"கதை சொல்ல வேண்டாம் ரஜினியுடன் நடித்தால் போதும்"..! கூலி படத்தின் அனுபவத்தை பகிர்ந்த உபேந்திரா..!
ரஜினியுடன் நடிக்க கிடைத்த வாய்ப்புக்கே லோகேஷுக்கு நன்றி சொல்ல வேண்டும் என கூறியுள்ளார் நடிகர் உபேந்திரா.
நடிகர் ரஜினிகாந்தின் 171-வது திரைப்படமான 'கூலி' திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் சவுபின் ஷாகிர், நாகர்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, ஸ்ருதிஹாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். கடந்த 1995ம் ஆண்டு மாணிக்கம் நாராயணன் தயாரிப்பில், இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் சரத்குமார், மீனா, ராதாராவி, ராஜா மற்றும் கவிதா விஜயகுமார் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படத்தின் பெயரும் 'கூலி' தான். தற்பொழுது ரஜினி நடித்திருக்கும் படத்தின் பெயரும் 'கூலி' என்பதால் ரசிகர்களிடம் இப்படம் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.
மேலும் இப்படத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த- தேவா என்ற கதாபாத்திரத்திலும், அக்கினேனி நாகார்ஜுனா "சைமன்" என்ற கதாபாத்திரத்திலும், உபேந்திரா-'கலீசா என்ற கதாபாத்திரத்திலும், சௌபின் சாகிர் 'தயன் என்ற கதாபாத்திரத்திலும், சத்யராஜ்"இராசசேகர' என்ற கதாபாத்திரத்திலும், சுருதி ஹாசன் "பிரீத்தி" என்ற கதாபாத்திரத்திலும், ஆமிர் கான் சிறப்புத் தோற்றத்திலும், பூஜா ஹெக்டே ஒரு பாடலில் நடன சிறப்புத் தோற்றத்திலும் நடித்து பிரமாண்டமாக உருவாகி இருக்கிறது 'கூலி' திரைப்படம்.
இதையும் படிங்க: அடுத்த ஜென்மத்தில் பழிவாங்க வந்த நீலாம்பரி..! ஜெயிலர் 2 படப்பிடிப்பில் செல்பி எடுத்த ரம்யா கிருஷ்ணன்..!
சமீபத்தில், 'கூலி' படப்பிடிப்பானது ஹைதராபாத் மற்றும் பாங்காங் ஆகிய பகுதிகளில் முற்றிலுமாக நிறைவடைந்து உள்ளது. இதற்கிடையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பிறந்தநாள் அன்று கூலி திரைப்படத்தின் உருவாக்க புகைப்படங்கள் வெளியானது. பின் லோகேஷ் கனகராஜ் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் ஒரே நிற ஆடையில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகமடைய செய்தது. அதுமட்டுமல்லாமல் படம் வெளியாவதற்கு முன்பே 'அமேசான் பிரைம்' ஓடிடி தளத்தில் சுமார் ரூ.110 கோடிக்கு விற்பனையாகி உள்ளது.
இந்த நிலையில், சன் பிச்சர்ஸ் நிறுவனம் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 14ம் தேதி இப்படம் அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகும் என அறிவித்து இருந்தது. இந்த சூழலில் படத்தில் மிகப்பெரிய ரசிகர்கள் இணைந்துள்ளதால் படத்தின் வெளியீட்டுக்காக ரசிகர்கள் காத்து கொண்டு உள்ளனர். இந்த நிலையில், கூலி படத்தில் பணிபுரிந்த அனுபவங்களை குறித்து ரசிகர்கள் மத்தியில் பகிர்ந்து இருக்கிறார் நடிகர் உபேந்திரா.
அவர் பேசுகையில், லோகேஷ் கனகராஜ் முதலில் என்னை சந்தித்து 'கூலி' திரைப்படத்தின் கதையை சொன்னபொழுது அவரிடம் எதுவுமே கேட்கவில்லை. எப்படிப்பட்ட கதையாக இருந்தாலும் பரவாயில்லை நடிகர் ரஜினி சாருடன் ஒரு நிமிடம் திரையில் வந்தால் போதும் என்றேன். இந்த படத்தில் அவரையும் என்னையும் குறித்து சொல்லவேண்டுமானால் நான் ஏகலைவன் என்றால், ரஜினி சார்தான் என் துரோணாச்சாரியார்.
அந்த அளவிற்கு படத்தில் அவர் என்டேர்டைனராக இருந்திருக்கலாம். அனால் எனக்கு மிகப்பெரிய உத்வேகத்தை அவர் அளித்துள்ளார். அந்த அளவிற்கு அவரது நடிப்பு திறமை எங்களை வியக்க வைத்துள்ளது. மேலும், அவருடன் பணியாற்றியதை எனது பாக்கியமாக கருதுகிறேன்" என்கிறார்.
இதையும் படிங்க: நெல்சன் படத்தில் இணையும் பான் இந்தியா ஸ்டார்..! ரகசியத்தை உடைத்த பிரபல நடிகர்..!