×
 

அமைச்சருக்கு கோரிக்கை வைத்த அறந்தாங்கி நிஷா..! வெளுத்து வாங்கிய இன்ஸ்டா பதிவால் ஆட்டம் கண்ட கல்வித்துறை..!

பள்ளி கல்வி துறைக்கும் அமைச்சருக்கும் கோரிக்கை வைத்து இருக்கிறார் நடிகை நிஷா. 

ஜெயிலர் திரை படத்தில் போலீசாக ஒரே ஒரு ரோலில் வந்தாலும், அதற்கும் பலரது பாராட்டை பெற்ற ஒரே சின்னத்திரை நயன்தாரா என்றால் அவர் தான் சின்னத்திரை வட்டாரத்தில் காமெடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் "அறந்தாங்கி நிஷா". நடிகர் வடிவேலுவை பார்த்து மனோபாலா சொல்வதை போல, உங்களுக்கும் அவங்களுக்கும் என்ன வித்தியாசம் என கேட்டால் "அவன் பயங்கர கருப்பாக இருந்தான்" "நீ கருப்பா பயங்கரமா இருப்ப" என்று கூறுவதை போல் இவரை பலர் கலாய்த்தது உண்டு. ஆனால் என்ன தான் நிஷா பார்க்க கருமை நிறமாக இருந்தாலும் குணத்தில் தங்கமான பெண்ணாக அனைவரது மனதிலும் நீங்கா இடம்பிடித்து இருக்கிறார். 

கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் ஸ்டேட்டப் காமெடியனாக அவதாரம் எடுத்த நிஷா, பிறகு பழனி என்பவருடன் இணைந்து ஆண்கள் பெண்கள் என பேசி அனைவரது மனதிலும் நீங்கா இடம் பிடித்தார். அதன் பின், தனியார் தொலைக்காட்சியின் பல நிகழ்ச்சிகளில் பங்கு கொண்ட இவர் காமெடியனாக, தொகுப்பாளினியாக, நடிகராக பல அவதாரங்களை எடுத்து வந்தார். இப்படி தீயாய் வலம் வந்த நிஷாவுக்கு பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்துக் கொள்ள வாய்ப்பு கிடைத்தது.

இதனை அடுத்து, அதில் கலந்து கொண்ட நிஷா, அர்ச்சனாவுடன் இணைந்து "அன்பு தான் முக்கியம்" என பேசி பல கலவையான விமர்சனங்களுக்கு ஆளானாலும் அதிலிருந்து வெளிய வந்த பின்பு, "கோலமாவு கோகிலா" படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. மேலும், கொரோனா, வெள்ள பாதிப்பு காலங்களில் கேபிஒய் பாலாவை போலவே இவரும் களத்தில் இறங்கி மக்களுக்கு உதவி செய்வார்.

இதையும் படிங்க: லேடி சூப்பர் ஸ்டாருன்னு என்னை கூப்பிட வேண்டாம்..! நயன்தாராவை தொடர்ந்து மற்றொரு நடிகை கோரிக்கை..!

இதனை அடுத்து நிஷாவை பலரும் நிகழ்ச்சிகளில் உருவ கேலி செய்தாலும் அதனை தாங்கி கொண்ட நிஷா, அவரை அவரே கலாய்த்து கொண்டு மக்களை சிரிக்க வைப்பதில் வல்லவர். உதாரணத்திற்கு ஒரு நிகழ்ச்சியில் நிஷா கூறுகையில், ஒருமுறை "கலக்கப்போவது யாரு" ஷோவை முடித்து விட்டு வீட்டிற்கு செல்ல, ஸ்டேண்டப் காமெடியனான பழனி அண்ணா கூட பஸ் ஸ்டாண்டுல புர்கா போட்டபடி நின்று கொண்டு இருந்தேன். அப்பொழுது அவரை ஒருவர் அதிகமாக பாராட்டிப் பேசி கொண்டு இருந்தார். அப்போ, திடீரென ‘உங்ககூட ஒருத்தங்க லேடி கெட்டப் போட்டுக்கிட்டுப் பண்றாங்களே...அவங்க ரொம்ப சூப்பரா பண்றாங்க சார்’ என சொன்னார்.

இதனை கேட்ட பழனி அண்ணாவுக்குப் ஒன்றுமே புரியவில்லை. சிறிது நேர யோசனைக்கு பின், யாரைச் சொல்றீங்க என கேட்டார். அதற்கு அவர், அதான் சார்... நீங்க கூட அவங்களுக்கு நிஷானு பேர் வச்சிருக்கீங்களே என கூறினார். இதனை கேட்ட எனக்கு கோபம் வந்தது. ஆனால் அவர் வேணும்னெல்லாம் சொல்லலை. உடனே  பழனி அண்ணா என்னைக் கூப்பிட்டு, அவரிடம், இதுதான் அந்த நிஷா... இவங்க உண்மையிலயே பொண்ணுதான் என சொன்னார். அவ்வளவு தான் அவர் ஓடியே போய்ட்டார். அதை நினைச்சு பஸ் ஸ்டாண்டுல சிரிக்க ஆரம்பிச்ச நான் தொடர்ந்து ஒரு வாரத்துக்குச் சிரிச்சிருக்கேன். என நகைச்சுவையாக கூறியிருந்தார் . 

அதுமட்டுமல்லாமல், சென்னையில் நடிகை என்பதற்காகவும், முஸ்லிம் என்பதற்காகவும் வாடகைக்கு கூட வீடு கொடுக்காமல் பலர் அலைய விட்ட நிலையில், தற்போது சொந்தமாக சென்னையில் வீடு வாங்கி அதற்கு அப்பா பெயரை வைத்துள்ளேன் என எமோஷனல் பதிவு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டு இருந்தார் நடிகை நிஷா. இப்படி பல இன்னல்களுக்கு மத்தியில் சாதித்து நிற்கும் நிஷா சமீபத்தில், நடிகை நயன்தாராவை தொடர்ந்து இனி தன்னை யாரும் "சின்னத்திரை நயன்தாரா" என அழைக்க வேண்டாம் என்று ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்தார். 

இத்தனை நகைச்சுவை உள்ளம் கொண்ட அறந்தாங்கி நிஷா, தற்பொழுது திருவண்ணாமலை அரசு பள்ளியில், சத்துணவு முட்டை கேட்டதற்காக, 5ம் வகுப்பு மாணவன் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு காட்டமான பதிவை தனது இன்ஸ்ட்டாவில் பகிர்ந்து உள்ளார்.

அதில், "ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் சத்துணவு முட்டை கேட்டதற்காக, சத்துணவு ஊழியர்களால் 5ம் வகுப்பு மாணவன் தக்காப்பட்டது மிகவும் கண்டனத்திற்குரியது, ஆசிரியர்கள் அடிப்பது மாணவன் நல்வழிக்காக, இவர்கள் எப்படி மாணவன் மீது கைவைக்க முடியும், யார் கொடுத்த உரிமை, மரியாதைக்குரிய பள்ளி கல்வி துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் அவர்கள் அந்த பணியாளர்களை பணி நீக்கம் செய்வதோடு மட்டுமல்லாது உரிய தண்டனையும் வழங்க வேண்டும்" என அவர் கூறி இருக்கிறார். 

இதையும் படிங்க: லேடி சூப்பர் ஸ்டாருன்னு என்னை கூப்பிட வேண்டாம்..! நயன்தாராவை தொடர்ந்து மற்றொரு நடிகை கோரிக்கை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share