மனசாட்சி வேண்டாமா அட்லீ.. இவ்வளவு சம்பளமா கேட்பாங்க.. பின்வாங்கிய கலாநிதி..!
பல பிரபலங்களை வைத்து படங்களை இயக்கிய அட்லீ தற்பொழுது தனது அடுத்த படத்திற்காக கேட்ட சம்பளத்தால் அதிர்ந்து போய் இருக்கின்றனர் தயாரிப்பாளர்கள்.
எப்படி கர்ணனுக்கு பரசுராமன் குருவாக இருந்து அனைத்து வித்தைகளையும் கற்று கொடுத்தாரோ..அதே போல் இயக்குநர் சங்கரும் தனது முழு வித்தையையும் அட்லீக்கு கற்று கொடுத்து இருக்கிறார். அதனால் தான் தன் இயக்கத்தில் உருவாகும் படங்கள் அனைத்திலும் என்றுமே சங்கரை நினைவுக்கு கொண்டுவருவார் இயக்குனர் அட்லீ. ஆதலால் இன்று வரை இவரது படங்கள் தோல்வியை சந்தித்ததே இல்லை. அப்படி அட்லீ இதுவரை எத்தனை படங்கள் தான் எடுத்தார் என பார்த்தால் டாப் 10ல் டாப் 5 படங்கள் அவருடையதாக இருக்கிறது.
அந்த வகையில் அட்லீயின் முதல் படம் "ராஜா ராணி" .ஏ.ஆர் முருகதாஸ் தயாரித்துள்ள இப்படத்தில் ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா நஜிம் ஆகியோர் நடித்துள்ளனர். சத்யராஜ், சந்தானம், சத்யன் ஆகியோர் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் அட்லீக்கு ரசிகர்களை சம்பாரித்து கொடுத்தது.
இதையும் படிங்க: தோல்வியே காணாத அட்லீயின் 'மெர்சல்' படம் நஷ்டமா...? தயாரிப்பாளர் ஓபன் டாக்...!
இரண்டாவதாக, கலைப்புலி எசு.தாணு விஜய் தயாரிப்பில், அட்லீ இயக்கியத்தில், ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைப்பில் விஜய், ஏமி ஜாக்சன், சமந்தா, ராதிகா சரத்குமார், பிரபு முதலியோர் நடிப்பில் உருவான திரைப்படம் "தெறி". இப்படம் பயங்கர ஹிட் கொடுத்தது.
மூன்றாவதாக, ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில், அட்லீயின் இயக்கத்தில், இசைப்புயல் ஏ.ஆர் ரகுமானின் வெறித்தனமான இசையில் விஜய், காஜல் அகர்வால், எஸ். ஜே. சூர்யா, வடிவேலு, சமந்தா, நித்யா மேனன், கோவை சரளா, ராஜேந்திரன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் மெர்சல்.
நான்காவதாக, கல்பாத்தி எஸ்.அகோரம் மற்றும் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிபில், அட்லீ இயக்கத்தில், இசைப்புயல் ஏ.ஆர் ரகுமானின் இசையில், விஜய், நயன்தாரா, விவேக், ஜாக்கி செராப், கதிர், யோகி பாபு ஆகியோர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் "பிகில்".
அடுத்து ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்து ஹிட் கொடுத்த திரைப்படம் "ஜவான்"
அதனை தொடர்ந்து, தற்போது தன்னுடைய தெறி படத்தை "பேபி ஜான்" என்ற பெயரில் ரீமேக் செய்து வெளியிட்டு உள்ளார். அந்த படமும் நல்ல ஹிட் கொடுத்துள்ளது.
இதனை அடுத்து, தற்போது, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் மிகவும் பிரமாண்டமாக அட்லீ இயக்க இருக்கும் திரைப்படத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க இருக்கிறார். மேலும், இப்படத்தில் அல்லு அர்ஜுனுடன் மற்றொரு நடிகருக்கான முக்கிய கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது.இரண்டு ஹீரோக்கள் மத்தியில் ஹீரோயினாக வலம் வர தயாராகி இருக்கிறார் ஜான்வி கபூர். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளதாக கூறிவந்த நிலையில் அப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க முடியாது என கூறி பின்வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது.காரணம் அவர் கேட்ட சம்பளம் தான் என கூறுகின்றனர்.
இந்த நிலையில்,நடிகைகள் தங்களது சம்பளங்களை உயர்த்தி தரவேண்டும் எனவும் ஹீரோக்களுக்கு மட்டும் ரூ.50கோடி முதல் ரூ.100கோடி வரை சம்பளம் கொடுப்பதாகவும் குற்றம் சாட்டி வந்தனர். அதுமட்டுமல்லாமல் நடிகை சாய்பல்லவி, நயன்தாரா, ராஷ்மிகா, திரிஷா, சமந்தா உள்ளிட்டோர் தங்களது சம்பளங்களை உயர்த்தி உள்ளனர். இதனை பார்த்து பூரிப்படைந்த அட்லீ, ஹீரோ, ஹீரோயின்களே இவ்வளவு சம்பளம் வாங்கும் பொழுது அவர்களை வைத்து படத்தை இயக்கும் நாம் ஏமாறுவதா..? என தனது சம்பளத்தையும் ரூ.100 கோடியாக உயர்த்தி தயாரிப்பாளர்களும் ஹீரோ ஹீரோயின்களையும் வாய்பிளக்க வைத்திருக்கிறார்.
குறிப்பாக ஜெயிலர் படம் வசூலில் சாதித்ததற்கு காரையே பரிசாக கொடுத்த கலாநிதி மாறனே சற்று தயங்கி இருக்கிறார். காரணம் அட்லீ அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சல்மான் கானை வைத்து படம் இயக்க இருப்பதாக தகவல் வெளியானது. அதே சமயம் அல்லு அர்ஜுனையும் வைத்து படம் இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனால் அட்லீ இப்படங்களுக்காக கேட்ட பட்ஜெட் மிகப்பெரியதாக இருந்ததால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதில் இருந்து பின்வாங்கி விலகியதாக கூறப்படுகிறது.இந்த நிலையில், அல்லு அர்ஜூனுடன் இணைந்து அட்லீ தயாரிக்க இருக்கும் படத்தினை உருவாக்க படக்குழுவினர் தயாரிப்பாளரான "தில் ராஜு" உடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். இந்த படத்திற்காக அட்லீ ரூ.100 கோடி சம்பளமாக கேட்டதாகவும், அதனால் தயாரிப்பாளர் 'தில் ராஜு' சற்று தயங்குவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் படப்பிடிப்பு சிக்கலில் உள்ளது.
இதையும் படிங்க: புஷ்பாவுடன் ஃபையராக வருகிறார் அமரன்... அல்லு அர்ஜுன், அட்லீ கூட்டணியில் பிரபல நடிகர்..!