பாசிட்டிவ் ரோல் போர் நெகட்டிவ் ரோல் கொடுங்க.. ஜாலியாக இருக்கும்..! நடிகை லைலா ஓபன் டாக்..!
தனக்கு பாசிட்டிவ்வான கேரக்ட்டரை விட நெகட்டிவ் கேரக்டரில் நடிக்க பிடித்துள்ளது என கூறியிருக்கிறார் நடிகை லைலா.
சினிமாவில் அப்பொழுதே தனக்கென பல ரசிகர்களை வைத்து இன்றும் பலரது மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தான் நடிகை லைலா. அதனால் தான் பிரபுதேவா படத்தில் கூட "அழகிய லைலா.. அது இவளது ஸ்டைலா" என பாடியிருப்பர். குறிப்பாக இவரது நடிப்பில் வெளியான பிதாமகன் படத்தை யாராலும் மறக்க முடியாது.
அதில் மனோபாலா அவரை பார்த்து "நீ உருட்டுமா உன் நல்ல மனசுக்கு எல்லாம் நல்லாத்தான் நடக்கும்" என்ற டயலாக்குகளுக்கு சொந்தக்காரர் இவர் தான். அதுமட்டுமல்லாமல் அந்த படத்தில் "நானும் பொம்பள புள்ளையா அடக்க ஒடுக்கமா இருக்க பாக்குறேன் என்ன கடுப்பேத்துன" என்றும் ""லூசாப்பா நீ" போன்ற டையலாக்கைப் பேசி அற்புதமாக நடித்து இருப்பார்.
இப்படி பட்ட நடிகை லைலா விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த 'கள்ளழகர்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். பின் பார்த்தேன் ரசித்தேன், தில், தீனா, நந்தா, பிதாமகன் போன்ற படங்கள் இவருக்கு வெற்றிப்படங்களாக அமைந்ததுடன் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வர உதவியாக இருந்தது. அந்த அளவிற்கு சினிமாவில் முன்னணி நாயகையாக வலம் வந்த இவர் சில வருடங்களாக சினிமாவில் இருந்து காணாமல் போனார்.
அதற்கு காரணம் அவரது குடும்ப வாழ்க்கை, கடந்த 2006-ம் ஆண்டு ஈரான் நாட்டை சேர்ந்த தொழிலதிபர் மெஹதீன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் லைலா. இவர்கள் இருவருக்கும் இரண்டு மகன்கள் உள்ளனர். திருமணத்திற்கு பின் குடும்பத்தை கவனித்து கொள்வதில் பிசியாக இருந்த லைலா, அதன்பின் திரைப்படங்களில் நடிப்பதை முற்றிலுமாக நிறுத்தி கொண்டார்.
இதையும் படிங்க: எனக்கு பாலியல் தொல்லை கொடுத்த அந்த நபர்..! நடிகை மாளவிகா மோகனன் காட்டம்..!
பின் நீண்ட வருடங்களாக நடிக்காமல் இருந்த லைலா கடந்த 2022-ம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான "சர்தார்" திரைப்படத்தின் மூலம் சினிமாவில் கம்பேக் கொடுத்தார். இதனை அடுத்து, கடந்தாண்டு நடிகர் விஜய் நடிப்பில் வெளியான 'தி கோட்' படத்தில் நடித்த இவர், தற்போது ஆதி நடிப்பில் வெளியாகி இருக்கும் 'சப்தம்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும், வெப் சீரிஸ் மற்றும் சின்னதிரை நிகழ்ச்சிகளில் பங்குபெற்று வருவதுடன் ஒருசில படங்களில் நடித்து வருகிறார்.
இந்த சூழலில், சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை லைலா, செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர், " சிரித்தபடியே, சினிமாவில் நெகட்டிவ் கதாபாத்திரங்களை நானே தேர்வு செய்து நடித்தேன். திரில்லர், கிரைம் போன்ற கதையில் நடிக்க நான் மிகவும் ஆர்வமாகவே உள்ளேன். தயவு செய்து அதுபோன்ற கதைகளை எனக்கு கொடுங்கள். அதுமட்டுமல்லாமல் தற்போது 'என்கவுன்ட்டர்' என்ற வெப் தொடரில் நடித்து வருகிறேன்.
படப்பிடிப்பில் அதிக நேரம் இருப்பதால் வெளியுலகில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. பாருங்கள்... இன்னும் குட் பேட் அக்லி படத்தை கூட நான் பார்க்கவில்லை" என்றார்.
இதையும் படிங்க: குஷ்பூவை சீண்டிப்பார்க்கும் ஹேக்கர்ஸ்..! கடுப்பில் கொந்தளித்த சுந்தர் சியின் மனைவி..!