என்ன இப்படி பண்ணிட்டீங்களே டைரக்டரு.. கிங்ஸ்டன் படம் பார்த்தவர்களை கதிகலங்க வைத்த படக்குழு..!
கிங்ஸ்டன் படத்தை பார்த்தவர்களின் விமர்சனங்களை கேட்டு சினிமா ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
யுனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து, இயக்குனர் கமல் பிரகாஷ் இயக்கத்தில், நடிகை திவ்யபாரதி, சேத்தன், அழகம் பெருமாள், இளங்கோ குமரவேல் என பலருடன் ஜிவி பிரகாஷும் இணைந்து நடித்துள்ள இந்தியாவின் முதல் கடல் சார்ந்த பேய் படம் தான் 'கிங்ஸ்டன்'.
இப்படம் மார்ச் 7-ம் தேதியான இன்று வெளியாகும் என கூறி இப்படத்திற்கான ட்ரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டு இருந்தார்.
இதையும் படிங்க: என்ன ட்ரெஸ் இது..."திவ்யபாரதி அழகா... இல்ல அவர் அனிந்திருக்கும் உடை அழகா".. குழப்பத்தில் ரசிகர்கள்..!
அதுமட்டும் அல்லாமல் ட்ரெய்லர் வெளியாவதற்கு முன் நடத்தப்பட்ட 'கிங்ஸ்டன்' படத்தின் பிரத்யேக நிகழ்ச்சியின் பொழுது அப்படத்தின் ஸ்பெஷல் கதாபாத்திரமான கடல் பேயை படக்குழுவினர் அறிமுகம் செய்தனர்.
அதே ட்ரெய்லர் வெளியிட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திவ்யபாரதி, இந்த படத்தின் கதையை இயக்குநர் கமல் தன்னிடம் சொன்னபோது ஒரு லுக் அவுட் வீடியோவையும் காண்பித்தார். அதை பார்த்த உடனே இப்படத்தில் நடிக்க முடிவு செய்துவிட்டேன். ஆதலால் தான் இப்படத்தில் முதல்முறையாக ஸ்டன்ட் காட்சியில் நடித்துள்ளேன். கிங்ஸ்டன் கண்டிப்பாக நல்ல படமாக இருக்கும். என அனைவரும் கூறிவந்த நிலையில், இதுவரை 24படங்கள் நடித்துள்ள ஜி.வி.பிரகாஷின் அடுத்த 25-வது படமான 'கிங்ஸ்டன்' தற்பொழுது திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் விமர்சனங்ககளை பெற்று வருகிறது.
இப்படம், கடலுக்கு மீன் பிடிக்க போகும் தூவத்தூர் கடல் கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் பற்றிய கதையாக பார்க்கப்படுகிறது. சுமார் 1982கால கட்டத்தில் கடலுக்கு மீன்பிடிக்க செல்பவர்கள் அனைவரும் பிணமாக மட்டுமே திரும்பி வருவதால், இனி மீன்பிடிக்க யாரும் கடலுக்கு செல்ல கூடாது என அரசாங்கம் தடைவிதிக்கிறது. இப்படியே காலம் மாறி போக, கதையில் கிங்ஸ்டனாக வரும் ஜிவி பிரகாஷ், கிராமத்தில் உள்ளவர்கள் கூறுவது அனைத்தும் கட்டுக்கதை என கூறி தனது நண்பர்களுடன் கடலுக்கு செல்கிறார். இப்படி கடலுக்கு சென்றவர்கள் மீண்டும் கிராமத்திற்கு வருவார்களா..?மாட்டார்களா..?என்பதுதான் கதை.
இந்த நிலையில், படம் முதல் பாதியில் சுவாரஸ்யம் இல்லாமல் மந்தமாக செல்வதால், சரி, கண்டிப்பாக இரண்டாம் பாதியில் மிரட்டி இருப்பார்கள் என நினைத்தால் அதையும் சுவாரஸ்யம் இல்லாமல் எடுத்து உள்ளனர். ஏற்கனவே படத்தை பார்த்து கோபத்தில் இருக்கும் மக்கள் முன் பேயை கட்டையால் அடித்த காட்சிகள் படம் பார்த்தவர்களை எரிச்சலடைய செய்தது. மொத்தமாக இந்த படத்தை காசு கொடுத்து பார்க்க வந்து ஜோக்கரானவர்கள் மத்தியில் படத்தில் இருக்கும் பேயையும் ஜோக்கராக்கி உள்ளனர்.
இப்படி நெகட்டிவ் ஒருபக்கம் இருந்தாலும், கடல் காட்சிகள், அதன் அனிமேஷன்கள், மற்றும் இசைகள் அனைத்தும் படு ஜோராக இருந்தது. எல்லாம் இருந்தும் ஏதோ ஒன்று குறைகிறதே என்ற சூழலை உருவாக்குகிறது இந்த திரைப்படம் என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.
இதையும் படிங்க: இந்தியாவின் முதல் கடல் பேய் படம் "கிங்ஸ்டன்"... ட்ரெய்லரை வெளியிட்ட சிவகார்த்திகேயன்..!