கருப்பு சேலையில் அழகிய இடையில் நடிகை..! இளசுகளின் உள்ளம் கொள்ளை போன புகைப்படங்கள்..!
கருப்பு சேலையில் அழகிய இடையில் நடிகை ஜனனி அசோக்குமாரின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
"மௌனராகம்" என்ற சீரியல் நம் அனைவருக்கும் தெரியும், காரணம் மௌனராகம் என பெயர் வைத்து அனைவரும் பேசிக்கொண்டே இருப்பார்கள். இந்த சீரியலில் "இசையில் மனம் கலங்குவது ஏனோ" என்ற பாடலை "வேலன்" என்ற குழந்தை அருமையாக பாடும்.
அந்த குழந்தைக்கு பாட்டு டீச்சராக வந்து, மலர் டீச்சராக இளசுகள் மனதில் ஃபேமஸ் ஆனவர் தான் நடிகை ஜனனி அசோக்குமார். பார்க்க அழகாவும் கண்களின் காந்த பார்வையால் ஆளை மயக்கும் கவர்ச்சி முகம் உடைய நடிகையாக இன்றும் ரசிகர்கள் மத்தியில் பார்க்கப்படுகிறார்.
இதையும் படிங்க: கும்முனு இருக்கும் திவ்யா துரைசாமி இடையழகை காட்டி மயக்கும் போட்டோஸ்!
1992ம் ஆண்டு நவம்பர் 28 ஆம் தேதி கோயம்புத்தூரில் பிறந்த ஜனனி, இதுவரை பல மாடல் அழகி போட்டிகளில் பங்கு பெற்று வெற்றிகளை குவித்தவர். மாடல் அழகியாக அவர் அவதாரம் எடுக்கும் முன்பு கோயம்புத்தூர் PSGR கிருஷ்ணம்மாள் மேல்நிலைப் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார். அதன்பின் 'பாரதியார் பல்கலைக்கழகத்தில்' முதுகலைப் பட்டம் பெற்றார்.
அதுமட்டுமல்லாமல், தமிழில் 2015ம் ஆண்டு இயக்குனர் ஜெகதீஷ் இயக்கிவெளியான "நன்பெண்டா" படத்திலும் 2018ம் ஆண்டு வெளியான "ஏமாளி" படத்திலும் நடித்து இருக்கிறார். பிறகு சின்னத்திரையில் அதிக வாய்ப்புகள் கிடைக்க, முதலில் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'மாப்பிள்ளை' என்ற சீரியல் மூலம் அறிமுகமானார்.
அதன்பின் மற்றொரு தொலைக்காட்சியில் "செம்பருத்தி" சீரியலில் நடித்தார். இந்த சீரியலில் இவரது அபார நடிப்பு இவரை இளசுகள் மத்தியில் பிரபலமடைய செய்தது. அதன் பின் சிறு பையனுக்கு பாட்டு டீச்சர் வேடத்தில் நடிக்க ஜனனிக்கு வாய்ப்பு கிடைக்க "மௌன ராகம்" என்ற சீரியலில் நடித்து ரசிகர்களால் அன்புடன் "ஜனனி டீச்சர்" என பெயர் பெற்றார்.
அதன் பின் "நாம் இருவர் நமக்கு இருவர்" என்ற சீரியலில் தனது கிராமத்து கெட்டப்பை அழகாக காண்பித்து சிட்டி இளசுகளை கவர்ந்தார். இதனை அடுத்து, "ஆயுத எழுத்து", "காற்றுக்கென்ன வெளி" போன்ற தொடர்களில் நடித்து அசத்தி இருக்கிறார்.
இப்படி சீரியல்களில் கதாநாயகியாகவும் சின்ன கதாபாத்திரங்களிலும் கலக்கி வந்த ஜனனி, தற்பொழுது "இதயம்" என்னும் சீரியலில் நடித்தார். தற்பொழுது திடீரென அந்த சீரியல் முடிவுக்கு வந்ததால் ரசிகர்கள் கொதித்து போய் உள்ளனர்.
இந்த சிறியளவில் கதாநாயகியாக களமிறங்கிய ஜனனி ரொமான்ஸ் காட்சிகள், காதல் காட்சிகள், வெட்கம், சேலையில் அழகு, தாயாக ஒரு அவதாரம், சம்சாரமாக ஒரு அவதாரம் என பல அவதாரங்களை எடுத்து இளசுகளின் மனதை வருடி இழுத்தார். யார் கண் பட்டதோ தெரியவில்லை இந்த சீரியலை திடீரென முடித்துவிட்டனர்.
இப்படி சீரியல்களில் மட்டுமல்லாமல் இணையத்திலும் ஆக்டிவாக இருக்கும் ஜனனி உலகம் சுற்றும் பெண்ணாக அனைத்து இடங்களையும் சுற்றி அங்கு பதிவு செய்யும் புகைப்படங்களை வெளியிட்டு பலரது மனதை கொள்ளை கொண்டு வருவார்.
அதன் படி தற்பொழுது கருப்பு சேலையில் இடையழகுடன் தனது புகைப்படத்தை இணையத்தில் உலா வர செய்திருக்கிறார் ஜனனி.
இதையும் படிங்க: கோடைக்கு வெயிலுக்கு... குட்டை உடையில் காத்து வாங்கும் யாஷிகா! அதிரி புதிரி போஸ்!