×
 

சல்மான் கானை சீண்டிய இளைஞர் அதிரடி கைது...! போலீசுக்கே ஷாக் கொடுத்த வெடிகுண்டு வாலிபர்..!

சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை கைது செய்துள்ளனர் காவல் துறையினர்.    

கடந்த 1998 ஆம் ஆண்டு, ராஜஸ்தானில் படப்பிடிப்புக்கு சென்ற சல்மான் கான், மான்களை வேட்டையாடியதாக கூறப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். பின் இந்த வழக்கில் சிறப்பு ஜாமீன் பெற்று வெளியே வந்த சல்மான்கான் இனி எந்த சட்ட பிரச்சனையும் வராது என நினைத்தார். ஆனால் ஒரு மானை சுட்டு இன்று வரை அவஸ்தை படுகிறார். ஏனெனில் பிஷ்னோய் சமூகத்தை சேர்ந்த மக்களுக்கு அவர் கொன்ற கருங்காட்டு மான்' மிகவும் புனிதமானது என கூறப்படுகிறது. 

குறிப்பாக பிஷ்னோய் மக்களின் குருவான 16-வது நூற்றாண்டில் வாழ்ந்த ஜம்புகேஸ்வரரின் மறு வடிவமாக அந்த அரியவகை மான்கள் கருதப்பட்டுகிறது. ஆதலால் அந்த சமூகத்தை சேர்ந்த லாரன்ஸ் பிஷ்னோய் என்பவர், இந்த பிரச்சனையை சுமூகமாக முடிக்க நினைத்தால் சல்மான்கான் உடனே ராஜஸ்தானுக்குச் சென்று 'கருங்காட்டு மானைக் கொன்றதற்காக' மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையெனில் அவர் கொல்லப்படுவார் என பகிரங்க மிரட்டல் விடுத்து இருந்தார். இதற்கு ஏற்றார் போல் நீதிமன்றமும் சல்மான் கான் வேட்டை வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

இதையும் படிங்க: வெடிகுண்டு மிரட்டலால் பதறிப்போன சல்மான் கான்..! படத்தில் பறக்க விடுபவரை வீட்டில் பறக்க விடுவோம் என சவால்..!

முன்னதாக மும்பையில் உள்ள சல்மான் கானின் கேலக்ஸி அபார்ட்மெண்டிற்கு வெளியே அடையாளம் தெரியாத இரண்டு பைக் ஓட்டுநர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதனால் பதறிப்போன சல்மான் கான் மும்பை காவல் நிலையத்தில் புகார் அளிக்க, தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக அவருக்கு Y+ பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, அவருக்கு 11 காவலர்கள் மற்றும் கமாண்டோக்கள் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு அளித்து வருகின்றனர். மேலும், அவரது வீட்டின் பால்கனியின் கண்ணாடி கூட குண்டு துளைக்காததாக மாற்றப்பட்டது.

இந்த நிலையில், இன்று சல்மான் கானுக்கு அறியப்படாத நபர் ஒருவரிடமிருந்து மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது. அதன்படி, மும்பை போக்குவரத்து போலீஸ் உதவி எண்ணின் வாட்ஸ்அப் செயலிக்கு அனுப்பப்பட்ட குறுஞ்செய்தியில், "தனது குடும்பத்துடன் மும்பை பாந்திராவில் உள்ள கேலக்ஸி அபார்ட்மெண்டில் வசித்து வரும் நடிகர் சல்மான்கானை அவரது வீட்டில் வைத்து கொலை செய்ய உள்ளதாகவும் அவர் செல்லும் காரை பாம் வைத்து வெடிக்க வைப்போம் எனவும் மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனை அடுத்து போலீசார் இந்த குறுஞ்செய்தியை அனுப்பியது யார் என சைபர் க்ரைம் உதவியுடன் ஆராய்ந்து அந்த நபரை கைது செய்துள்ளனர். 

அந்த வகையில், சல்மான்கானை கொலை செய்யப்போவதாக காவலர்களுக்கு செய்தி அனுப்பிய நபர் குஜராத் மாநிலத்தின் வதோதரா மாவட்டத்திலுள்ள வகோதியா கிராமத்தைச் சேர்ந்த 26 வயதான மயங்க் பாண்டியா என்பதை கண்டிருந்த மும்பை காவல் துறையினர் அவரைக் கைது செய்ய வகோதியா கிராமத்திற்குச் புறப்பட்டு சென்றனர்.

அங்கு சென்று பார்த்ததில் மயங்க் பாண்டியா மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதும் தெரிய வந்தது. இதனை அடுத்து, அவரை கைது செய்த போலீசார் உண்மையிலேயே அவர் மனநலம் பாதிக்கப்பட்டவரா அல்லது வேறு யாருடைய தூண்டலின் பேரில் இந்த பதிவை பரப்பினரா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: சிக்கந்தர் பட தோல்விக்கு சல்மான் கான் தான் காரணம்...! முருகதாஸ் அல்ல... பிரபல பத்திரிகையாளர் பேட்டி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share