×
 

தனிமையில் பிறந்த நாள் கொண்டாடிய லாஸ்லியா..! குட்டி கேக்குடன் ஹாப்பி பர்த்டே பாடி மகிழ்ச்சி...!

தனது பிறந்தநாளை தனிமையில் மகிழ்ச்சியுடன் கொண்டாடி இருக்கிறார் நடிகை லாஸ்லியா.

தமிழ் திரையுலகில் இன்று லாஸ்லியா என்றால் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்த அளவிற்கு அனைவரது மனதிலும் இடம் பிடித்தவர் லாஸ்லியா. தூய இலங்கை தமிழில் 'கவின்' என்று இவர் கூறும் ஒற்றை வார்த்தையால் பலரது கவனங்களும் சிதறி உள்ளது. அந்த அளவிற்கு சிரிப்பிலும், ரியாக்ஷனிலும், கண்களாலும், தமிழ் மொழியாலும் அனைவரையும் கட்டி போட்டு அடிக்கும் சிறந்த அழகியாக பல இளசுகளின் மனதில் குடியிருப்பவர் தான் லாஸ்லியா. 

இப்படி பட்டவரின் வாழ்க்கையில் கண்ணீரே இல்லை என்று பலரும் சொன்னாலும் கவினை பிரிந்தும் சந்தோஷமாக இருக்கிறாரே என சிலர் பேசினாலும் அதனை குறித்து துளி கூட கவலை படாமல் தனது வாழக்கையை பார்த்து வந்த லாஸ்லியா சமீபத்தில் "ஜென்டில்வுமன்" ப்ரோமோஷனுக்காக கொடுத்த பேட்டியில் கவினை பற்றி கேட்டதால் சற்று எமோஷ்னல் ஆகி பேசினார்.

அதில் "நான் ஆல்பம் பாடலில் நடித்தாலும், ஏதாவது புகைப்படங்கள் பதிவிட்டாலும், அதனை பற்றி பேசாமல் உடனே கவின் பற்றி கேட்பது எனக்கு சங்கடமாக இருக்கிறது. கவினுக்கு திருணம் ஆகிவிட்டது. அவரை பற்றி நான் பேசினால், அது அவரை திருமணம் செய்திருக்கும் பெண் முதல் அவர்கள் குடும்பத்தினர் வரை நம்மை பற்றி என்ன நினைப்பார்கள் என்ற எண்ணம் அதிகமாக இருக்கும். 

இதையும் படிங்க: மாஸ்டர் பட போஸ்டரை திருடிய கவின்... ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ள படக்குழு..!

அதற்காகவே கவின் சம்மந்தமாக கேள்விகள் வரும்போது நான் முடிந்தவரை பதில் கூறினேன். ஆனால் அதை தாண்டி பலர் அதை பற்றியே கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்ததால் அது நன்றாக இருக்காது, அது பலரது வாழ்க்கையை அழித்து விடும். அதனால் 'வேண்டாம்.. இது போதும்' என கூறினேன். அதுமட்டுமல்லாமல், நான் பேசும் விஷயத்தால் அவரின் வாழ்க்கையில் எந்தவித பிரச்சனையும் வந்து விட கூடாது என்பது என் மனதில் எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும்  என லாஸ்லியா கூறி இருந்தார். 

அந்த அளவிற்கு நல்ல நட்புடன் பழகி இருந்தார்கள். இவர்கள் உண்மையில் சந்தித்து பழகிய இடம் பீச்சிலோ, பார்க்கிலோ அல்லது   இலங்கையிலோ இல்லை இவர்கள் சந்தித்து கொண்ட இடம் பிக்பாஸ்-3 வீட்டில் தான். பிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதா, சேரன், அபிராமி, சாக்ஷி என அனைவரும் கவினை புரட்டி எடுத்து கதறவிட்ட வேளையில் தானாக சேர்ந்த கூட்டம் போல் ஒன்றிணைந்த இந்த நரி கூட்டம் தான் "கவின், லாஸ்லியா, சாண்டி, முகின்ராவ், தர்ஷன்". இந்த கூட்டணி ஒன்று சேர்ந்த பிறகு தான் பிக்பாஸ்3 ஆட்டத்தில் சூடு பிடிக்க துவங்கியது. வனிதாவை வறுத்தெடுத்து, சேரனை சேறோடு வெளியே தள்ளி, அபிராமியை ஜெயிலுக்கு அனுப்பி, ஷாக்ஷியை டாடா காண்பித்து வெளியே அனுப்பி மாஸ் காட்டினர். 

அதுமட்டுமல்லாமல், ஒரு பெண்ணுக்கு பாதுகாப்பாக நான்கு ஆண்கள் பாதுகாப்பாக இருக்க, "நாங்க வீ ஆர் தி பாய்ஸ்" என பாட்டு பாடி தமிழம்மட்டுமல்லாது இலங்கை, மலேஷியா, சிங்கப்பூர் என பல நாடுகளில் ஃபேமஸ் ஆனார்கள். அதிலும் அடிக்கடி "நான் தப்பு செய்தால் பிக்பாஸ் கேட்கட்டும் நீங்கள் என்னை பற்றி கதைக்க வேண்டாம்" என கோபத்தில் முகம் சிவந்து பேசுவார். அழுதாலும் மனதை ஏங்கவிடுவார். இப்படிப்பட்டரிடம் பிக்பாஸே "லாஸ்லியா நீங்க தான செரியா இருக்கவங்க, மைக்க ஒழுங்கா மாட்டுங்க" என கலாய்க்கும் அளவிற்கு அழகுடையவர். 

இப்படி பட்ட லாஸ்லியாவின் உண்மையான பெயர் 'லாஸ்லியா மரியனேசன்'. இவர் இலங்கையில் உள்ள சக்தி தொலைக்காட்சியில் 2015 முதல் 2019 ஆம் ஆண்டு வரை தொகுப்பாளராகவும், செய்தி வாசிப்பாளராகவும் கடமையாற்றினார். பின்னர் 2019 ஆம் ஆண்டு தன் பணியில் இருந்து விலகி தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டார். இதுதான் அவரது அப்போதைய பையோ கிராபி.

ஆனால் பிக்பாஸை விட்டு வெளியே வந்த லாஸ்லியா பல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வந்தார். குறிப்பாக ஹர்பஜன் சிங் மற்றும் அர்ஜுன் நடித்த  "பிரண்ட்ஷிப்" என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக  தமிழ் திரையுலகில் அறிமுகமாகி, தற்போது "ஜென்டில்வுமன்" என்ற படத்தில் நடித்தும் இருக்கிறார்.

இந்த நிலையில், எப்பொழுதும் தனிமையாக இருக்க நினைத்து பார்க்கும் இடங்களிலெல்லாம் தனியாகவே காட்டியளிக்கும் லாஸ்லியா தபொழுது அவரது பிறந்தநாளை மகிழ்ச்சியுடன் தனியாக குட்டி கேக்கை வெட்டி கொண்டாடி இருக்கிறார். இதனை பார்த்த பல ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களையும் தங்கள் அன்பையும் பகிர்ந்து வருகின்றனர்.

இதையும் படிங்க: மாஸ்க் போட்டுக் கொண்ட கவின்.. வில்லியாக மிரட்டும் ஆண்ட்ரியா...

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share