நடிகை ஷாலினி பாண்டே அட்ஜஸ்ட்மென்ட் விவகாரம்..! மிருணாளினி ரவியின் 'நச்' பதில்..!
நடிகை ஷாலினி பாண்டே இயக்குனரை பற்றி கூறியதற்கு பதிலளித்து உள்ளார் நடிகை மிருணாளினி ரவி.
தமிழகத்தில் தற்பொழுது சின்னத்திரை நடிகை ஸ்ருதி நாராயணன் அந்தரங்க வீடியோ வெளியானத்திலிருந்து பாடகி சின்மயி முதல் சனம் செட்டி வரை பலரும் தங்கள் வாழ்வில் நடந்தவைகளை கூறி ஆண்களையும் சினிமாத்துறையினரையும் வெளுத்து வாங்கி வருகின்றனர். இந்த நிலையில், சமீபத்தில் தான் படத்தில் நடிக்கும் பொழுது நடந்த கசப்பான அனுபவத்தை பொதுவெளியில் பகிர்ந்து இருந்தார் நடிகை ஷாலினி பாண்டே.
ஷாலினி பாண்டே ஃபிலிமிக்யானுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், "என்னுடைய திரைப்பட வாழ்க்கையில், நான் எத்தனையோ நல்லவர்களுடன் பணியாற்றி உள்ளேன், ஆனால் அதே அளவுக்கு சில கெட்டவர்களுடனும் பணியாற்றியுள்ளேன். நான் பெரிய நடிகர் வீட்டிலுருந்து வந்த பெண் அல்ல, சாதாரண குடும்பத்தில் இருந்து எந்த திரைப்பட பின்னணியும் இல்லமால் கஷ்டப்பட்டு வந்தவள்.
சினிமாவில் எனது 22வது வயதில் ஒரு தென்னிந்தியப் படத்தில் நடித்து கொண்டு இருந்தேன். அந்த நேரத்தில், நான் எனது கேரவனில் உடை மாற்றிக் கொண்டிருந்தேன். அப்பொழுது, அப்படத்தின் இயக்குனர் வேண்டுமென்றே, வேன் கதவைத் தட்டாமல் நேராக உடைமாற்றும் அறைக்கு உள்ளே வந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த நான் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து போனேன். பின் நிலைமையை புரிந்து கொண்டு சுதாரித்த நான் உடனே கோபமடைந்து, இயக்குனரை சத்தமாக திட்டி வெளியேறச் சொன்னேன்.
இதையும் படிங்க: ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் தகதகவென மின்னும் மிர்னாலினி ரவி!
என்னுடைய அலறல் சத்தம் வேனில் மட்டுமல்ல, படப்பிடிப்புத் தளத்தில் உள்ள அனைவருக்கும் கேட்டது. இதனால் எல்லோரும் இயக்குனரை ஒருமாதிரி பார்க்க அவர் மிகவும் சங்கடப்பட்டார். இதனை அடுத்து, படப்பிடிப்புத் தளத்தில் இருந்த சிலர் வந்து என்னை விசாரித்தனர். ஆனால் ஒருவர் கூட எனக்கு ஆதரவு கொடுக்கவில்லை. இந்த விஷயத்தில், இயக்குனருக்கு எதிராக நான் மாறி இருக்கிறேன் என்பதையும் புரிந்துகொண்டேன்.
அப்போது தான், நான் சில முக்கியமான முடிவுகளை எடுத்தேன். ஆனால் அதிர்ஷ்டவசமாக, எனக்கு இன்னும் சில பட வாய்ப்புகள் கிடைத்தன. நீங்கள் இயக்குனரை எதிர்த்தால், எதிர்காலத்தில் உங்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பதற்கான சாத்தியங்கள் குறைந்து விடும். ஆனால் அதிர்ஷ்டவசமாக, எனக்கு அந்த சம்பவத்திற்கு பின் தான், நிறைய பட வாய்ப்புகள் கிடைத்தன என ஷாலினி பாண்டே கூறி இருந்தார். இந்த சம்பவம் தற்பொழுது பேசுபொருளாக மாறியுள்ளது.
இதனை குறித்து சூப்பர் டீலக்ஸ், கடலக்கொண்ட கணேஷ், சாம்பியன், எனிமி, எம்.ஜி.ஆர் மகன், ஜாங்கோ, கோப்ரா மற்றும் ரோமியோ உள்ளிட்ட படங்களில் நடித்த கிளாமர் நடிகையான மிருணாளினி ரவியிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், எனக்கெல்லாம் இந்த மாதிரி எந்த தொந்தரவும் வந்ததில்லை வரவிட்டதும் இல்லை. முடிந்த அளவுக்கு வராமல் நானே பாத்துக்கிட்டேன், எல்லாமே நம்ம கையில் தானே இருக்கு, நாம இடம் கொடுக்காமல் நமக்கு யாரும் தொல்லை கொடுக்க முடியாது. அந்த செயலுக்கு கண்டிப்பாக நாமும் ஒரு காரணமாக தான் இருப்போம்.
பொதுவாக இதுபோன்ற அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனைகள் எதனால் ஒரு பெண்ணுக்கு வருகிறது தெரியுமா. பொருளாதார நெருக்கடியை டார்கெட் செய்துதான் வரும். அதில் நாம் நிறைவாக இருந்தால் அல்லது போதுமென்ற மனம் கொண்டிருந்தால் நிச்சயம் நம்மை யாரும் தொட முடியாது என தெளிவாக பேசியுள்ளார்.
இதையும் படிங்க: ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் தகதகவென மின்னும் மிர்னாலினி ரவி!