×
 

தன்னை பற்றி அவதூறு பேசிய பிரபலம்..! பாலிவுட் பாடகருக்கு ஏ.ஆர். ரகுமான் பதிலடி..! 

தன்னை குறித்து பொது வெளியில் பேசிய பாடகருக்கு பதிலடி கொடுத்துள்ளார் ஏ.ஆர். ரகுமான்.

ஏ.ஆர்.ரகுமானின் ஆரம்ப வாழ்க்கை மிகவும் மோசமானதாக இருந்தது. குடும்பத்தில் வருமானம் இல்லாத காலக்கட்டத்தில் தன் தந்தையின் இசைக்கருவிகளை வாடகைக்கு கொடுத்து வருமானம் ஈட்டி வந்தார். அப்பொழுது கிடைத்த சொற்ப வருமானத்தை வைத்து பியானோ, ஹார்மோனியம் மற்றும் கிதார் முதலிய இசைக்கருவிகளை வாசிக்க கற்று கொண்டார்.

அதன்பின் தன்ராஜ் மாஸ்டரிடம் முறைப்படி இசை கற்றுக் கொண்டார். தனது 11வது வயதில் 'இளையராஜா' இசைக்குழுவில் கீபோர்டு வாசிப்பதற்காக சேர்ந்து, பின்னர் எம். எஸ். விஸ்வநாதன், ரமேஷ் நாயுடு, ஜாகீர் உசேன் மற்றும் குன்னக்குடி வைத்தியநாதன் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களிடம் பணியாற்றி தன்னுடைய திறமையை வளர்த்து கொண்ட ஏ.ஆர்.ரஹ்மான், முறையாக டிரினிட்டி காலேஜ் ஆப் மியூசிக் கல்லூரியில் கிளாசிக்கல் மியூசிக்கில் பட்டம் பெற்றார்.

இதையும் படிங்க: "என் பாடல் என் உரிமை"..! குட் பேட் அக்லி படத்திற்கு செக் வைத்த இளையராஜா..!

இதனை அடுத்து, 1992ம் ஆண்டு தனது வீட்டிலேயே "மியூசிக் ரெக்கார்டிங் தியேட்டர்" அமைத்த ஏ.ஆர்.ரஹ்மான், சினிமாவில் இசைப்பயணத்தை தொடங்க காரணமாக இருந்தவர் இயக்குநர் மணிரத்தினம். இவரது இயக்கத்தில் வெளிவந்த 'ரோஜா' திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான ஏ.ஆர்.ரஹ்மானின் இசை மக்களுக்கு பிடித்து போக அதன்பின், இந்தி, தமிழ், ஆங்கிலம் என பல மொழி திரைப்படங்களுக்கு இசையமைத்து "இசைப்புயல்" என்ற பட்டத்தை மக்களிடம் இருந்து பெற்றார்.

அதன்பின், இவரது உழைப்புக்கு பலனாக, ஆஸ்கார் விருது, கோல்டன் குளோப் விருது, பாஃப்டா விருது, தேசியத் திரைப்பட விருது போன்ற பல புகழ் பெற்ற விருதுகளைப் பெற்றார். மேலும் "ஸ்லம் டாக் மில்லியனியர்" என்ற ஆங்கிலத் திரைப்படத்திற்கு இசையமைத்தமைக்காக ஆஸ்கார் விருதும், 2008 ஆம் ஆண்டுக்கான கோல்டன் குளோப் விருதும், பாஃப்டா விருதும் பெற்றார். அதுமட்டுமல்லாமல் இந்த இரண்டு விருதுகளைப் பெற்ற முதலாவது இந்தியர் என்ற பெருமையையும் தட்டி சென்றவர் ஏ.ஆர்.ரஹ்மான். இதனை தொடர்ந்து,  2010-ஆம் ஆண்டில் இந்திய அரசின் "பத்ம பூசண் விருது" இவருக்கு அளிக்கப்பட்டது. 

இப்படி இருக்க, சமீபத்தில் பாலிவுட் பாடகர் அபிஜித் பட்டாச்சார்யா அளித்த பேட்டியில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை தான் அதிகம் பயன்படுத்துவதாகவும் அதனால் பாரம்பரிய இசை கலைஞர்கள் வேலை இழந்து வருகிறார்கள் என்றும் அவர் மீது குற்றம் சாட்டி கூறியிருந்தார். இதனை பார்த்து கடுப்பான ஏ.ஆர்.ரஹ்மான், அவருக்கு தகுந்த பதிலை அளித்துள்ளார்.

அதில், "அபிஜித் பட்டாச்சார்யாவை நான் பெரிதும் மதிக்கிறேன். தற்பொழுது அவர் கூறியிருப்பதும் அவரது தனிப்பட்ட கருத்து என்றே நினைக்கிறேன். இன்று துபாய்க்கு சென்று விசாரித்து பாருங்கள் அங்கு 60 இசைக்கலைஞர்கள் கொண்ட ஒரு இசை குழுவை உருவாக்கியுள்ளேன். அதிலுள்ள அனைவருக்கும் மாதந்தோறும் சம்பளம் கொடுத்து வருகிறேன். அதுமட்டுமல்லாமல் அவர்களுக்கு மருத்துவக் காப்பீடு வசதி செய்து கொடுத்துள்ளேன். 

மேலும், மணிரத்தினம் இயக்கத்தில் நான் இசை அமைத்த 'பொன்னியின் செல்வன்', 'சாவ்வா' முதலிய படங்களில் 200 முதல் 300 இசைக்கலைஞர்கள் வரை பணியாற்றியுள்ளனர். சில நேரங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் 100க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் என்னுடன்  இணைந்து பணியாற்றுவார்கள்.

அது பாடலின் தேவையை பொறுத்தே அமையும். இதுபற்றி நான் எந்தவொரு போட்டோவும் வெளியிட்டதில்லை என்பதால், இதுபற்றி பலருக்கு தெரியவில்லை. நான் எந்தளவுக்கு லைவ் இசைக்கலைஞர்களை பயன்படுத்துகிறேன் என்று, இதுவரை நான் பணியாற்றிய படங்களின் தயாரிப்பாளர்களிடம் கேட்டு பாருங்கள் என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க: இளையராஜாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்த இயக்குநர்கள்.. தமிழ் மண்ணுக்கு பெருமை சேர்த்து விட்டதாக புகழாரம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share