சேலை மடிப்பு கலையாமல் ஒரு கிளிக்..! சிரிப்பால் இளசுகளை மயக்கும் திவ்யபாரதி..!
விருது விழாவில் சேலை அணிந்து வந்த திவ்ய பாரதி தனது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
தமிழ்த் திரையுலகில் நுழைவதற்கு முன்பு, மாடலாக இருந்த திவ்ய பாரதி, 2015ம் ஆண்டில் "மிஸ் எத்னிக் ஃபேஸ் ஆஃப் மெட்ராஸ்" பட்டத்தையும், அதே ஆண்டில் "பிரபலமான புதிய முகம் மாடல் என்ற பட்டத்தையும் வென்றார்.
பின்னர் 2016ம் ஆண்டு கோயம்புத்தூரில் நடைபெற்ற அழகி போட்டியில் 'பிரின்சஸ் ஆஃப் கோயம்புத்தூர் 2016' என்ற பட்டத்தைப் பெற்றார்.
இதையும் படிங்க: வித்தியாசமான ஹேர் ஸ்டைலில்... அடையாளம் தெரியாமல் மாறிய கீர்த்தி சுரேஷ்!
இதனை தொடர்ந்து, மாடலிங்கில் பல்வேறு வாய்ப்புகள் திவ்யபாரதிக்கு கிடைக்க, பல தொலைக்காட்சி விளம்பரங்களில் நடிக்கத் தொடங்கினார்.
அதன்பின் 2021ம் ஆண்டு வெளியான "பேச்சிலர்" திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் உடன் சுப்புலட்சுமி கதாபாத்திரத்தில் நடித்து பலரது பாராட்டையும் பெற்றார்.
இதனால் இப்படத்தில் நடித்தமைக்காக "எடிசன் விருதுகள் 2022 இல், அவர் ரைசிங் ஸ்டார் ஃபிமேல் விருதையும்" பெற்றார்.
இதனை அடுத்து, சமீபத்தில் வெளியான யுனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து, இயக்குனர் கமல் பிரகாஷ் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ், சேத்தன், அழகம் பெருமாள், இளங்கோ குமரவேல் என பலருடன் நடிகை திவ்யபாரதியும் இணைந்து நடித்துள்ள இந்தியாவின் முதல் கடல் சார்ந்த பேய் படம் தான் 'கிங்ஸ்டன்'.
இப்படத்தினை தொடர்ந்து இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் திவ்யபாரதி தற்பொழுது தனது புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: இணையத்தை கலக்கும் த்ரிஷா - சிம்புவின் லேட்டஸ்ட் போட்டோஸ்!