×
 

நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டாரெல்லாம் கிடையாது.. ரஜினி மட்டும் தான் சூப்பர் ஸ்டார்.. குஷ்பூ காட்டம்..!

நயன்தாராவின் பட்டம் குறித்து அதிர்ச்சி தகவலை வெளியிட்டு இருக்கிறார் நடிகை குஷ்பூ.

ஷாருக்கானின் ஜவான் படத்திற்கு பிறகு பான் இந்திய நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாரா, தற்பொழுது கன்னடத்தில் யஷ் நடித்து வரும் 'டாக்ஸிக்' என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இது ஒருபுறம் இருக்க நயன்தாரா, மாதவன், சித்தார்த் நடிப்பில் உருவாகி இருக்கும் "டாஸ்க்" திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 4ம் தேதி ஓடிடியில் நேரடியாக ஒளிபரப்பாக இருக்கிறது. 

இப்படி அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருக்கும் நயன்தாரா, ஏற்கனவே ஆர்.ஜே.பாலாஜியுடன் இணைந்து நடித்து அனைவராலும் கொண்டாடப்பட்ட "மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாவது பாகத்தில்" நடிக்க இருக்கிறார். இந்த நிலையில் நயன்தாராவின் ஃப்ரொடக்ஷனான, ரவுடி பிக்சர்ஸ், மற்றும் சுந்தர்.சி.யின் அவ்னி சினி மேக்ஸ் மற்றும் ஐசரி கணேஷின் வேல்ஸ் இண்டர்நேஷனல் ஆகிய மூன்று நிறுவனங்களும் இணைந்து, ரூ.200 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் "மூக்குத்தி அம்மன்-2"யை படமாக்க திட்டமிட்டுள்ளனர். 

இதையும் படிங்க: சூர்யாவை பாலோ செய்யும் நயன்தாரா... முதலில் அஜித் இப்போ சூர்யா... ஓடிடியிலும் போட்டியா...!

இதனை உறுதி படுத்தும் வகையில், நேற்று சென்னையில் மிக பிரம்மாண்டமாக இப்படத்தின் பூஜைகள் நடைபெற்றது. இந்த படத்திற்காக, காண்பவர்களை பிரமிக்க வைக்கும் அளவிற்கு உண்மையான கோயில் போன்ற பெரிய கோயில் செட் அமைக்கப்பட்டுள்ளது. படம் எடுப்பதற்கு முன்பாகவே தனது மகன்களுடன் ஒரு மாதகாலமாக விரதம் எடுத்து வரும் நயன்தாரா, பயபக்தியின் உச்சத்துக்கே சென்று  இப்படப்பிடிப்புக்கான பூஜைக்கு சிவப்பு நிற புடவையில் வந்து அம்மனாகவே காட்சியளித்தார். பின் படத்திற்கான பூஜைகள் நல்ல படியாக நிறைவு பெற்றது.

இது ஒருபக்கம் இருக்க, நடிகை நயன்தாரா இனி தன்னை யாரும் "லேடி சூப்பர் ஸ்டார்" என அழைக்க வேண்டாம் என லெட்டர் பேடு மூலமாக மக்களுக்கு தகவலை கொடுத்தார். இதனை பலர் ஏற்றுக்கொண்டாலும், சிலர், முதலில் உங்களுக்கு யார் அப்படி ஒரு பட்டம் கொடுத்தார்கள், இதனை நீங்களாகவே உங்கள் படத்தில் வைத்து கொண்ட பட்டம் என கிண்டல் கேலி செய்து வருகின்றனர் . 

இந்த நிலையில், மூக்குத்தி அம்மன்-2கான பூஜை முடிந்ததை தொடர்ந்து, படப்பிடிப்புகள் ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. இதனை காண வந்த நடிகை குஷ்பூ விடம் நயன்தாரா சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "நயன்தாரா எடுத்த முடிவு மிகவும் சரியானது என்றும் பட்டம் கொடுக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை, எங்கள் காலத்தில் யாருக்கும் பட்டம் கொடுத்து நாங்கள்  பார்த்ததும் இல்லை.

இன்று வரை சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் மட்டும் தான். மற்ற யாருக்கும் அந்த  பட்டம் கொடுக்காமல் அவரவர் பெயரை வைத்து அழைத்தால் நன்றாக இருக்கும்" இது என்னுடைய கருத்து என்று கூறியுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் "உங்களுக்கு தெரிகிறது பாவம் அவர்களுக்கு தெரியவில்லையே" என மீண்டும் நயன்தாராவை பேச தொடங்கியுள்ளனர்.     

இதையும் படிங்க: 'மூக்குத்தி அம்மன்' ஆக ஜொலிக்கும் திவ்யதர்ஷினி.. நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய போட்டோ சூட்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share