×
 

சினிமாவை விட குடும்ப உறவுகள் தானே நிரந்தரம்..! மனம் விட்டு பேசிய நடிகை ரம்பா..!

கணவருடன் சண்டையிட்டு பிரிந்தால் குழந்தைகள் எங்கு போவார்கள் என குடும்ப வாழ்க்கை குறித்து அழகாக பேசியுள்ளார் நடிகை ரம்பா. 

அந்தப்புரத்து மகராணி  என்ற பாடலை இப்பொழுது கேட்டாலும் கார்த்தி மற்றும் ரம்பா ஆடிய அந்த நடனமே நினைவுக்கு வரும், அந்த அளவிற்கு அழகிற்கு பெயர் போனவர் நடிகை ரம்பா. இப்படிப்பட்ட ரம்பாவின் உண்மையான பெயர் விஜயலட்சுமி. ரம்பா நடித்த முதல் படம்  1992ம் ஆண்டு வினீத்துடன் நடித்து வெளியான "சர்கம்" மற்றும் "சம்பகுளம் தச்சன்"படம். அடுத்து 1993ம் ஆண்டு ஈ.வி.வி.சத்யநாராயணா இயக்கத்தில் வெளியான "ஆ ஒக்கடு அடக்கு" என்ற தெலுங்குப் படத்தில் அங்கு அறிமுகமானார்.

தமிழில், கதிர் இயக்கத்தில் 1993ம் ஆண்டு வெளியான உழவன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதனை அடுத்து இவர் நடித்த "உள்ளத்தை அள்ளித்தா" மிகப்பெரிய வெற்றி பெற்று அனைவரது புகழையும் தேடித்தந்தது. இதற்கு பின்பாக தான் ரம்பாவுக்கு "தொடை அழகி" என ரசிகர்கள் பெயர் வைத்து அன்புடன் அழைத்தனர்.

இதையும் படிங்க: சேலையில் கிளாமராக மாறிய ஐஸ்வர்யா ராஜேஷ்...! புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்கள் ஆர்ப்பாட்டம்...!

தமிழில், கதிர் இயக்கத்தில் 1993ம் ஆண்டு வெளியான உழவன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதனை அடுத்து இவர் நடித்த "உள்ளத்தை அள்ளித்தா" மிகப்பெரிய வெற்றி பெற்று அனைவரது புகழையும் தேடித்தந்தது. இதற்கு பின்பாக தான் ரம்பாவுக்கு "தொடை அழகி" என ரசிகர்கள் பெயர் வைத்து அன்புடன் அழைத்தனர்.

பின்னர் கனடா தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டிலான ரம்பா, மூன்று குழந்தைகளுக்கு தாயாகி உள்ளார். இப்படி திருமணத்திற்கு பிறகு 15 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா பக்கம் வராதவர் தற்பொழுது மீண்டும் சினிமா துறையில் தனது பயணத்தை ஆரம்பித்து இருக்கிறார். அதற்கு முதல்படியாக பிரபல தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியான 'ஜோடி ஆர் யூ ரெடி' என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடுவராகக் களமிறங்கி இருக்கிறார்.


 
இந்த சூழலில், குடும்ப வாழ்க்கை குறித்து தனியார் சேனலுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறிய ரம்பா அதில், சினிமா துறையில் எனது பிசியான நேரத்தில்தான் திருமணம் செய்து கொண்டேன். காரணம் குழந்தை, கணவர் என்ற குடும்ப வாழ்க்கை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. திருமணத்திற்கு பின் நாங்கள் கனடாவிற்கு சென்றாலும் அங்கு சும்மா இருக்கவில்லை.

எனது கணவரின் தொழிலுக்கு உதவியாக இருந்தேன், கிச்சன் டிசைனிங் கோர்ஸ் எடுத்து படித்தேன். உண்மையை சொல்ல வேண்டுமானால், எனக்கு ஐந்து குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது தான் ஆசை. ஆனால் எனக்கு பிறந்த மூன்று குழந்தைகளும் சிசேரியன் என்பதால் இனி குழந்தை வேண்டாம் என்று சொல்லி டாக்டர்கள் தடுத்து விட்டார்கள்.

எனது கணவர் கொஞ்சம் வித்தியாசமானவர், நீ விரும்பினால் எப்போது வேண்டுமானாலும் நடிக்கலாம் என்று எனக்கு சுதந்திரம் கொடுத்திருந்தார். அதற்கான நேரம் இப்போது அமைந்திருக்கிறது. எனது குடும்பம் இப்பொழுதும் கனடாவில் இருக்கிறது. நான் நடிக்க வந்திருக்கிறேன். தினமும் என் கணவர் மற்றும் குழந்தைகளுடன் வீடியோ காலில் பேசிக் கொண்டிருக்கிறேன்.

முன்பே நிறைய பட வாய்ப்புகள் எனக்கு வந்தது, ஆனாலும் குடும்ப பொறுப்புகள் அதிகமாக இருந்ததால் நடிக்கவில்லை. இப்போது கணவர் 'நீ நடிக்க செல் குடும்பத்தை நான் பார்த்துக் கொள்கிறேன்' என்று நம்பிக்கை கொடுத்ததால் நடிக்க வந்தேன்.

எங்களை ஒற்றுமையான தம்பதிளாக மற்றவர்கள் பார்ப்பது சந்தோஷமாக இருக்கிறது. ஆனால் எங்களுக்குள்ளேயும் அதிகப்படியான சண்டைகள் வந்திருக்கிறது. பிரிவை நோக்கி யோசிக்க வைத்திருக்கிறது. ஆனாலும், சரியான நேரத்தில் சரியான முடிவை எடுத்ததால்தான், எங்கள் திருமண வாழ்க்கை இத்தனை வருடங்களாக வெற்றிகரகமா சென்று கொண்டிருக்கிறது.

பிரச்சனைகள் வந்தபோது, நான் நினைச்சிருந்தால் திருமண வாழ்க்கையை தூக்கிப் போட்டுட்டு, மறுபடியும் நடிக்கப் போயிருந்திருக்க முடியும். ஆனால் குடும்பமும் உறவுகளும் தானே நிரந்தரம் என பேசி இருக்கிறார் நடிகை ரம்பா.

இதையும் படிங்க: தமிழில் நடிக்க உள்ள நாக சைதன்யாவின் புது மனைவி..! கெத்து தினேஷுக்கு கிடைத்த பம்பர் வாய்ப்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share