'கூலி' படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்ற லோகேஷ் கனகராஜ் 'பர்த்டே பார்ட்டி'...! வாழ்த்து கூறி வரும் பிரபலங்கள்..!
லோகிஷ் கனகராஜ் தனது பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடி இருக்கிறார்.
உழைப்பவர்களின் வாழ்க்கை நொடிப் பொழுதில் மாறும் என்பதற்கு உதாரணம் தான் லோகேஷ் கனகராஜ். இவரது வாழ்க்கை வரலாறு ஒரு புத்தகம் என்றே கூறலாம். 1986 மார்ச் 14ஆம் தேதி கோவையில் பிறந்த லோகேஷ் கனகராஜ், பொள்ளாச்சி பகுதியில் உள்ள சிறு பள்ளியில் தனது பள்ளி படிப்பை முடித்துவிட்டு, கோவையில் உள்ள பி.எஸ்.ஜி கல்லூரியில் தனது பட்டப் டிப்பையும் முடித்துவிட்டு எல்லா இளைஞர்களைப் போல சாமானிய மனிதனாக வங்கியில் வேலை செய்து வந்தார்.
ஆனால் எப்படி தோனி கிரிக்கெட்டுக்காக தனது வேலையை நிராகரித்து விட்டு வந்தாரோ, அதேபோல் வங்கியில் பொறுப்பாக வேலை செய்து வந்த லோகேஷ் கனகராஜ், தனது சினிமா கனவுகாக அந்த வேலையை உதறித்தள்ளிவிட்டு பணக்கஷ்டத்தின் மத்தியிலும் உறவுகளின் எதிர்ப்பையும் கடந்து அயராது உழைத்தார். அவரது உழைப்புக்கு பலனாக தொலைக்காட்சியில் "நாளைய இயக்குனர்" என்ற ரியாலிட்டி ஷோ மூலமாக தனது படைப்பை உலகத்திற்கு அர்ப்பணித்து பிரபலமானார். இதனைத் தொடர்ந்து இயக்குனர் 'கார்த்திக் சுப்புராஜ்' தயாரிப்பில் "அவியல்" என்ற குறும்படத்தை இயக்கினார். பின்பு தனக்கான ஒரு கதையை உருவாக்கி, சிறிய பட்ஜெட்டில் 2017 ஆம் ஆண்டு "மாநகரம்" என்ற படத்தை வெளியிட்டார். இப்படத்தை பார்த்த மக்களுக்கு திரைப்படம் பிடித்துப் போக மக்கள் மத்தியில் 'லோகேஷ்' என்ற பெயர் அடிபட தொடங்கியது.
இதையும் படிங்க: அடுத்தடுத்து ட்ரீட் கொடுக்கும் லோகேஷ் கனகராஜ்.. கூலி டீசர் வெளியாகும் தேதியை அறிவித்து அட்டகாசம்..!
மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜுக்கு தனி தைரியம் வர, தனது அடுத்த படத்தை சிவக்குமாரின் மகன் கார்த்தியை வைத்தே எடுக்க வேண்டும் என்று முடிவு செய்து, இரவு காட்சிகளை அற்புதமாக படமாக்கி, "லைஃப் டைம் செட்டில்மெண்றா" என்ற ஒற்றை வார்த்தையை மக்கள் மனதில் ஆழமாக பதிய வைக்கும் அளவிற்கு 2019 ஆம் ஆண்டு தீபாவளி அன்று தனது "கைதி" திரைப்படத்தை வெளியிட்டார். இப்படத்தை தியேட்டரில் பார்த்த ஒவ்வொரு ரசிகர்களும் லோகேஷ் கனகராஜை கொண்டாடி தீர்த்தனர்.
இதனை அடுத்து பெரிய நடிகருடன் கைகோர்த்த லோகேஷ் கனகராஜ், கில்லி படத்தின் கபடி பாடலை வைத்து மாசாக எடுத்த திரைப்படம் தான் 'மாஸ்டர்'. இப்படத்தில் நடிகர் விஜய்க்கு வில்லனாக விஜய்சேதுபதியை இறக்கி மாஸ்டர் படத்தை மாஸாக வெற்றியடைய செய்தார். பவானி என்ற பெயரில் இதுவரை யாரும் காட்டிராத வித்தியாசமான வில்லனை காண்பித்து, இயக்குநர் சங்கர் சிவாஜி படத்தில் காரை வைத்து ஸ்டண்ட் செய்தது போல் இப்படத்தின் இறுதியில் லாரிகளை வைத்து ஸ்டண்ட் காட்சிகளை ரசிகர்களுக்கு கொடுத்து உற்சாகப்படுத்தினார்.
இதனை அடுத்து, லோகேஷ் கனகராஜ் அடுத்த படத்தை எப்பொழுது வெளியிடுவாரோ..? என ரசிகர்கள் மத்தியில் ஆவலை தூண்டும் அளவிற்கு அவர்கள் மனதில் குடி புகுந்த லோகேஷ் கனகராஜ். அப்படியே கமலஹாசன் மனதிலும் குடி புகுந்து தன் கதையை அவர் மனதில் ஆழமாக பதிய வைத்து, மிரட்டும் இசையிலும் சண்டை காட்சிகளையும், குழந்தை பாசத்தையும் சித்திரமாக மாற்றி, பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட திரைப்படம் தான் 'விக்ரம்'. லோகேஷ் கனகராஜின் மொத்த வித்தகையும் விக்ரம் படத்தில் இறக்கி ரசிகர்களை திக்கு முக்காட வைத்தார்.
இதனை சூழலில், நடிகர் விஜயின் 'லியோ' திரைப்படத்தை தயாரித்து, அதில் கைதி, விக்ரம் போன்ற படங்களின் தொடர்ச்சி கதையாக இப்படத்தை இணைத்து, வெள்ளித்திரையில் புதிய சீரிஸ்களை படைத்து வருகிறார்.
இதனைத் தொடர்ந்து, கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசனுடன் இவர் இணைந்து நடித்த வீடியோ பாடல் ஒன்று ரசிகர்களின் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தினாலும் அதையும் தனது ஸ்டைலில் கடந்து வந்தார் லோகேஷ் கனகராஜ்.
இப்படி, உலகநாயகனையும், தளபதியையும் வைத்து படத்தை இயக்கத்தவர், சூப்பர் ஸ்டாரை வைத்து எப்பொழுது படம் எடுப்பார் என ஆவலுடன் எதிர்பார்த்த ரசிகர்களுக்கு தற்பொழுது ட்ரீட் கொடுத்து வருகிறார் லோகேஷ் கனகராஜ், அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்தை வைத்து "கூலி" திரைப்படத்தை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜ், அப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் தற்பொழுது தனது 39 வது பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார்.
படக்குழுவினரின் கைத்தட்டல்களுடன் மகிழ்ச்சியாக லோகேஷ் கனகராஜ் கேக் வெட்டும் காட்சிகளை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
இதையும் படிங்க: கூலி படத்தில் "பூஜா ஹெக்டே".. அடுத்த அப்டேட் வெளியிட்ட சன் பிக்சர்ஸ்..!