×
 

ஓடிடியில் வெளியாகும் பிரம்மாண்ட அனிமேஷன் திரைப்படம்.. கோடிக்கணக்கில் செலவு செய்து வாங்கிய ஜியோ..! 

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த முஃபாசா: தி லயன் கிங் திரைப்படம் ஓடிடியில் வெளியாக இருக்கிறது.

காடுகளின் ராஜா யார் என்றால் இன்றும் பலரது வாயில் இருந்து வரும் பெயர் சிங்கம். காட்டில் எத்தனை மிருகங்கள் இருந்தாலும் அதற்கு எத்தனை தனித்துவமான பலம் இருந்தாலும் காட்டுக்கு ராஜா என்றால் அது சிங்கம் மட்டும் தான். அப்படி அனைவரும் வியந்து பார்த்த முதல் சிங்கம் சார்ந்த படம் என்றால் அது "நார்னியா". அப்படத்தில் ஒயிட் விச்சை அழைக்க நான்கு மனிதர்கள் வர வேண்டும் என்றும் அவர்கள் கையால் தான் 'விச்' சாக வேண்டும் என்பதும் எழுதப்பட்ட தரிசனம் என்பர்.

அப்படிப்பட்ட நார்னியாவில் உள்ள அனைத்து இயற்கை சார்ந்து உயிர்களும் ஒருவருக்கு கட்டுப்படும் என்றால் அது அஸ்லான் என்று சொல்லக்கூடிய சிங்கத்திற்கே. இப்படி அந்த படத்தில் போருக்கு பின் மனிதர்களாகிய பீட்டர், சூசன், எட்வர்ட்,லூசி ஆகிய நான்கு போரையும் ராஜா ராணிகளாக சிங்கம் அறிவித்து "நார்னியாவை ஒருமுறை ஆள்பவர்கள் தொடர்ந்து ஆழ்வார்கள்" என்று கூறும் டயலாக் எல்லாம் புல்லரித்து போகும்.

இப்படத்தை தொடர்ந்து மிகவும் அற்புதமாக சிங்கத்தை வைத்து உருவான படம் என்றால் தி லயன் கிங், 2019ஆம் ஆண்டின் சிறந்த லைவ்-ஆக்‌ஷன் திரைப்படமான 'தி லயன் கிங்' உலகம் முழுவதும் பிளாக்பஸ்டர் வெற்றியைத் தந்தது. இப்படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட பதிப்பில் அர்ஜுன் தாஸ் - முஃபாசாவாகவும், அசோக் செல்வன் -  டாக்காவாகவும், ரோபோ சங்கர் - பும்பா, சிங்கம்புலி-டிமோனாகவும், தங்கள் குரல்களை பதிவு செய்தனர்.

இதையும் படிங்க: விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி.. இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்..!

இதனை தொடர்ந்து, அடுத்ததாக இயக்குனர் பேரி ஜென்கின்ஸ் இயக்கியுள்ள முஃபாசா: தி லயன் கிங், இந்தியாவில் 2024 டிசம்பர் 20ஆம் தேதி  தமிழ், ஆங்கிலம், இந்தி, மற்றும் தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியானது. அந்த ஊர் மதிப்பின் படி சுமார் 200 மில்லியன் டாலர் செலவில் உருவான இந்த படம் உலகம் முழுவதும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. முதல் பாகத்தில் அரசனாக இருந்த  முஃபாசாவின் கதையாக இப்படம் பார்க்கப்பட்டது. 

இப்படம் எப்பொழுது ஓடிடியில் வெளியிடுவார்கள் என ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், விரைவில் இப்படம் ஓடிடியில் வெளியாகும் என்ற தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் முஃபாசா தி லயன் கிங் திரைப்படம் வருகின்ற மார்ச் 26ம் தேதி அன்று தமிழ், ஆங்கியம், ஹிந்தி, தெலுங்கு என 4 மொழிகளில் வெளியாக இருக்கிறது. குறிப்பாக இப்படத்தை பெரிய தொகை கொடுத்து ஹாட் ஸ்டார் ஓடிடி தளம் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.  


 

இதையும் படிங்க: தயவு செஞ்சி என்னை வாழ விடுங்க... கண்ணீர் விட்டு கதறும் பிரபல நடிகை..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share