×
 

தொடர்ந்து அழுத்தம் கொடுத்த வடிவேலு...! விரட்டி அடித்த பாரதிராஜா...! வடிவேலுக்கு இப்படி ஒரு நிலைமையா...!

நடிகர் வடிவேலுவை இயக்குனர் பாரதிராஜா நடிக்க வேண்டாம் என கூறி விரட்டியடித்துள்ளதாக கூறியிருக்கிறார் தயாரிப்பாளர் ஒருவர்.

அன்று முதல் இன்று வரை இயக்குனராகவும் நல்ல நடிகராகவும் இருந்து வருபவர் தான் நடிகர் பாரதிராஜா. இவர் நம்ப விட்டு பிள்ளை படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தாத்தாவாக மிகவும் அற்புதமாக நடித்திருப்பார். இவர் பெரும்பாலும் உணர்வு நிறைந்த நாட்டுப்புறக் கதைகளை படம் பிடிப்பவர். இசையமைப்பாளர் இளையராஜாவுடன் இணைந்து மறக்க இயலாத இனிய பாடல்களைத் கொடுத்தவர். மேலும், ராதிகா, ரேவதி, ரேகா, ரஞ்சிதா, ராதா போன்ற பல கதாநாயகிகளை அறிமுகம் செய்த பெருமை இவரையே சேரும். 

இப்படிப்பட்ட பாரதிராஜா 16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள், நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை, கோடி பறக்குது, கரகாட்டக்காரன், தந்து விட்டேன் என்னை, இதயம், கிழக்குச் சீமையிலே, கேப்டன் மகள், தாஜ் மஹால், பொம்மலாட்டம், படை வீரன், மாடர்ன் லவ் சென்னை, போன்ற படங்களை இயக்கியுள்ளார்.

இதையும் படிங்க: சிறப்பான தரமான படம் தான் 'கேங்கர்ஸ்' திரைப்படம்... சிறப்பு காட்சியில் ரசிகர்களை சிரிக்க வைத்த வடிவேலு..! 

இதனை தொடர்ந்து, மணிரத்தினம் இயக்கத்தில் 2004ம் ஆண்டு மே மாதம் 21ம் தேதி 'ஆய்த எழுத்து' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். பின்பு 2010ம் ஆண்டு தாமிரா இயக்கத்தில் 'ரெட்டச்சுழி' படத்திலும், சுசீந்திரன் இயக்கத்தில் 'பாண்டிய நாடு' படத்திலும், நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் 'குரங்கு பொம்மை' படத்திலும், பாண்டிராஜ் இயக்கத்தில் 'நம்ப வீட்டு பிள்ளை' படத்திலும், சுசீந்திரன் இயக்கத்தில் 'கென்னடி கிளப்' படத்திலும், அருண் மாத்தேஸ்வரன் இயக்கத்தில் 'ராக்கி' படத்திலும், சுசீந்திரன் இயக்கத்தில் 'ஈஸ்வரன்' படத்திலும், லிங்குசாமி இயக்கத்தில் 'தி வாரியர்' படத்திலும், சுசீந்திரன் இயக்கத்தில் 'குற்றம் குற்றமே' படத்திலும்,

மித்திரன் ஜவகர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் படத்திலும், தங்கர் பச்சன் இயக்கத்தில் 'கருமேகங்கள் கலைகின்றன' படத்திலும், மனோஜ் கே பாரதிராஜா இயக்கத்தில் 'மார்கழி திங்கள்' படத்திலும், ஹரிஷ் பிரபு இயக்கத்தில் 'திருவின் குரல்' படத்திலும், பிவி ஷங்கர் இயக்கத்தில் 'கள்வன்' படத்திலும், சுசீந்திரன் இயக்கத்தில் வள்ளி மயில் படத்திலும், நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் 'மகாராஜா' படத்திலும், நந்தா பெரியசாமி இயக்கத்தில் 'திரு.மாணிக்கம்' என்ற படத்திலும், பிரிட்டோ ஜெ பி இயக்கத்தில் 'நிறம் மாறும் உலகில்' போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

இவரை போல நடிகர் வடிவேலு தன் திரையுலக பயணத்தில் நகைச்சுவை நடிகராக 1988 ஆம் ஆண்டு தொடங்கி 2005ம் ஆண்டு வரை பல படங்களில் நடித்து வந்தவர், கடந்த 2006 ஆம் ஆண்டு இயக்குநர் சங்கரின் தயாரிப்பில் சிம்புதேவனின் இயக்கத்தில் வெளிவந்த ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ என்ற திரைப்படத்தில் முதன் முதலாக இரட்டை வேடங்களில் கதாநாயகனாக நடித்தார். இதனை தொடர்ந்து, 2008 ஆம் ஆண்டு தம்பிராமையா இயக்கத்தில் ‘இந்திரலோகத்தில் நான் அழகப்பன்’ என்ற திரைப்படத்தில் நடித்தார். அதேபோல் தெனாலிராமன், எலி, நாய் சேகர் ரிட்டன்ஸ் போன்ற படங்களில் நடித்தார்.  

இப்படி இருக்க, வடிவேலு சினிமா வாழ்க்கையில் மிகவும் முக்கியமான படங்களில் ஒன்றான "கிழக்கு சீமையிலே" படத்தில் நடிப்பதற்காக ரூ.25 ஆயிரம் சம்பளம் கேட்டு வடிவேலு தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததால் கடுப்பான இயக்குநர் பாரதிராஜா, நீ ஒன்னும் நடிக்கவே வேண்டாம் என்று கூறி விரட்டிவிட்டதாகவும், பின் அங்கிருந்து கண்ணீருடன் சென்ற வடிவேலுவை பார்த்த நான் விஷயத்தை புரிந்து கொண்டு  அவரை ஆறுதல்படுத்தி அவர் கேட்ட ரூ.25 ஆயிரம் சம்பளத்தை கொடுத்து அனுப்பி வைத்தேன் என தயாரிப்பாளர் தாணு கூறியிருக்கிறார். 

இதையும் படிங்க: சிங்கமுத்துவிடம் ரூ.5 கோடி மானநஷ்ட ஈடு கேட்ட வழக்கு... நீதிமன்றத்தில் ஆஜரான வடிவேலு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share