×
 

ஜெயிலர் 2-ல் சிவராஜ்குமார்..! அவரே கொடுத்த மாஸ் அப்டேட்..!

ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் சிவராஜ்குமார் என்ற தகவல் தற்பொழுது கிடைத்துள்ளது.

ரஜினி நடிப்பில் எந்த படங்கள் வந்தாலும் அதனை பார்க்க ஒரு கூட்டம் உள்ளது. இப்படி இருக்க, அவர் இதுவரை 175 படங்களுக்கும் மேல் நடித்து வந்ததுடன் இன்னும் பல படங்களில் நடித்து கொண்டு வருகிறார். இப்படி இருக்க, தற்பொழுது அவரது படத்திற்கான அப்டேட்டுகள் வந்த வண்ணம் உள்ளது. இப்படி பட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வயசானாலும் அவரது ஸ்டைலும், அழகும் அவரை விட்டு நீங்காத வகையில் பாதுகாத்து வருகிறார். அது தான் அவரது வெற்றிக்கு காரணாமாகவும் இருக்கிறது. 

இப்படி 1975ம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான "அபூர்வ ராகங்கள்" என்ற திரைபாத்தின் மூலம் அறிமுகமானார் நடிகர் ரஜினிகாந்த். பின் மூன்று முடிச்சு, காயத்திரி, 16 வயதினிலே, பைரவி, முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை, அன்னை ஒரு ஆலையம், பில்லா, நட்சத்திரம், அன்புக்கு நான் அடிமை, காளி, நான் போட்ட சவால், எல்லாம் உன் கைராசி, ஜானி, பொல்லாதவன், முரட்டு காளை, நெற்றிக்கண், ராணுவ வீரன், என 1981 வரை மிகவும் கோபக்காரராகவும் ஆக்ரோஷ்க்காரராக மட்டுமே நடித்து வந்தார் ரஜினி காந்த்.

இதையும் படிங்க: ரஜினி மீதான காதல் குற்றச்சாட்டு...! நீண்ட நாள் கிசு கிசுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை லதா..!

அதன் பின், 1981றிற்கு மேல் இனி தான் நகைச்சுவையாக நடிக்கப்போவதாக கூறி "தில்லு முல்லு" என்ற படத்தில் மிகவும் பிரமாதமாக யாரும் எதிர்பாராத வகையில் நகைச்சுவையாக நடித்தார். அதன் பின் வந்த படங்களான வேலைக்காரன், குரு சிஷ்யன், தர்மத்தின் தலைவன், கோடி பறக்குது, ராஜாதி ராஜா, மாப்பிள்ளை, சிவா, ராஜா சின்ன ரோஜா, பணக்காரன், பெரிய இடத்து பிள்ளை, அதிசிய பிறவி, தளபதி, தர்மதுரை, அண்ணாமலை, மன்னன், உழைப்பாளி, எஜமான், பாட்ஷா,முத்து, அருணாச்சலம், படையப்பா, சந்திரமுகி, சிவாஜி : தி பாஸ், எந்திரன், லிங்கா, கபாலி, பேட்ட, தர்பார், அண்ணாத்த, பாபா, ஜெயிலர், வேட்டையன், லால் சலாம் என பல படங்களில் தனது நகைச்சுவை திறனை வெளிக்காட்டி மக்களை கவர்ந்தார். 

இந்த நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இயக்குனர் நெல்சன் இயக்கிய திரைப்படமான "ஜெயிலர்" திரைப்படம் மாபெரும் ஹிட் கொடுத்தது. இப்படத்தில் படையாப்பா படத்தில் தனக்கு வில்லியாக இருந்த ரம்யாகிருஷ்ணனை திருமணம் செய்து அவரிடத்தில் சாதுவாக நடித்து, பின் தனது 'டைகர்' முகத்தை காண்பித்து படத்தில் கலக்கி இருப்பார்.

இப்படத்தில் அனிரூத் தனது இசையில் ரஜினியின் தீவிர ரசிகன் என்பதை காண்பித்து இருப்பார். அதுமட்டுமல்லாமல் இப்படத்தின் வெற்றிக்கு காரணமான சூப்பர் ஸ்டார், நெல்சன் திலீப்குமார், மற்றும் அனிரூத் ஆகியோருக்கு படத்தின் தயாரிப்பாளரான கலாநிதி மாறான் விலையுயர்ந்த கார்களை பரிசாக கொடுத்திருந்தார்.


இப்படி பட்ட சூழ்நிலையில், தற்பொழுது 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நடிகர் ரஜினியின் கதாபாத்திரங்கள் சிறப்பாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்க, தற்பொழுது அப்படத்தில் ஹிட் கொடுக்கும் நடிகர் இணைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி, சமீபத்தில் வெளியாகும் அனைத்து படங்களிலிலும் மாஸ் வில்லனாக களமிறங்கி மிரட்டி வரும் நடிகர் எஸ்.ஜே.சூர்யா, இப்படத்தில் இணைந்துள்ளதாக தகவல்கள் கிடைத்ததை போல, முதல் பாகத்தை போல 'ஜெயிலர் 2' படத்திலும் மோகன் லால், சிவராஜ்குமார் ஆகியோர் கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டு வந்தது.

இந்த நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் சிவராஜ்குமார் தான் ஜெயிலர் 2 படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். மேலும், "எனது பகுதியின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும், ஜெயிலர் 2 படத்தில் நான் ஒரு சிறிய பாத்திரமாக இருந்தாலும் அதில் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறேன்" என்றும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: அடுத்த ஜென்மத்தில் பழிவாங்க வந்த நீலாம்பரி..! ஜெயிலர் 2 படப்பிடிப்பில் செல்பி எடுத்த ரம்யா கிருஷ்ணன்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share