×
 

அடுத்த ஹனிமூனுக்கு தயாரான கீர்த்தி சுரேஷ்.. வெட்கத்தில் சிவந்த அழகிய முகம்..!

நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணமான பின் முதல் முறையாக இலங்கைக்கு செல்கிறார். 

திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கீர்த்தி சுரேஷ், "கீதாஞ்சலி" எனும் மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமாகமானார். பின் தமிழில் விக்ரம் பிரபு நடித்த "இது என்ன மாயம்" திரைப்படத்தில் தொடங்கி ரஜினிமுருகன், பைரவா, நடிகையர் திலகம், சண்டைக்கோழி போன்ற படங்ககளில் நடித்து பிரபலமானார்.

இவருக்கு பல ரசிகர்கள் வர காரணமான படம் என்றால் அது "ரஜினிமுருகன்" தான். அப்படத்தில் வரும் "உன் மேல ஒரு கண்ணு" பாடலின் காட்சிகளில் அவரது ரியாக்ஷனும், சிரிப்பும் அவரது அழகை பலரது நெஞ்சுக்குள் பூட்ட வைத்தது.

இதையும் படிங்க: ஹனிமூன் வைஃப் போட்டோ... கிளாமரில் ஹார்ட் டச் கொடுக்கும் கீர்த்தி சுரேஷ்...! ரசிகர்கள் ஆரவாரம்..!

இப்படி பல படங்களில் தனது திறமைகளை வெளிக்காட்டிய கீர்த்தி சுரேஷ், கடந்த 2024 டிசம்பர் 12ஆம் தேதி கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் 'அந்தோணி தட்டிலை கோவாவில் பாரம்பரிய தமிழ் பிராமண மற்றும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்துகொண்டார்.

இவரது திருமண நிகழ்ச்சியில் ஏராளமான திரை பரபலங்கள் கலந்துகொண்டனர்.

இதனையடுத்து, தற்பொழுது ஹனிமூனில் பிசியாக இருக்கும் கீர்த்தி சுரேஷ், பிராமண முறைப்படி நடந்த திருமணத்திற்கு பிறகு, கிறிஸ்தவ முறைப்படி நடைபெற்ற திருமண போட்டோக்களை பகிர்ந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருந்தார். இதனை அடுத்து, பார்ட்டிகளுக்கு தனது கணவருடன் ரியல் ஹீரோ, ஹீரோயினாக என்ட்ரி கொடுத்து, டான்ஸ் வைஃப் கொடுத்து ஹனிமூனை கழித்து வருகிறார்.

இந்த நிலையில், ஹனிமூனின் அடுத்த பயணமாக இலங்கைக்கு முதல் முறையாக செல்கிறார். அதற்க்காக தன்னை ஆயத்தப்படுத்தி கொள்ளும் புகைப்படத்தையும், ஃப்லைட் டிக்கெட்டையும், இலங்கையில் என்ட்ரி கொடுத்த புகைப்படத்தையும் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை பகிர்ந்து உள்ளார் கீர்த்தி சுரேஷ்.

திருமணம் ஆன பின்பு கீர்த்திக்கு அழகு கூடி விட்டதாகவும், வெட்கம் முகத்தில் தாண்டவம் ஆடுவதாகவும் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.   

இதையும் படிங்க: ஹனிமூனில் முதல் படம் NEEK... மனம் திறந்த கீர்த்தி சுரேஷ்.. உற்சாக மழையில் தனுஷ்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share