நடிகர் மம்முட்டி பெயரில் மறைமுக அர்ச்சனை..! மோகன்லாலின் பூஜையால் உடைந்த ரகசியம்..! எங்கே இருக்கிறார் மம்முட்டி..?
நடிகர் மம்முட்டி பெயரில் மறைமுகமாக மோகன்லால் அர்ச்சனை செய்த ஆதாரம் கிடைத்துள்ளதால் ரசிகர்கள் கொதித்துப்போய் உள்ளனர்.
தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் ரஜினியை போல் இந்திய திரையுலகில் இன்றும் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர்கள் தான் மம்முட்டி மற்றும் மோகன்லால். இப்படி இருக்க, மம்மூட்டியின் உண்மையான பெயர் 'முகமது குட்டி இஸ்மாயில் பனிபரம்பில்'. மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற பல்வேறு மொழி சார்ந்த 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் மம்முட்டி. இப்படி இருக்க, திரையுலகில் இவரது ஆரம்ப வாழ்க்கை 1971ம் ஆண்டு கே.எஸ். சேதுமாதவன் இயக்கத்தில் "அனுபவங்கள் பாலிச்சகல்" என்ற படத்தின் மூலம் தொடங்கியது. அதன் பின், ஏழு வருட இடைவெளிக்குப் பிறகு, நடிகருக்கு மேளா, வில்லனுண்டு ஸ்வப்னங்கள் போன்ற படங்களில் நடித்தார். அதன்பின், 80களில் 200க்கும் மேற்பட்ட படங்களை நடித்து, 90களில் பூதக்கண்ணடி, டாக்டர்.பாபாசாஹத் அம்பேத்கர், பொந்தன் மட மற்றும் விதேயன் போன்ற மலையாள படங்களில் நடித்து அங்கும் பிரபலமானார்.
இப்படி இருக்க, 1990ம் ஆண்டு, கே.மது இயக்கிய "மௌனம் சம்மதம்" என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான மம்முட்டி. தொடர்ந்து கே.பாலச்சந்தர் இயக்கத்தில் "அழகன்", இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் "தளபதி", இயக்குனர் ஃபாசில் இயக்கத்தில் "கிளிப்பேச்சு கேக்கவா", என்.லிங்குசாமி இயக்கத்தில் "ஆனந்தம்" மற்றும் ராஜீவ் மேனன் இயக்கத்தில் "கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்" போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார். பின் தெலுங்கில் இயக்குனர் கே.விஸ்வநாத்தின் இயக்கத்தில் 1992ம் ஆண்டு "சுவாதி கிரணத்தில்" நடித்தார்.
இதையும் படிங்க: புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மம்முட்டி...? விளக்கம் கொடுத்துள்ள படக்குழுவினர்..!
இந்த நிலையில், 73 வயதான மம்மூட்டி தற்போது, மகேஷ் நாராயணன் இயக்கி வரும் "MMMN" என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பில் இருந்து தற்பொழுது இடைவெளி எடுத்துள்ளார் நடிகர் மம்மூட்டி. இதனை அறிந்த சிலர், மம்முட்டிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது என்றும் கண்டிப்பாக அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் எனவும் நெட்டிசன்கள் இணையத்தில் பதிவிட்டு வந்தனர்.
இதனை பார்த்த "MMMN" படக்குழுவினர் சமீபத்தில் அதற்கு மறுப்பு தெரிவித்தனர். அதன்படி "மம்மூட்டி கடவுள் பக்தி உள்ளவர் என்பதால் தற்பொழுது ரமலான் நோம்பு கடைபிடித்து வருகிறார். இதனால், படப்பிடிப்பில் இருந்து அவருக்கு சிறிது நாள் விடுப்பு வழங்கி இருக்கிறோம். கண்டிப்பாக, அவர் திரும்பி வருவார் எந்த பாதிப்பும் அவருக்கு இல்லை. நோம்பு முடிந்த பின் மம்மூட்டி மோகன்லாலுடன் இணையவுள்ளார்" என தெரிவித்து இருந்தனர்.
படக்குழுவினர் கூறியதை நம்பி ரசிகர்கள் அமைதியாக இருக்க, மீண்டும் ரசிகர்களை பயமுறுத்தும் விதமாக நடிகர் மோகன்லால் செய்த செயல் இருக்கிறது. தற்பொழுது, இருமுடி கட்டி, பம்பா கணபதி கோயிலில் பாதபடியாக மலையேறி சபரிமலை சென்ற நடிகர் மோகன்லால், ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்தார். எதற்காக திடீர் தரிசனம் என பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, தற்பொழுது அதிக பட்ஜெட்டில் தயாரான 'எம்புரான்' திரைப்படம் வரும் 27-ம் தேதி ரிலீசாவதை முன்னிட்டு மோகன்லால் சபரிமலையில் சுவாமி தரிசனம் நடத்தியதாக அவரது தரப்பில் இருந்து கூறப்பட்டது.
ஆனால் விஷயமே அங்கு இல்லை மறைமுகமாக, நடிகர் மம்முட்டி பெயரில் வழிபாடு நடத்தி இருக்கிறார் மோகன்லால். அதற்கு ஆதாரமான ரசீது தற்பொழுது வெளியாகி உள்ளது. அந்த ரசீதில் நடிகர் மம்முட்டியின் இயற்பெயரான 'முஹம்மது குட்டி' என்ற பெயர் இடம் பெற்றதுடன் சிறப்பு பூஜையாக "உஷ பூஜை வழிபாடு" எனவும் வழிபாட்டுக்கு ரூ.1500 கட்டணும் கட்டி இருப்பது குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், தனது மனைவி சுசித்திரா பெயரிலும் வழிபாடு நடத்தி இருக்கிறார் நடிகர் மோகன்லால். இதனை பார்த்த ரசிகர்கள் மம்முட்டிக்கு ஒன்றும் ஆகவில்லை என்றால் எதற்காக சிறப்பு வழிபாடு நடத்த வேண்டும்? என்னதான் அவருக்கு பிரச்னை என ரசிகர்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மம்முட்டி...? விளக்கம் கொடுத்துள்ள படக்குழுவினர்..!