தொழில்ல மத்தவங்களுக்கு வழி விடனும் இல்லனா கஷ்டம்..! பிரியங்கா குறித்து பேசிய டிடி..!
தொழில்ல போட்டி இருக்கனும் தப்பில்லை ஆனால் மத்தவங்களுக்கு வழியும் விடனும் என திவ்யதர்ஷினி கூறியிருக்கிறார்.
இன்று ஹீரோயின்களில் "லேடி சூப்பர் ஸ்டார்" நான் தான்...இல்லை நான் தான்...என சண்டையிட்டு வலம் வருபவர்கள் மத்தியில் இன்றும் தொகுப்பாளர்களில் 'லேடி சூப்பர் ஸ்டார்' ஆக இருப்பவர் தான் அனைவராலும் டிடி என செல்லமாக அழைக்கப்படும் திவ்யதர்ஷினி. இவர் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கும் மேலாக தனியார் பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளனியாக அசத்தி வருபவர். என்னதான் இன்று தொலைக்காட்சிகளில் ரம்யா, ஜாக்லின், பிரியங்கா, மணிமேகலை என நிறைய தொகுப்பாளர்கள் வந்தாலும், மிகப்பெரிய ஜாமவான்களையும் பலதரப்பட்ட பிரபலங்களையும் வைத்து பேட்டி எடுப்பதிலும், சிவகார்த்தியனுடன் மேடை நிகழ்ச்சிகளில் ஏறினால் அங்கு கைத்தட்டல்களும் விசில்களும் வருவதற்கு காரணமாக இருப்பவர் டிடி.
இப்படி பட்ட திவ்யதர்ஷினி, இதுவரை "ஜோடி நம்பர் ஒன்னில் சீசன்கள் 1 முதல் 7 வரையும் தொகுத்து வழங்கியுள்ளார். மேலும், பாய்ஸ் VS கேர்ள்ஸ், டான்சிங் சூப்பர் ஸ்டார், காபி வித் டிடி, அச்சம் தவிர், அன்புடன் டி டி. ஜோடி பன் அன்லிமிடெட், பிக் பாஸ் தமிழ் 2 கொண்டாட்டம், ஏர்டெல் சூப்பர் சிங்கர், என்கிட்ட மோதாதே. டான்சிங் சூப்பர் ஸ்டார். ஸ்பீட் செட்டு கோ, பிக் பாஸ் தமிழ் 4 கொண்டாட்டம் மற்றும் பல பிரபலங்களின் இசை வெளியீட்டு விழாக்கள் என அனைத்து நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளராக இருந்து பல விருதுகளை அறிவித்து அங்கேயே தனக்கான விருதுகளையும் பெற்றவர்.
இதையும் படிங்க: 'மூக்குத்தி அம்மன்' ஆக ஜொலிக்கும் திவ்யதர்ஷினி.. நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய போட்டோ சூட்..!
இதனை தொடர்ந்து, திருமண வாழ்க்கையில் இருந்து வெளியேறிய திவ்யதர்ஷினி சற்றும் மனம் தளராமல் படங்களில் நடிப்பது, நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது என ஜாலியாக இருப்பதை போல் வெளியுலகத்திற்கு காண்பித்தாலும், நீண்ட நேரம் நின்றபடி ஷோக்களை தொகுத்து வழங்கி மக்களையும்சிரிக்க வைத்து, தன் குடுப்பத்திற்காகவும் இப்படி உழைத்த டிடியால் சிறிது நேரம் கூட நிற்க முடியாத அளவிற்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலிலும் இன்றும் தன் கெரியரை விடாமல் பிடித்து வருகிறார்.
இந்த சூழலில், தொகுப்பாளர் மணிமேகலை "குக் வித் கோமாளியில்" இருந்தும் பிரபல தொலைக்காட்சியில் இருந்தும் தான் விலகுவதாக சமீபத்தில் அறிவித்தார். பின்பு அதற்கு காரணம் பிரியங்காதான் எனவும், அவர் தன்னை பணியை செய்ய விடாமல் தடுத்து, தொடர்ந்து மட்டம் தட்டுவதாகவும், நிகழ்ச்சியின் இயக்குனர் முதல் தொலைக்காட்சி நிறுவனம் வரை அனைவரும் அவர்களுக்காக வாதாடுகிறார்கள் எனவும் குற்றம்சாட்டினார். இதனை தொடர்ந்து, சில நாட்களுக்கு பின் பிரியங்கா அதே தொலைக்காட்சியில் "சூப்பர் சிங்கரி"லும், மணிமேகலை வேறொரு தொலைக்காட்சியில் "டான்ஸ் ஜோடி டான்ஸ்" என்ற நிகழ்ச்சியிலும் தொகுத்து வழங்கி பிசியாக இருக்கின்றனர்.
இந்த நிலையில், பலரும் பிரியங்காவை வசைபாடி வந்த நிலையில், திவ்யதர்ஷினி அவரை குறித்து பெருமையாக பேசியிருக்கிறார். டிடி கூறுகையில், "எனக்கு பிரியங்காவை பார்க்கும்போது மிகவும் வியப்பாகவும் ஆச்சர்யமாகவும் உள்ளது. எந்த இடத்திலும், எப்படிப்பட்ட சூழ்நிலையாக இருந்தாலும், அங்கு இறங்கி அடித்து தன் வேலையை முடித்து விட்டு வரும் நபர் தான் பிரியங்கா.
இப்படிபட்ட அவர், எங்களை பார்த்து மேலே வந்தாக கூறினார். இதனை கேட்டு எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.நான் தொலைக்காட்சியில் எனது கடமையை முடித்துவிட்டேன் அதனால் அவர்கள் இனி தொடரட்டும் என வந்துவிட்டேன், பொதுவாக நாம் அடுத்தவர்களுக்கு வழி விடுவது தப்பு ஒன்றும் இல்லை" என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: தேவதை போல் இருக்கும் தொகுப்பாளினி திவ்ய தர்ஷினியின் லேட்டஸ்ட் போட்டோஸ்!