×
 

தனுஷ் இல்ல விஜய் தான் பிடிக்கும்.. சர்ச்சையில் சிக்கிய புது நடிகை... ஆத்திரத்தில் ரசிகர்கள்..!

தனக்கு தனுஷை பிடிக்காது விஜயை தான் பிடிக்கும் என கூறி வசமாகி மாட்டிக்கொண்டு இருக்கிறார் நடிகை கயாடு லோஹர்.

தமிழ் மக்கள் அவ்வளவு சீக்கிரம் ஒருவர் மீது அன்பு வைத்து விட மாட்டார்கள் ஆனால் அன்பு வைத்தால் மரணம் வரை மாற்ற மாட்டார்கள் என்று சொல்லும் அளவிற்கு இன்றும் நடிகைகளான, மனோரம்மா, கேஆர்.விஜயா, குஷ்பூ, மீனா, ரம்பா, தேவயானி, அசின், மாளவிகா என பல பிரபலங்கள் அவ்வப்போது நடித்தாலும் அல்லது நடிப்பையே விட்டாலும் அவர்கள் மீது இன்றும் ஒருதுளி அன்பு கூட மாறாமல் செலுத்தி வருகின்றனர் தமிழ் மக்கள்.

அதனை தொடர்ந்து, மீண்டும் தமிழ் மக்களின் அன்பை பெற்றுள்ள நடிகை என்றால் அது நடிகை கயாடு லோஹர். இவர் சமீபத்தில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான டிராகன் திரைப்படத்தில் நடித்து, தமிழ்திரையுலக கதாநாயகியாக அறிமுகமாகி உள்ளார். இந்த படம் தற்பொழுது ரூ.110 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனைப்படைத்து வருகிறது. இவர் ஏற்கனவே, மனோரஞ்சன் நடிப்பில் வெளியான 'முகில்பேட்டை என்ற கன்னட படத்தில் முதன் முறையாக நடித்து திரையுலகில் அறிமுகமானார். அதன் பின் தெலுங்கில் 'அல்லூரி' என்ற படத்தில் நடித்தார். இப்படி கன்னடம் மற்றும் தெலுங்கில் நடித்து அப்பகுதியில் உள்ள அனைத்து ரசிகர்களையும் தன் வசப்படுத்தியவர் தற்பொழுது தமிழ் ரசிகர்களை கவர்ந்து உள்ளார்.

இதையும் படிங்க: சேலம் மக்களுக்கு ஓர் நற்செய்தி..சேலம் மண்ணில் கால் பதிக்கும் நடிகை கயாடு லோஹர்...!

இதனை தொடர்ந்து, தனது எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்ட நடிகை கயாடு லோஹர், "எனக்கு எப்படி தொடங்குவது எனத் தெரியவில்லை. தனக்கும் டிராகன் படத்திற்கும் அதில் வரும் பல்லவி கதாபாத்திரத்தீர்க்கும் கிடைக்கும் வரவேற்பு இதுவரை எங்கும் கிடைக்காத ஒன்று. இப்படத்தை திரையரங்கில் பார்க்கும் ரசிகர்கள் எனக்கு அடிக்கும் விசிலாகட்டும். இன்ஸ்டாவில் அழகான கமெண்ட்ஸ், எடிட் ஆகட்டும் இதெயெல்லாம் பார்க்கும்போது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. நான் தமிழ்ப்பொண்ணும் இல்லை. எனக்கு தமிழும் சரியாக பேசவராது. ஆனால், நீங்கள் என் மீது வைத்திருக்கும் அன்பு விலைமதிக்காதது. இந்த அன்பை எனது படங்களின் மூலம் திருப்பி உங்களுக்கு தருவேன் என கூறி தனது ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்தார்.

பின், தமிழில் தனது அடுத்த படமான 'இதயம் முரளி படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்து வருவதாக கூறினார். டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் பிரீத்தி முகுந்தன், கயாடு லோஹர், நட்டி, ரக்ஷன், பிரக்யா, ஏஞ்சலின் மற்றும் யஷாஸ்ரீ ஆகியோரும் தன்னுடன் நடிப்பதாகவும், கண்டிப்பாக இப்படம் நன்றாக இருக்கும் என படக்குழுவினரும் கயாடு லோஹரும் கூறியுள்ளனர்.

இப்படி இருக்க நேற்று சேலத்தில் உள்ள பிரபலமான தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தனது ரசிகர்களுக்கு அன்பை வெளிக்காட்டி இருக்கிறார் கயாடு லோஹர். அந்த நிகழ்ச்சியில் உள்ள மாணவர்கள்  "உங்களுடைய Celebrity Crush யார்" என கேள்வி கேட்டு உள்ளனர். அதற்கு பதிலளித்த கயாடு லோஹர், "தளபதி விஜய் தான் என்னுடைய Celebrity Crush" என்றும் "விஜய் நடித்ததில் எனக்கு மிகவும் பிடித்த படம் சமந்தாவுடன் நடித்த "தெறி தான்" என்றும் கூறி அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தார். 

காரணம், ஏற்கனவே இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களுடன் உரையாடிய கயாடுவிடம் "உங்களுக்கு பிடித்த ஹீரோ யார்" என ரசிகர் கேள்வி எழுப்ப, "தனுஷ் தான் எனக்கு பிடிக்கும், வேறு யாருக்கும் என் மனதில் இடமில்லை" என கூறியுள்ளார். இவை இரண்டையுமே  கவனித்த இணையவாசிகள் ஏன் கயாடு இப்படி  மாற்றி மாற்றி பேசி மாட்டிக்கொள்கிறார் என கூறி அவர் பேசிய இன்ஸ்ட்டா வீடியோவையும் பகிர்ந்து வருகின்றனர்.

இதையும் படிங்க: நான் தமிழ்ப்பொண்ணு இல்லை.. உங்கள் அன்பு விலைமதிக்காதது.. கண்ணீரோடு நன்றி சொன்ன 'டிராகன் ஹீரோயின்'..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share