ஜேம்ஸ் & ஆலிஸ்" என்ற மலையாளப் படத்தில், சிறப்புத் தோற்றத்தில் நடித்தார். மலையாளத்தை அடுத்து தெலுங்கில் அனுபாமாவிற்கு வாய்ப்பு கிடைக்க, நிதின் மற்றும் சமந்தா ரூத் பிரபுவுடன் "ஆ..ஆ" என்ற படத்தில் நடித்து, அதன் பின் தனது முதல் மலையாள படமானா பிரேம் படத்தை தெலுங்கு ரீமேக்கில் நடித்து கொடுத்தார்.
இப்படி மலையாளம் மற்றும் தெலுங்கில் அறிமுகமான அனுபமா, எப்பொழுது தமில் திரையுலகில் தோன்றுவார் என ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்த பொழுது, திடீரென தனுஷ் நடிப்பில் வெளியான டபுள் ஆக்ஷன் படமான "கொடி" என்ற திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து அனைவரையும் அசர வைத்தார். ரசிகர்களை மட்டுமல்லாமல் அப்படத்தில் த்ரிஷாயவையே அலற விட்டார். இதனை தொடர்ந்து தள்ளிப் போகாதே, சைரன், டிராகன் போன்ற படங்களில் நடித்தவர் தற்போது துருவ் விக்ரம் நடிக்கும் பைசன் மற்றும் லாக் டவுன் போன்ற படங்களில் நடிக்கிறார்.
இதையும் படிங்க: சமந்தாவுக்கு அடிச்ச ஜாக்பாட்.. தியேட்டரை தெறிக்க விடும் பட இயக்குநருடன் கூட்டணி..!
இவரைப்போலவே, யசோதா என்ற இயற்பெயர் கொண்ட சமந்தாவின் முதல் படம் கௌதம் மேனன் இயக்கத்தில் ஏ.ஆர். ரகுமான் இசையில் வெளியான 'ஏ மாய சேசாலே" திரைப்படம் இதன் மூலமாக சினிமா துறையில் அறிமுகமாகி "சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதுகளை பெற்று முன்னணி நட்சத்திரமாக வளம் வந்தார்.
இதனை அடுத்து தமிழில் பல முக்கிய நடிகர்களுடன் நடித்து தனக்கென ரசிகர்களை வைத்திருப்பவர் சமந்தா. குறிப்பாக விஜய், விக்ரம் ,சூர்யா முதலானோருடன் நடித்து முன்னணி நடிகையாக வந்தவர். தனது திருமண வாழக்கை முறிவுக்கு பின் பெரியதாக படத்தில் நடிப்பதில்லை. இந்த சூழலில் இனி மீண்டும் படங்களில் என்னை பார்க்கலாம் என்ற சமந்தா, தற்பொழுது இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்கி வரும் "பங்காரம்" என்ற படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நடிப்பில் சலிக்காத அனுபமா பரமேஸ்வரனும், நடிப்பில் அழகை சேர்க்கும் சமந்தாவும் இணைந்து நடிக்க இருக்கின்றனர். முற்றிலும் கிராமத்து கதையில் உருவாகி வரும் "பரதா" என்ற படத்தில் கதையின் நாயகியாக நடித்து வரும் அனுபமா பரமேஸ்வரனுடன், சமந்தா கெஸ்ட் ரோலில் நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் இப்படத்தின் கதையானது பர்தா அணியும் கிராமத்து பெண்கள் குறித்த கதையாக இருப்பதால் அனைத்து பெண்களுக்கும் ஸ்விட்டான மெசேஜ் சொல்ல சமந்தா சிறப்பு காட்சியில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சிங்கம் போல ஸ்ட்ரென்த் எனக்கு... 110 கிலோவை அசால்ட்டாக தூக்கி மாஸ் காட்டிய சமந்தா..!