×
 

நாகரிகம் என்றால் என்ன என்று தெரியுமா.. கோபத்தில் கொந்தளித்த கல்பனா.. கலவரமான ஃபிரஸ் மீட்..!

தற்பொழுது உடல்நலம் தேறியுள்ள பாடகி கல்பனா, பிரஸ் மீட்டில் தன்னைக்குறித்து அவதூறாக பேசியவர்களை லெஃப்ட் அண்டு ரைட் வாங்கினார்.

பாடகி கல்பனா இதுவரை 3000த்திற்கும் மேற்பட்ட மேடைகளில் பாடியவர், இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் கிட்டத்தட்ட 1500 பாடல்களுக்கு மேல் பாடியவர். இப்படி இருக்க, சமீபத்தில் தெலுங்கானாவின் ஐதரபாத்தில் உள்ள நிசம்பத் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த கல்பனாவின் வீட்டின் கதவு இரண்டு நாட்களாக திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுக்க, விரைந்து வந்த போலீசார், பூட்டிய கதவை உடைத்து மயங்கி இருந்த கல்பனாவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கல்பனாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை சாப்பிட்டு இருப்பதாக தெரிவித்தனர்.


இதனை தொடர்ந்து, தனிமையில் இருக்கும் கல்பனா தனது மகளை பார்க்க வேண்டும் என நினைத்ததாகவும் அவர் வர மறுத்துவிட்டதால் சோகம் தாங்காமல் கல்பனா தற்கொலைக்கு முயன்றதாக தகவல்கள் பரவியது. அதுமட்டுமல்லாமல் குடும்ப பிரச்சனை காரணமாக தூக்க மாத்திரை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாகவும் தகவல் பரவியது. இதனை அறிந்த அவரது மகள், எனது அம்மா தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை. மன அழுத்தம் காரணமாக தூக்க மாத்திரைகள் சற்று அதிக அளவில் எடுத்துக்கொண்டுள்ளார். தயவுசெய்து இப்படி தவறாக சித்தரிக்காதீர்கள், எங்கள் குடும்பத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை. எனது அம்மா நலமுடன் இருக்கிறார் விரைவில் வீட்டிற்கு திரும்புவார் என மன வேதனையுடன் கூறி இருந்தார்.

இதனை தொடர்ந்து, உடல் நலம் தேறிய கல்பனா நான்கு நாட்களுக்கு முன்பு, சமூக வலைத்தளம் வாயிலாக வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் "நான் எல்.எல்.பி மற்றும் பிஹெச்டி படிப்புகளை படித்து வருகிறேன். அதேநேரம், எனது இசை வாழ்க்கையிலும் மிக தீவிரம் காட்டி வருகிறேன். இதன் காரணமாக, எனக்கு மன அழுத்தம் அதிகமா இருப்பதால் சரியாக எனக்கு தூக்கம் வருவதில்லை என மருத்துவரிடம் கூறினேன். அப்போது என்னை பரிசோத்தித்த மருத்துவர்கள், எனக்கு 'இன்சோம்னியா பாதிப்பு இருப்பதாக கூறினர். அதற்காக, மருத்துவர்கள் கொடுத்த மாத்திரைகளை உட்கொண்டு வருகிறேன். ஆனால் சம்பவம் நடத்த நாளில், கொஞ்சம் ஓவர் டோஸ் ஆகிவிட்டது. இதனால் நுரையீரல் தொற்று ஏற்பட்டு நான் மயக்க நிலைக்கு சென்றுவிட்டேன். இன்றைக்கு நான் உயிரோடு திரும்ப வந்ததற்கு காரணம் என் கணவர். அன்று என்னைக் காப்பாற்றுவதற்காக அவர் அவ்வளவு கஷ்டப்பட்டார். வெளியூரில் இருந்தாலும் சரியான நேரத்தில் போலீஸ் உதவியோடு வந்து என்னைக் காப்பாற்றினார். அதனால் தான், நான் இன்று உயிர் தப்பித்தேன். இப்படிப்பட்ட கணவர் இருக்கையில் எனக்கு என்ன தனிப்பட்ட பிரச்சனை இருக்க போகிறது. எதுவும் இல்லை. கடவுளின் அருளால் நல்ல படியாக இருக்கிறேன். ஆதலால் என்னைப் பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம்" என்று விளக்கம் அளித்தார்.

இதையும் படிங்க: பாடகி கல்பனா எப்படியிருக்கிறார்?... தற்கொலை முயற்சி குறித்து மகள் வெளியிட்ட பரபரப்பு தகவல்...!

இந்தநிலையில், மருத்துவமனையில் இருந்து பூரண குணமடைந்து வெளியே வந்த பாடகி கல்பனா சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், " தற்பொழுது கல்பனா என்ற பெயர் நெகட்டிவ் பப்ளிசிட்டி வரிசையில் இருக்கிறது. தற்கொலைக்கு முயற்சிக்காத என்னை தற்கொலைக்கு முயற்சித்தேன் என்று சொல்லி விட்டீர்கள். 45 வயதாகும் எனக்கு மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் பல பிரச்சினைகள் இருக்கிறது. தற்பொழுது அதனுடன் 'மெனோபாஸ்' நோயும் நெருங்கிவிட்டது. நீங்கள் வெளியிடும் நல்ல செய்தி 100 பேரிடம் சேர்கிறது என்றால், கெட்ட செய்தி இலட்சம் பேரை சேருகிறது. எனக்கு ஏற்கனவே நுரையீரல் பிரச்சனை இருக்கும் வேளையில் தற்போது நான் சட்டப்படிப்பும் படித்து வருகிறேன்.. அதே சமயம் எனது சினிமா கேரியரையும் கவனித்து வருகிறேன். இப்படி நுரையீரல் பிரச்சனை இருப்பதால் சரியாக துக்கம் வருவதில்லை. அதற்காக வழக்கத்திற்கு மாறாக அதிக டோஸ் மாத்திரையை தவறுதலாக எடுத்துக் கொண்டதால் மயக்கம் வந்து விட்டது. அந்த நேரத்தில் நான் எனது கணவருடன் தொலைபேசி வாயிலாக பேசிக்கொண்டே இருக்கும் பொழுது மயங்கி விழுந்தேன். உடனே அவர்தான் போலீசுக்கும் ஆம்புலன்ஸ்க்கும் போன் செய்து என்னை காப்பாற்றினார். 

ஆனால் ஆம்புலன்ஸை விட வேகமாக எங்களை பற்றி தவறான செய்திகள் பரப்பப்பட்டது. மீடியாக்கள் கூட என்னை குறித்து தவறான செய்திகளை பரப்பினார்கள். மயங்கிய நிலையில் இருக்கும் என்னை பற்றி கவலையில்லை, ஆனால் எனது முகத்தில் இருந்த போர்வையை விலக்கி போட்டோ வீடியோ எடுத்துள்ளார்கள். சினிமாக்காரர்கள் என்பதால் எங்கள் மீது "சேற்றை வாரி" அடிக்கிறார்கள். நாட்டில் எவ்வளவோ தவறுகள் நடக்கிறது அதனை பற்றி செய்தி போடாமல், தனிப்பட்ட சிலரின் குடும்ப விஷயங்களை செய்திகளாக போடுகிறார்கள். உண்மையிலேயே இதனால் தான் எனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டது. மேலும், முதலமைச்சர் ஸ்டாலினிடம் ஒன்றே ஒன்றை கேட்டுக்கொள்கிறேன். ஊடகங்கள் மற்றும் யூடியூபில் தவறான தகவல் பரப்புவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.

எப்பொழுதும் அழகாக சிரித்த படி பேசும் கல்பனா, கடுப்பாக பேசியிருப்பதை பார்த்த நெட்டிசன்கள், தங்களது ஆறுதலை கூறி வருகின்றனர்.

இதையும் படிங்க: சீராகும் கல்பனாவின் உடல்நிலை.. அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்...போலீஸ் தரப்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share