நமக்கு சோறுதான் முக்கியம்...! கயாடு லோஹர் பகிர்ந்த க்யூட் புகைப்படம்..!
நடிகை கயாடு லோஹர் பகிர்ந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
டிராகன் திரைப்படத்தின் மூலம் இன்று பலரது கவனத்தையும் ஈர்த்து வருபவர் கயாடு லோஹர். இப்படத்தால் இன்று பலகோடி தமிழ் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் இந்த நடிகை.
மாடலிங்கில் பெயர் பெற்ற இவர் டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் `Everyuth Fresh Face' என்ற நிகழ்ச்சியின் 12-வது சீசனின் டைட்டிலையும் வென்றிருக்கிறார்.
இதையும் படிங்க: சைலண்டாக நடைபெற்ற நடிகை அபிநயாவின் திருமணம்..! ஷாக்கில் திரை பிரபலங்கள்..!
2021-ம் ஆண்டு 'முகில்பேடே' என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அடியெடுத்து வைத்தார் கயாடு.
இத்திரைப்படத்தை தொடர்ந்து அந்த ஆண்டிலேயே மலையாளம், தெலுங்கு என அடுத்தடுத்து பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பித்தார்.
2022ம் ஆண்டு வெளியான `பத்தொன்பதாம் நூட்டாண்டு' என்ற மலையாள திரைப்படத்திலும் அதே ஆண்டில் தெலுங்கில் வெளியான `அல்லூரி' என்ற திரைப்படத்திலும் நடித்தார்.
அதுமட்டுமல்லாமல், 2023ம் ஆண்டு வெளியான ` ஐ ப்ரேம் யூ' என்ற அந்த மராத்திய திரைப்படத்திலும் நடித்தார்.
இப்படி இருக்க, தற்பொழுது பல பட வாய்ப்புகளை கையில் வைத்து இருக்கிறார் கயாடு.
இதையும் படிங்க: இத்தனை ஹீரோயின்களும் எனக்கா..! அல்லு அர்ஜூனுக்கு ஷாக் கொடுத்த அட்லீ..!